நாளை முதல் வரும் 30-ஆம் தேதி வரை சென்னையில் மழைக்கு வாய்ப்பு- நார்வே சொன்ன நல்ல செய்தி!
சென்னை: நாளை முதல் வரும் அக்டோபர் 30-ஆம் தேதி வரை சென்னையில் மழைக்கு வாய்ப்புள்ளதாக நார்வே வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலம் தொடங்கவுள்ளது. அது 25-ஆம் தேதிக்கு பிறகு தொடங்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. ஆனால் முன்னதாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை இன்று கொட்டியது.

சென்னையில் கனமழை
இந்த நிலையில் சென்னையில் கனமழை தொடரும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து நார்வே வானிலை மையம் கூறுகையில் இன்று இரவு 12 மணி முதல் நாளை கால 6 மணி வரை நல்ல மழை பெய்யும்.

கனமழை
அதுபோல் அக்டோபர் 24-ஆம் தேதி காலை 6 மணி முதல் 12 மணி வரை லேசான மழை பெய்யும். பின்னர் நண்பகல் 12 மணி முதல் மாலை 6 மணி வரை கனமழை பெய்யும். ஞாயிற்றுக்கிழமை காலை 5 மணி முதல் 11 மணி வரை கனமழை பெய்யும். அது போல் மாலை 5 மணிக்கு லேசான மழை பெய்யும்.

லேசானது முதல் கனமழை
வரும் திங்கள்கிழமை காலை லேசான மழை பெய்யும். பின்னர் பகல் 11 மணி முதல் மாலை 5 மணி வரை கனமழை பெய்யும். பின்னர் மழை படிப்படியாக குறையும். இதையடுத்து செவ்வாய்க்கிழமையும் லேசான மழைக்கு வாய்ப்புண்டு. புகன்கிழமை லேசான முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

30-ஆம் தேதி வரை பெய்யும்
வியாழக்கிழமை 29ஆம் தேதியும் இதே நிலைதான். லேசானது முதல் அதிக கனமழை வரை பெய்யும். வெள்ளிக்கிழமையும் சனிக்கிழமையும் லேசான மழை பெய்யும் என நார்வே வானிலை மையம் தெரிவித்துள்ளது.நாளை முதல் ஒரு வாரத்திற்கு சென்னையில் மழை என்பதால் மக்கள் குடையுடன் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
-
கார் விற்பனையில் மாஸ் காட்டும் கொங்கு மண்டலம்.. கோவை, பொள்ளாச்சி, திருப்பூர்காரங்க வேற ரகம் பாஸ்..! -
சென்னையில் இரவு நேரங்களில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவது ஏன்? அதிகாரிகளுக்கு மட்டுமே தெரிந்த உண்மை -
வரலாறு படைக்கும் Zoho.. டேட்டா சென்டர்களுக்கு உதவ புது சர்வர் உருவாக்கிய சென்னை நிறுவனம்! -
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட் -
சென்னை ஃபுல்லா மாறப் போகுது.. போக்குவரத்து நெரிசலுக்கு பெரும் தீர்வு! ஐடிஎஸ்-ஐ கையிலெடுத்த ஆபீசர்ஸ் -
சென்னையை சுத்து போட்ட மழை மேகங்கள்.. நள்ளிரவு முழுக்க 15 மாவட்டங்களில் கொட்டும் மழை -
அடுத்த 1 மணி நேரம் உஷார்! கோவை டூ கன்னியாகுமரி.. 12 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை! -
நடிகர் ரவி மோகனுக்கு பின்னடைவு! ஆர்த்திக்கு ஜீவனாம்சம் வழங்கும் விவகாரத்தில் உயர்நீதிமன்றம் அதிரடி! -
டமால் டுமீல் தான்.. 4 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகுது கனமழை! மார்க் செய்த வானிலை ஆய்வு மையம்! -
சென்னையில் முதல்வர் விஜய் தொகுதியான பெரம்பூரில் அடிக்கடி மின் வெட்டு.. பொங்கி எழுந்த மக்கள் -
திமுக ஆட்சியில் போடப்பட்ட டெண்டர் ரத்து? ரூ.2,100 கோடி ECR திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்ட விஜய் -
அடித்து பெய்யப்போகும் கனமழை! கோவை டூ கன்னியாகுமரி.. 7 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications