#Exclusive அமித்ஷா எதிர்க்குமளவிற்கு உதயநிதி வளர்ந்திருக்கிறார்- சு.ப வீர பாண்டியன் பரபர பேட்டி
சென்னை: உதயநிதிக்கு அமித்ஷா பதில் சொல்ல வேண்டியது வந்து இருக்கிறது என்றால் உதயநிதி சரியாகத்தான் நடந்து கொண்டு இருக்கிறார் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது என்று சுப வீர பாண்டியன் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் சனாதனம் குறித்த பேச்சு தேசிய அளவில் பேசுபொருளாகியுள்ளது. உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்பட பாஜகவினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். ஆனால், தான் பேசியது சரிதான் என்றும் அமைச்சர் உதயநிதி தனது பேச்சுக்கு விளக்கமளித்து பாஜக மற்றும் இந்து அமைப்புகளுக்குபதிலடி கொடுத்துள்ளார். இந்த நிலையில், தான் ஒன் இந்தியா அரசியல் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்த திராவிட இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சு.ப வீரபாண்டியன் உதயநிதி பேசியது தொடர்பாக பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அதன் விவரங்களை பார்க்கலாம்
கேள்வி: அமைச்சர் உதயநிதியின் சனாதனம் குறித்த பேச்சு பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. திராவிட இயக்கம் எதற்காக தொடர்ச்சியாக ஒரு மதத்தை குறிப்பிட்டு விமர்சித்துக் கொண்டே இருக்க வேண்டும்?
சு.ப வீர பாண்டியன் பதில்: அது மதமா? சனதான தர்மம் என்றுதான் சொன்னார்கள். எனக்கு 2 கேள்விகள் ஏன் சனாதனத்தை எதிர்த்து பேசுகிறார்கள்? ஏன் உதயநிதியை எதிர்த்து பேசுகிறார்கள்? ஏன் உதயநிதி க்கு மட்டும் அந்த உரிமை இல்லையா? ஒருவேளை அவர் அமைச்சர் என்பதால் சொல்கிறார்களோ என நினைக்கிறேன். அமைச்சர் பேசக்கூடாது என்பதற்கு என்ன காரணம். ஏனெனில் அமைச்சர் அரசமைப்பு ஏற்றுக் கொண்டு பதவியேறுக் கொண்டு இருக்கிறார்.
அதை எதிர்த்து பேசக்கூடாது என்கிறார்கள். சனாதானத்தை எதிர்த்துபேசுவது எப்படி அரசமைப்பு சட்டத்தை எதிர்த்து பேசுவது ஆகும். எங்காவது அரசமைப்பு சட்டத்தில் எங்காய்வது சனாதனம் பற்றி குறிப்பு இருக்கிறதா? எங்கேயுமே சனாதனம் பற்றி குறிப்பிடவில்லை. இவர்களே சனாதனம் என்பதை மதம் என்று சொல்கிறார்களா? சனாதன தர்மா என்கிறார்கள். சனாதன தர்மா என்பது இந்து மதத்திற்கானது என்று தேவைப்படும் போது சொல்கிறார்கள்.
ஆனால் அவர்கள் சொல்வது ஆதியும் அந்தமும் அற்ற மதம். கூகுளில் கூட சனாதன தர்மா என்றால் eternal religion என்று போட்டு இருக்கிறார்கள். சனாதனத்தை ஏன் இந்து மதத்தில் கொண்டு வந்து சேர்க்கிறீர்கள். சனாதன தர்மம் பற்றி சைவத்தில் வைணவத்தில் எங்காயவது சொல்லப்பட்டு இருக்கிறதா? சனாதன தர்மத்திற்கு நான் மத்திய இந்துக் கல்லூரி 1916ல் வெளியிட்டு இருக்கும் புத்தகம் என்ன சொல்லியிருக்கிறது என்றால் சுற்றி சுற்றி சனாதனம் என்பதை வர்ணாசிரமத்தில் கொண்டு வந்து நிறுத்துகிறது.

கேள்வி: சனாதனத்தை ஏன் ஒழிக்க வேண்டும்? ஒழிக்க வெண்டிய தேவை ஏன் வந்தது ?
பதில்; சனாதானம் கண்டிப்பாக ஒழிக்கபட வேண்டியதுதான். ஏனெனில் சனாதானம் என்பது வர்ணாசிரமத்தில் வந்து நிற்கிறது. வர்ணாசிரமம் என்பது பிறப்பின் அடிப்படையில் பிரிக்கப்பட்ட வர்ணங்களுக்கு உரிய நீதியை சொல்கிறது. அவர் சொல்கிற தர்மம் எல்லாமே அதர்மம் தான். பிறப்பின் அடிப்படையிலான் நீதிம். மனு நீதி எல்லாவற்றையும் சேர்த்துதான் சனாதனம் வருகிறது.
மனு நீதியில் எல்லோருக்கும் ஒரு சட்டம் இருக்கிறதா? இன்னைக்கு யுனிபார்ம் சிவில் கோடு வேண்டும் என்று கேட்கிறவர்கள் யூனிபார்ம் கிரிமினல் கோட் கூட வைத்துக் கொள்ளவில்லை. இன்றக்கு இந்தியாவில் கிரிமினல் கோடு பொதுவானது. கொலை செய்தது எந்த ஜாதி, மதம் என்று பார்க்கவில்லை. ஆனால் மனு நீதியில் ஒருவன் கொலை செய்தால் பார்ப்பனராக இருந்தால் இந்த தண்டனை..
சத்தியரியனாக இருந்தால் இந்த தண்டனை..என்று அதைக் கூட பிரித்து பார்த்து வர்ணத்திற்கு ஏற்ப சொன்னதுதான் வர்ணாசிரம தர்மம். எனவே பிறப்புக்கு எல்லா உயிர்க்கும் என்பதை ஏற்கிற நம்புகிற எவர் ஒருவரும் பிறப்பின் அடிப்படையில் ஏற்றத்தாழ்வுகள் கற்பிக்கப்படுவதும் பிறப்பின் அடிப்படையில் தண்டனையில் கூட வழங்கப்படுவது என்பது அநீதி என்பதால் அதை எதிர்க்க வேண்டும். அதை விட சரியான சொல் அதை ஒழிக்க வேண்டும்.
கேள்வி: இந்து என்பது ஆங்கிலேயர்கள் கொடுத்த பெயர்தான். அதற்கு முன்னாடி சனாதனம் என்றுதான் இருந்தது. எனவே சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்பது இந்துக்களை ஒழிக்கனும் என்பது அவர்கள் தரப்பு வாதமாக இருக்கிறதே?

பதில்: இந்துக்களை ஒழிக்க வேண்டும் என்று நாங்கள் சொல்ல வேண்டும். இந்து என்பது ஒரு மதமே கிடையாது. சனாதனம் என்பது வைதீக மதம். இந்து மதத்திற்கு முன்னால் இருந்தது வைதீக மதம் வைதீகம் என்பது வேதம் என்கிற சொல்லில் வருகிறது. வேதங்களை ஏற்றுக்கொள்கிற... வேதங்களை மறுக்கிற...இதுதான் பழைய பாகுபாடு. இப்போது சைவம், வைணவம் எல்லாம் வேதத்தை ஏற்கிறது. ஆனால் பவுத்தம் சமணம் போன்றவை வேதத்தை ஏற்கவில்லை.
வைதீக அவதீக மதங்கள் என்று பெயர் இந்த வேத மதம் என்பது வைதீக மதத்தில் இருந்து ..வேத மதத்தில் இருந்து வைதீகம் வருகிறது. அதுபோல அவைதீகம் வருகிறது. சனாதனம் தான் இந்து மதம் என்பது ஆங்கிலேயர் கொடுத்தது என்பதை சங்கராச்சாரியாரே ஏற்றுக்கொள்கிறார். ஆனால் சனாதானத்தை தான் இந்து மதம் என்று மாற்றினார்கள் என்று எந்த இடத்திலாவது இருக்கிறதா?" என்றார்.
மேலும், உள்துறை அமைச்சர் அமித்ஷா, உதயநிதி குறித்து விமர்சனம் வைத்தது பற்றிய கேள்விக்கு பதிலளித்த சு.ப வீரபாண்டியன் எந்த விதத்திலும் அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிராக அவர் இயங்கவில்லை. எனக்கு ஒரு விதத்தில் மகிழ்ச்சிதான். அமித்ஷா உதயநிதிக்கு பதில் சொல்ல வேண்டிய வந்து இருக்கிறது என்றால் உதயநிதி சரியாகத்தான் நடந்து கொண்டு இருக்கிறார் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது" என்றார். அவரது பேட்டியின் முழு வடிவத்தை ஒன் இந்தியா அரசியல் யூடியூப் சேனலில் பார்க்கலாம்.












Click it and Unblock the Notifications