"சட்டகங்களுக்குள் பொருந்தாத தலைவன்".. பெரியாரை கொண்டாடும் வடஇந்தியர்கள்.. பாராட்டும் கேரளா, கர்நாடகா
சென்னை: பகுத்தறிவு பகவலன் பெரியாரின் பிறந்தநாளை தமிழ்நாடு மட்டுமின்றி வடஇந்தியாவில் பலரும், கேரளா, கர்நாடகா போன்ற அண்டை மாநிலங்களில் பலரும் கொண்டாடி வருகிறார்கள். பெரியாரை நினைவு கூர்ந்து ட்வீட்களை செய்து வருகிறார்கள்.
Recommended Video
பெரியார் பிறந்த நாளான செப்டம்பர் 17ம் தேதி தமிழ்நாட்டில் சமூக நீதி நாளாக கொண்டாடப்படுகிறது. 1879ம் ஆண்டு செப்டம்பர் 17ம் தேதி பிறந்த பெரியார் தமிழ்நாட்டில் மட்டுமின்றி மொத்த தென்னிந்தியாவிற்கும் ஜாதி கட்டுமானத்தில் இருந்து விடுதலை ஏற்படுத்திக்கொடுத்து, திராவிட இனத்திற்கு புதிய அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தார். ஜாதி கட்டுப்பாடுகளில் கட்டுண்டு கிடந்த மக்களுக்கு சிறகுகளை கொடுத்தவர். பெண் விடுதலை, மறுமணம், ஜாதி ஒழிப்பு, சம உரிமை, சுயமரியாதை போன்ற விஷயங்களை வட மாநிலங்கள் இப்போதுதான் பேச தொடங்கி உள்ளது.
ஆனால் தமிழ்நாட்டில் பெரியாரோ அதை 80 வருடங்களுக்கு முன்பே பேசிவிட்டார். 8,200 நாட்கள் சுற்றுப் பயணம், 10, 700 சுற்றுப்பயணம் என்று 8 லட்சத்திற்கும் அதிகமான கிமீக்கள் பயணித்து தமிழ்நாடு மக்களுக்கு சுயமரியாதை எண்ணத்தை விதைத்துவிட்டு சென்றவர் பெரியார். மொத்த நாடும் ஒரு பக்கம் செல்லும் போது தமிழ்நாடு மட்டும் எப்போது எதிர் திசையில் செல்ல பெரியார் போட்டுக்கொடுத்த அந்த விதைதான் காரணம்.

வடஇந்தியா
கல்வி அறிவும், சுயமரியாதை எண்ணமும், பகுத்தறிவுத் தன்மையும் தாழ்ந்து கிடக்கும் மக்களை உயர்த்தும் என்று உரைத்த "சட்டகங்களுக்குள் பொருந்தாத தலைவன்" பெரியாரை தமிழ்நாடு மட்டுமன்றி இன்று தேசமே அவரின் பிறந்த நாளை முன்னிட்டு கொண்டாடி வருகிறது. ஆம் தமிழ்நாட்டில் இன்று அரசு சார்பாக சமூக நீதி நாள் கொண்டாடப்படுகிறது. அதே சமயம் வடஇந்தியாவை சேர்ந்த பலர் ட்விட்டர் பயனாளிகள் பெரியாரின் பிறந்தநாளை நினைவு கூர்ந்து ட்விட்டரில் அவரை பற்றிய கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள். பெரியார் ஏன் தமிழ்நாட்டிற்கு மட்டுமின்றி மொத்த இந்தியாவிற்கும் தேவை என்பதை காரணங்களோடு அடுக்கி ட்வீட் செய்து வருகிறார்கள்.

பெரியார் ட்வீட்
பெரியாரின் ஆலய நுழைவு போராட்டம், சமூக நீதி போராட்டம், அம்பேத்காருக்கு முன்பாகவே தலித் மக்களின் சம உரிமைக்காக குரல் கொடுத்தது, அம்பேத்கார் மீது பெரியார் வைத்திருந்த அன்பு, இரண்டு தலைவர்களும் மக்கள் விடுதலைக்காக நாடு முழுக்க குரல் கொடுத்த விதத்தை பாராட்டி இந்த வடஇந்திய நபர் ட்வீட் செய்துள்ளார். இரண்டு தலைவர்களுக்கும் இருக்கும் ஒற்றுமைகள், அவர்களின் போராட்டங்களை இவர் நினைவு கூர்ந்து உள்ளார்.

கடவுள்
மனிதர்கள் சந்திக்கும் இழிநிலைக்கு கடவுள்தான் காரணம் என்றால் கடவுளையும் அழித்திடு, மதம்தான் காரணம் என்றால் அதை அழித்திடு. மனுதர்மம், கீதா, அல்லது வேறு புராணங்கள் காரணம் என்றால் அதை சுட்டு பொசுக்கிவிடு. கோவில், குளம், விழாக்கள்தான் உன் இழிநிலைக்கு காரணம் என்றால் அதை புறக்கணித்துவிடு.. இதுதான் நமது அரசியல்.. இதை வெளியே வந்து வெளிப்படையாக கூவு என்று பெரியார் கூறிய வார்த்தைகளை நினைவு கூர்ந்து மும்பையை சேர்ந்த இந்த பெண் ட்வீட் செய்துள்ளார்.

பெரியார் நினைவு
பிரபல வடஇந்திய பத்திரிகையாளரும், தலித் போராளியுமான சுமித் சவுகான் பெரியாரின் புகைப்படத்தை பகிர்ந்து, அவருக்கு வாழ்த்து தெரிவித்து இருக்கிறார். சமூக நீதி நாள் என்று தமிழ்நாடு அரசு அறிவித்ததை அடுத்து வரையப்பட்ட ஓவியம் ஒன்றை பகிர்ந்து இந்த ட்வீட்டை அவர் செய்துள்ளார்.

கன்னட நடிகர்
பிரபல கன்னட நடிகரும் சமீபத்தில் பிராமண கொள்கைகளுக்கு எதிராக பேசி வழக்கில் சிக்கியவருமான நடிகர் சேட்டன் குமார் பெரியார் குறித்து நீண்ட பதிவை வெளியிட்டு உள்ளார். இந்தியாவின் மிகசிறந்த தலைவர்களில் ஒருவர் பிறந்த தினம் இன்று. அவர் விதைத்த சமூக நீதி அரசியல்தான் தமிழ்நாட்டில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தியது. இப்போது வரை அந்த அரசியல் மாற்றம் நீண்டு கொண்டு இருக்கிறது... உங்களை நாங்களும் பின்பற்றுவோம் தந்தையே! என்றது குறிப்பிட்டுள்ளார். இதேபோல் கர்நாடகாவை சேர்ந்த பல்வேறு அமைப்புகளை பெரியாரை நினைவு கூர்ந்து ட்வீட்டைகளை வெளியிட்டு வருகிறது.

திலீப் மண்டல்
சமூக நீதி போராளியான திலீப் மண்டல், இந்தியாவின் மிக சிறந்த சமூக நீதி போராளியும், சமூக சீர்த்திருத்த வாதியுமான பெரியாருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள், அவரின் நினைவை பகிர்வோம் என்று குறிப்பிட்டு வாழ்த்தி இருக்கிறார்.

கேரளா
கேரளாவிலும் பலர் பெரியாரை நினைவு கூர்ந்து உள்ளானார். வைக்கம் வீரர் என்று அழைக்கப்படும் பெரியார் அங்கு ஆலய நுழைவு போராட்டத்தை நடத்தினார். இதற்காக அங்கு சிலையும் வைக்கப்பட்டு உள்ளது. 1924ல் நடந்த பெரியாரின் இந்த ஆலய நுழைவு போராட்டத்தை நினைவு கூர்ந்து பல மலையாளிகள் பெரியாரை பாராட்டி ட்வீட் செய்து வருகிறார்கள்.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications