நடு ஏரி.. ஆகாய தாமரையில் மொத்தமாக சிக்கிய சையேந்தர்.. முகத்துல அப்படி ஒரு சிரிப்பு.. சபாஷ் போலீஸ்
சிட்லபாக்கம் ஏரியில் சிக்கி கொண்ட வடமாநில இளைஞர் மீட்கப்பட்டுள்ளார்
சென்னை: நடு ஆத்துல.. ஆகாய தாமரையில் சிக்கி கொண்ட சையேந்தர் ரொம்பவே பயந்துவிட்டார். ஆனால் நம் தீயணைப்பு வீரர்கள் அவரை பத்திரமாக கரை சேர்த்து விட்டனர்.
சென்னையின் முக்கியமான நீர்நிலைகளில் ஒன்று குரோம்பேட்டை, அஸ்தினாபுரம் அருகிலுள்ள சிட்லப்பாக்கம் ஏரி. எப்பவுமே இதில் தண்ணீர் மட்டம் அதிகமாகவே இருக்கும்.
இந்நிலையில், இந்த ஏரியில் இன்று காலை 29 வயதுடைய சையேந்தர் என்பவர் சிக்கி கொண்டார். அவர் வட மாநிலம் பாட்னாவை சேர்ந்தவர். ஆனால் மனநிலை பாதிக்கப்பட்டவர்.

சிக்கினார்
எதற்காக இந்த ஏரியில் இறங்கினார் என்று தெரியவில்லை, எப்போது இறங்கினார் என்றும் தெரியவில்லை.. ஏரியில் நடு ஆழத்தில் இருந்தார். அங்குள்ள ஆகாய தாமரையில் அவரது உடல் சிக்கி கொண்டுவிட்டதால், செய்வதறியாமல் தவித்தார்.

தீயணைப்புதுறை
மனநிலை பாதிக்கப்பட்ட சையேந்தரால் பொதுமக்களை கூப்பிடவும் முடியவில்லை. கத்தி கூப்பாடும் போடவில்லை. ஆனால் இதை கவனித்த அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக தாம்பரம் குரோம்பேட்டை தீயணைப்புத்துறை வீரர்களுக்கு தகவல் சொன்னார்கள்.

புது ஆடை
உடனடியாக அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் இடுப்பில் கயிறுகளை கட்டிக்கொண்டு நடு ஆழத்திற்கு சென்று, இளைஞரை மீட்டுவிட்டனர். பின்னர், அவரை மீட்டு கரைக்கு கொண்டு வந்து குளிக்க வைத்து புது டிரஸ்களை அணிவித்து, சிட்லபாக்கம் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

சிரிப்பு
தகவல் தந்ததும், உடனடியாக வந்த தீயணைப்பு துறை வீரர்கள், இளைஞரை காப்பாற்றியதுடன், அவரை குளிக்க வைத்து புது டிரஸ் அணிவித்ததை அந்த பகுதி மக்கள் நிறைய பாராட்டினார்கள். புது டிரஸ் போட்டதும் சையேந்தர் முகத்தில் அப்படி ஒரு சிரிப்பு!












Click it and Unblock the Notifications