எலே நீ ஒரு ஆர்டிஸ்டுனு நிருபிச்சுடலே.. ரயிலை கட்டிலாக மாற்றிய நார்த் மக்கள்! எப்படி யோசிச்சாங்க?
சென்னை: இந்திய ரயில்வேயில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் ஆயிரக்கணக்கை தாண்டி வரும் நிலையில் போதிய ரயில்கள் இயக்கப்படாததும் கூடுதலாக முன்பதிவு இல்லா பெட்டிகள் இணைக்கப்படாததும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ரயில் பயணத்தில் லக்கேஜ் போர்ஷனை கட்டிலாக மாற்றியுள்ளன வடமாநில ரயில் பயணிகள்.!
இந்தியாவின் மிக பெரிய பயணிகள் சேவை நிறுவனமான இந்திய ரயில்வே லட்சக்கணக்கான பணியாளர்களோடு இயங்கி வருகிறது. தினமும் நூற்றுக்கணக்கான ரயில்கள் லட்சக்கணக்கான பயணிகளை சுமந்து இந்தியாவின் பல்வேறு மூலைகளுக்கும் பயணிக்கிறது.

சராசரியாக ஆண்டுக்கு சுமார் 500 கோடி பேர் இந்திய ரயில்வேயின் கீழ் இயங்கும் ரயில்களில் பயணிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குறைந்த கட்டணம் பாதுகாப்பான பயணம் என்ற தாரக மந்திரத்தோடு இயங்கும் இந்திய ரயில்வே பயணிகளின் வரப் பிரசாதமாக திகழ்கிறது
அருகருகே இருக்கும் நகரங்களை இணைக்கும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ், பாசஞ்சர் ரயில்களை தவிர தொலைதூரங்களுக்கு பயணிகளை ஏற்றி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்கள், மாநிலம் விட்டு மாநிலம் பயணம் செய்யும் அதிவிரைவு வண்டிகள் என தினமும் ஆயிரக்கணக்கான ரயில்கள் இந்தியாவில் இயக்கப்படுகிறது. அது மட்டும் இல்லாமல் தேஜஸ் எக்ஸ்பிரஸ், வந்தே பாரத் ரயில் உள்ளிட்டவையும் கூடுதலாக இந்தியாவில் இந்தியன் ரயில்வே சார்பில் சேவையை வழங்கி வருகிறது.
அதே நேரத்தில் மக்கள் தொகை பெருக்கம் ரயில்களில் பயணிகள் கூட்டம் அதிகரிப்பு ஆகியவை இந்திய ரயில்வேக்கு மிகப்பெரிய சிக்கலை உருவாக்கி இருக்கிறது. 100 பேர் மட்டுமே பயணம் செய்யக்கூடிய முன்பதிவில்லா பெட்டிகளில் ஆயிரம் பேர் பயணம் செய்யும் நிலை கூட உருவாகி இருக்கிறது. இதன் காரணமாக பலர் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் ஏறி பயணம் வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கடந்த காலங்களில் இரண்டாம் வகுப்பு பெட்டிகளிலும் ஸ்லீப்பர் பெட்டிகளிலும் மட்டுமே முன்பதிவு இல்லாத பயணிகள் டிக்கெட் எடுக்காத பயணிகள் பயணம் செய்த நிலையில் தற்போது ஏசி கோச்சிகளிலும் முன்பதிவு இல்லாத பயணிகளின் ஆக்கிரமிப்பு அதிகரித்து இருக்கிறது.
மாநிலம் விட்டு மாநிலம் செல்லும் ரயில்கள் மற்றும் தொலைதூர ரயில்களில் பயணிகள், ஏசி கோச்சுகளை ஆக்கிரமிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பிட்ட ரயில் நிலையங்களில் பயணிகளை ஏறவிடாமலும் இறங்கவிடாமலும் ரயில் பெட்டிகளில் உள்புறமாக தாழ்ப்பாள் இட்டுக் கொள்வது ஏற்கனவே பயணிக்கும் பயணிகளை கும்பலாக சேர்ந்து கொண்டு மிரட்டுவது உள்ளிட்ட செயல்களும் அரங்கேறி வருகின்றன. மாநிலம் விட்டு மாநிலம் என்றில்லாமல் அனைத்து பகுதிகளிலும் இந்த பிரச்சனையானது உருவெடுத்து இருக்கிறது.
இந்த நிலையில் ரயில் பயணத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. வடமாநிலத்தில் ரயில் பயணம் செய்யும் பயணிகள் எப்போதும் மூட்டை முடிச்சுகளோடு பயணம் செய்வது வழக்கம். இந்த நிலையில் ரயிலையே கட்டில் போல மாற்றி இருக்கிறார்கள்.
வழக்கமாக முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் கீழே இருக்கையும் மேலே லக்கேஜ்களை வைப்பதற்காக தனியாக ஒரு போர்சனும் அமைக்கப்படும். இந்த நிலையில் லக்கேஜ் போர்ஸன்களை கயிறு கொண்டு கட்டி அதனையே கட்டிலாக மாற்றி பயணத்திருக்கின்றனர் சில இளைஞர்கள். தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications