ஆஹா சூப்பர் நியூஸ் சொன்ன வானிலை மையம்.. அக்.25-க்கு பிறகு வடகிழக்கு பருவமழை?
சென்னை: அக்டோபர் 25-ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக ஆங்காங்கே விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு நிலையும் ஏற்படுகிறது. இந்த நிலையில் தற்போது வடகிழக்கு பருவமழை சீசன் ஆகும்.
தமிழகத்திற்கு பலனளிக்கக் கூடிய இந்த மழை எப்போது தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. தமிழகத்தின் விவசாய தேவையையும் தண்ணீர் தேவையையும் கோடை காலத்தில் சமாளிக்க இந்த மழை உதவுகிறது.

வடகிழக்கு பருவமழை
இந்த நிலையில் அக்டோபர் 25-ஆம் தேதிக்கு பிறகு வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சென்னை வானிலை மையம் கூறுகையில் வரும் 25-ஆம் தேதிக்கு பிறகு வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தொடங்க சாதகமான சூழல் நிலவுகிறது.

தாமதம்
தென்னிந்திய பகுதிகளில் அக்டோபர் 22-ஆம் தேதி வரை மேற்கு திசை காற்று வீசக் கூடிய சூழல் உள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் 16-இல் தொடங்கிய நிலையில் தற்போது தாமதமாகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொய்த்த மழை
கடந்த சில ஆண்டுகளாக தமிழகத்தில் பருவமழை பொய்த்து போனது. இந்த ஆண்டாவது பருவமழை கைக் கொடுக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். தற்போது ஏரிகளில் நீர் மட்டம் அதிகமாக இருப்பதாக பொதுப் பணித் துறை கூறுகிறது.

பூண்டி ஏரி
புழல், சோழவரம், பூண்டி உள்ளிட்ட சென்னைக்கு குடிநீர் அனுப்பும் ஏரிகள் நிரம்பியுள்ளன. இதனால் இன்னும் 4 மாதங்களுக்கு சென்னையில் தண்ணீர் பஞ்சம் இருக்காது என கூறப்படுகிறது. இந்த ஆண்டு பருவமழை பெய்தால் மட்டுமே கோடையில் நமக்கு வசந்தகாலமாக இருக்கும் என்பதே நிதர்சனம்.
-
Vetri Payanam: கன்னியாகுமரி டூ சென்னை வரை பெண்களுக்கு இலவச பஸ் பயணம்! அறிவிக்கிறாரா முதல்வர் விஜய்? -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
2020-ல் ரஜினி தொடங்கவிருந்த கட்சியில் இணையுமாறு கேட்டார்! நான் மறுத்துவிட்டேன்! அண்ணாமலை பரபரப்பு -
தவெக தலைமையில் தமிழ்நாடு சமூக நீதி முற்போக்கு கூட்டணி.. திமுகவுக்கு பிரவீன் சக்ரவர்த்தி செக்மேட் -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு












Click it and Unblock the Notifications