சகிக்க முடியாது! முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்! பெரியார் பல்கலை-க்கு ஆதி திராவிடர் ஆணையம் நோட்டீஸ்
சென்னை: சேலம் பெரியார் பல்கலைக்கழக சர்ச்சைக்குரிய வினா விவகாரத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர், பதிவாளர் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் சமீபத்தில் நடைபெற்ற பருவ தேர்வு வினாத்தாளில் கேட்கப்பட்டு இருந்த கேள்வி தமிழ்நாடு முழுக்க சர்ச்சையை ஏற்படுத்தியது.
முதுகலை வரலாறு 2ஆம் ஆண்டு தேர்வு வினாத்தாளில், நான்கு சாதிப் பெயர்களைக் குறிப்பிட்டு, தமிழ்நாட்டில் எது தாழ்த்தப்பட்ட சாதி எனக் கேள்வி இடம்பெற்றுள்ளது.

கண்டனம்
இந்த கேள்வி சாதி ரீதியான பாகுபாட்டை ஊக்குவிக்கும் வகையில் உள்ளதாகக் கூறி பலரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, ராமதாஸ் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் இதற்குக் கண்டனம் தெரிவித்தனர். இந்தச் சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்த பெரியார் பல்கலைக்கழகம், இந்த விவகாரத்தில் உரிய விராசணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

பல்கலைக்கழக முதல்வர்
இந்த விவகாரம் தொடர்பாக பல்கலைக்கழக முதல்வர் விளக்கம் அளிக்கையில், "வெளிக் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் உள்ள பேராசிரியர்கள் மூலம் உருவாக்கப்பட்ட வினாத்தாள் ஆகும் இது. வினாத்தாள் கசியக் கூடாது என்பதால் அதைப் படிக்கும் வழக்கம் இல்லை. இதனால் தவறு நேர்ந்துவிட்டது. வினாத்தாள் குறித்துக் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

உயர்கல்வி துறை
அதேபோல தமிழ்நாடு உயர்கல்வி துறையும் இதில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி உள்ளது. இது தொடர்பாக உயர்கல்வி துறை முதன்மை செயலாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இந்த பிரச்சினை தொடர்பாகக் குழு அமைக்கப்பட்டு உரிய விசாரணை நடத்தப்படும் என்றும் விசாரணை அறிக்கையின் அடிப்படையில் தவறு செய்தவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டு உள்ளது.

உள்நோக்கம் இல்லை
இந்த விவகாரத்தில் பல்கலைக்கழகத்திற்கு எந்த விதமான உள்நோக்கமோ, நேரடியான தொடர்போ இல்லை என்று பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் முனைவர் கோபியும் விளக்கம் அளித்துள்ளார். வெளி கல்லூரி பேராசிரியர்களால் இந்த வினாத்தாள் தயாரிக்கப்பட்டு உள்ள நிலையில், இதற்கும் பல்கலைக்கழகத்திற்கும் எந்த விதமான உள்நோக்கமோ, நேரடியான தொடர்போ இல்லை என்று குறிப்பிட்டார்.

தமிழ்நாடு ஆதிதிராவிடர் பழங்குடியினர் ஆணையம்
இந்தச் சூழலில் சர்ச்சைக்குரிய வினா விவகாரத்தில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் பழங்குடியினர் ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்துள்ளது. பல்கலைக்கழகம் போன்ற அமைப்புகளே சமூக வரம்பு மீறலில் ஈடுபடுவதைச் சகித்துக் கொள்ள முடியாது என்றும் இதுபோன்ற செயல்களை வளர்க்க நினைக்கும் சக்திகளை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என்றும் கூறப்பட்டு உள்ளது.

நோட்டீஸ்
இந்த விவகாரத்தில் ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்றும் கேள்வி எழுப்பப்பட்டு உள்ளது. மேலும், இது தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர், பல்கலைக்கழக பதிவாளர், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் மற்றும் வரலாற்றுத் துறைத்தலைவர் ஆகியோருக்கு ஆதிதிராவிடர் பழங்குடியினர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications