புதுப்பேட்டை பாணியில்.. மாப்பிள்ளையை ஓவர்டேக் செய்து.. தாலி கட்ட முயன்ற இளைஞர்! சென்னையில் திக் திக்
சென்னை: சினிமா படப் பாணியில் கடைசி நேரத்தில் மணமகளுக்குத் தாலி கட்ட இளைஞர் ஒருவர் முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நடிகர் தனுஷ் நடித்திருந்த புதுப்பேட்டைப் படத்தைப் பார்த்து இருப்பீர்கள். அதில் தனுஷ் நண்பரின் சகோதரிக்குத் திருமணம் நடக்க இருக்கும்.
அதற்குச் சிறப்பு விருந்தினராக தனுஷை அழைத்துச் சென்று இருப்பார்கள். அப்போது தாலியை எடுத்துக் கொடுக்க வேண்டிய தனுஷ் அப்படியே தாலியைக் கட்டிவிடுவார்,

பரபரப்பு
இதைப் பார்த்தும் அங்கிருந்தவர்கள் அப்படியே ஷாக் ஆகிவிடுவார்கள். அதுபோன்ற ஒரு சம்பவம் தான் இப்போது சென்னையில் அரங்கேறி உள்ளது. தாலி கட்டும் போது கடைசி நேரத்தில், மணமகன் கையில் இருந்த தாலியைத் தட்டிவிட்டு, இளைஞர் ஒருவர் மணப்பெண்ணுக்குத் தாலி கட்ட முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருமணம்
வடசென்னை ஐ.ஓ.சி நெடுஞ்செழியன் நகர்ப் பகுதியில் வசித்துவரும் ரேவதி என்பவருக்கும் தண்டையார்பேட்டை நேதாஜி நகர்ப் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கும் நேதாஜி நகரில் அமைந்துள்ள முருகன் கோவிலில் இன்று காலை திருமணம் நடைபெற இருந்தது. இன்று காலை 6.30 மணி அளவில் முகூர்த்த நேரத்தில் இருவருக்கும் திருமணம் நடைபெற இருந்தது.

தட்டிவிட்டான்
கோவிலில் மந்திரங்கள் ஓத, அனைத்து சம்பிரதாயங்களும் நடந்து முடிந்தன. காலை நேரம் என்பதால் கோயிலில் சற்று குறைவான ஆட்களே இருந்தனர். அப்போது புரோகிதர் தாலி எடுத்துக் கொடுக்க அதை மாப்பிள்ளை மணிகண்டன் கட்ட இருந்தார். அப்போது திடீரென யாரும் எதிர்பார்க்காத வகையில், அங்கிருந்த இளைஞர், மாப்பிள்ளை கையிலிருந்த தாலியைத் தட்டிவிட்டுள்ளான்.

தர்ம அடி
மேலும், மணமகளுக்கு அந்த நபர் தாலி கட்ட முயன்றதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதைக் கவனித்த மணமகளின் சகோதரர், அந்த இளைஞரைப் பிடித்து தர்ம அடி கொடுத்தார். தாலி கட்ட முயன்ற அந்த நபர் சதீஷ் என்பது தெரிய வந்தது. விசாரித்துப் பார்த்ததில் அவர் மணமகளைக் காதலித்து வந்ததாகக் கூறுகிறார். இருப்பினும், மணமகள் இது தொடர்பாக எதுவும் கூறவில்லை.

விசாரணை
திருமணத்திற்கு வந்திருந்த உறவினர்கள் அனைவரும் தாலி கட்ட முயன்ற சதீஷை வெளுத்து வாங்கினர். பின்னர் அவரை போலீசாரிடமும் ஒப்படைத்தனர். திருமணத்தின் போது, திடீரென மணமகளுக்குத் தாலி கட்ட முயன்ற சதீஷிடம் போலீசார் இப்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர், புதுப்பேட்டைப் படப் பாணியில் கடைசி நேரத்தில் மணப்பெண்ணுக்கு இளைஞர் தாலி கட்ட முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
சென்னை மெரினாவிற்கு வரும் ‘ரோப் கார்'.. இனி வானில் பறந்து கொண்டே பீச்சை ரசிக்கலாம்.. குட்நியூஸ் -
விஜய் அதிரடி உத்தரவு.. சென்னை அடையாளம் தெரியாத அளவுக்கு மாறப்போகுது.. 3வது மாஸ்டர் பிளான்! -
சென்னை வாடகைதாரர்கள் கவனத்திற்கு! 2026 புதிய வாடகை சட்டத்தில் மாற போகும் அந்த 5 முக்கிய விதிகள் என்ன -
பொதுப்பணித்துறை டெண்டர்களில்.. இனி முறைகேடு நடக்காது! தமிழ்நாடு அரசு எடுத்த அதிரடி மாற்றம்! -
சென்னை அம்பத்தூரில் பரபரப்பு.. 2 சிறுமிகள் கடத்தப்பட்ட வழக்கில் வாலிபர்கள் இருவர் அதிரடி கைது -
அதிகரிக்கும் பாலியல் வன்கொடுமை! கொஞ்சம் கூட பொறுப்பே இல்லையே! லதா ரஜினிகாந்த் வேதனை! -
மூக்கில் ரத்தம், டிரஸ் இல்ல.. ஹனிமூன் சென்ற இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்! என்ன நடந்தது -
சென்னை டாஸ்மாக் கடையில் ‘ஏ.ஐ.’ மேஜிக்! குப்பையாகும் பாட்டில்களை கொடுத்தால் கொட்டும் சில்லறை! -
எழும்பூர் டாஸ்மாக் கடையில் பாட்டிலுக்கு 10 ரூபாய் தரும் இயந்திரம்.. எப்படி வேலை செய்கிறது? -
4 கோடியை ஏப்பம் விட்ட ஆபீசர்ஸ்! தூத்துக்குடி துறைமுகத்தில் ஷாக்! இறந்த ஊழியர்களின் பென்சனில் மோசடி! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா?












Click it and Unblock the Notifications