பெரியாழ்வார் மண்.. “பல ராமசாமிகள் சமூக நீதிக்காக போராடி இருக்கிறார்கள்” - தமிழிசை பரபர பேச்சு!
சென்னை : பல ராமசாமிகள் சமூக நீதிக்காக போராடி இருக்கிறார்கள் என்றும் ஒரு ராமசாமிக்கு மட்டும் அதற்கான முழுப்பெருமையும் கிடையாது என்றும் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பேசியுள்ளார்.
சர்வதேச சகோதரத்துவ தினத்தையொட்டி சென்னை ஸ்ரீ ராமகிருஷ்ணா மடத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார் தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்.
அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை, நம் மதம் சகிப்புத் தன்மையை சொல்லிக் கொடுத்திருக்கிறது, விநாயகர் அழுக்கில் இருந்து எடுக்கப்பட்டார் என்று சொல்வதையும், பெரும்பான்மை மக்கள் வணங்கும் ஒரு விழாவிற்கு வாழ்த்து சொல்லவில்லை என்பதையும் சகித்துக் கொண்டிருக்கிறோம் எனப் பேசியுள்ளார் தமிழிசை.

ஒரு ராமசாமிக்கு மட்டும் இல்லை
தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் சர்வதேச சகோதரத்துவ தினத்தையொட்டி சென்னை ஸ்ரீ ராமகிருஷ்ணா மடத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சௌந்தரராஜன், "ராமானுஜர் காலத்தில் இருந்தே சமூக நீதி பேசப்பட்டு வருகிறது. என்னைப் பொறுத்தமட்டில், ஒரு ராமசாமிக்கு மட்டும் அதற்கான முழுப்பெருமையும் கிடையாது. பல ராமசாமிகள் சமூக நீதிக்காக போராடி இருக்கிறார்கள்.

தேசியம்
தேசிய கருத்துக்கள் எங்கெல்லாம் பரப்பப்படுகிறதோ அங்கெல்லாம் இந்த ராமசாமி இருப்பார். ஏனென்றால் ராமசாமி என்றாலே ஏதோ தேசியத்திற்கு சம்பந்தமில்லை என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள். இந்த ராமசாமிகளால் தான் தேசியம் பாதுகாக்கப்பட்டு கொண்டிருக்கிறது.

ஸ்டாலின் வாழ்த்து சொல்லாதது பற்றி
நம் மதம் மதித்தல், சகிப்புத் தன்மையை சொல்லிக் கொடுத்திருக்கிறது. அதன்படி சகித்துக் கொண்டிருக்கிறோம். அதோடு மற்ற மத கருத்துக்களை மதித்துக் கொண்டிருக்கிறோம். விநாயகர் அழுக்கில் இருந்து எடுக்கப்பட்டார் என்று சொல்வதையும் நாம் சகித்துக் கொண்டிருக்கிறோம். பெரும்பான்மையாக நாம் வணங்கும் ஒரு விழாவிற்கு வாழ்த்து சொல்லவில்லை என்றாலும் அதையும் நாம் சகித்துக் கொண்டிருக்கிறோம்.

பெரியாழ்வார் மண்
நமது குரலை உயர்த்திக் கொண்டே தான் இருக்க வேண்டும். இல்லையென்றால் பெரியாழ்வார் மண், பெரியார் மண்ணாக மட்டுமே முன்னிறுத்தப்பட்டு விடும். இன்று பேசப்படும் சமூக நீதி எல்லாம் ஆடம்பரத்திற்காகவும் விளம்பரத்திற்காகவும் தான். ஆனால் நாம் பேசும் சமூக நீதி ஆன்மாவிற்காக பேசப்பட்டது என்பதை விவேகானந்தர் சொல்கிறார்.

சமச்சீர் கல்வியா இது?
தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் கிடைக்கும் கல்வி அரசாங்க பள்ளிகளில் முழுவதாக கிடைக்கிறதா?அனைத்து அரசியல்வாதிகளின் பிள்ளைகளும் அரசாங்க பள்ளிகளில் தான் படிக்கிறார்களா? சமச்சீர் கல்வி என்று பேசிக் கொண்டிருக்கிறோம் ஆனால் சமச்சீர் கல்வி என்று தமிழ்நாட்டில் இருக்கிறதா ? நீட் தேர்வை மாணவர்கள் முழுவதுமாக எதிர் கொள்ள முடிகிறதா?

சும்மா ஒண்ணும் வரல
தேசிய கல்விக் கொள்கை என்பது இரண்டு, மூன்று லட்சம் ஆசிரியர்களிடம் கருத்துக் கேட்டு, பல லட்சம் மக்களிடம் கருத்துக் கேட்டு கொண்டுவரப்பட்டது. சும்மா ஒன்றும் கொண்டுவரவில்லை. எனவே உண்மையைத் தெரிந்துகொண்டு, புதிய கல்விக் கொள்கையை நாம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். தேசியம் என்ற வார்த்தை வந்ததால் தேசியக் கல்விக் கொள்கையை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம் எனக் கூறுவது சரியல்ல" எனத் தெரிவித்தார்.
-
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
“அண்ணாமலைக்கும், அவர் பின்னால் போன ஆட்டு மந்தைக்கும் பாஜகவின் கொள்கை புரியவில்லை” - வேலூர் இப்ராஹிம் -
ரஜினிகாந்த் உடன் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் திடீர் மீட்டிங்.. போயஸ் கார்டனில் ஆலோசித்தது என்ன? -
பிரபலங்களால் பாஜகவுக்கு ப்ராப்ளம்.. தவெகவுக்கு தாவும் 2 நடிகைகள்! பக்கா பிளான் போட்ட செங்கோட்டையன்! -
Waiting Is Over.. பாஜகவுக்கு டாடா சொன்ன அண்ணாமலை! புதிய கட்சி எப்போது உதயம்? லீக்கான தகவல்! -
தமாகாவை கரைத்த பாஜக.. என்டிஏ கூட்டணியில் இருந்து வெளியேறியது ஏன்? ஜிகே வாசன் முடிவில் பின்னணி -
3வது இடம்.. 2026ல் மண்ணைக் கவ்விய அதிமுக! தோல்விக்கு என்ன காரணம்? உங்க கருத்தை சொல்லுங்க மக்களே! -
காங்கிரசுக்கு நீங்க ஏன் உயிர் கொடுக்குறீங்க விஜய்? கடுப்பான பாஜக.. கோபத்தின் உச்சிக்கே போன அமித் ஷா -
லம்பாக அமவுண்டை அமுக்கிய தலைகள்.. ராகுலுக்குப் போன மெசேஜ்! அடுத்தடுத்த ஆக்ஷனுக்கு தயாராகும் காங்.,! -
இனிமே நம்மதான்..பக்காவாய் காய் நகர்த்தும் பாஜக! டெல்லியில் எகிறும் செல்வாக்கு! மோடி போட்ட பலே ப்ளான் -
கைவிட்ட பாஜக.. மம்தாவையும் பகைத்து கொண்ட திரிணாமுல் தலைவர்கள்.. இடியாப்ப சிக்கல்! -
புதுப்பொலிவு பெறும் புதுச்சேரி.. அள்ளி கொடுத்த மத்திய அரசு! எல்.முருகன் சொன்ன குட் நியூஸ்!












Click it and Unblock the Notifications