சென்னையில் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொலை- 'ஆம்ஸ்ட்ராங் கொலை' நாகேந்திரனின் மாஜி சிஷ்யன்!
சென்னை: சென்னையை கதிகலக்கி வந்த பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜி இன்று போலீஸ் என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். ரவுடி காக்கா தோப்பு பாலாஜி மீது கொலை, கொலை முயற்சி உட்பட 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. சென்னை ஆர்கே நகர் இடைத்தேர்தலில் டிடிடி தினகரனுக்கு ஆதரவாக ரடிவுகளுடன் பிரசாரம் செய்தவர்தான் இந்த காக்கா தோப்பு பாலாஜி.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் ஏழுகிணறு பகுதியை மையமாகக் கொண்ட பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டவர் காக்கா தோப்பு பாலாஜி. புறா வளர்ப்பில் தொடக்கத்தில் ஈடுபட்ட பாலாஜி பின்னர் அடிதடி வழக்குகளில் சிக்கினார். இதனைத் தொடர்ந்து போலீசாரின் 'செல்லப் பிள்ளையாக' உருவெடுக்க, போலீசாருக்காக பிற ரவுடிகளிடம் மோதவும் தொடங்கியவர் காக்கா தோப்பு பாலாஜி. அந்த கால கட்டத்தில் வடசென்னையை கலக்கிய பிரபல ரவுடி நாகேந்திரனுக்காக 'அசைன்மெண்ட்டுகளை' செய்யத் தொடங்கினான் காக்கா தோப்பு பாலாஜி. இந்த நாகேந்திரனும் அவரது மகனும்தான் தற்போது தமிழக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலையில் சிக்கி இருக்கின்றனர்.

இப்படித்தான் விஸ்வரூபம் எடுத்த காக்கா தோப்பு பாலாஜி, 2017-ம் ஆண்டு சென்னை ஆர்கே நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக தமது ரவுடி பட்டாளத்துடன் வாக்கு சேகரிக்க சென்றார். அப்போது போலீசிலும் சிக்கிக் கொண்டு சிறைக்குள் அனுப்பி வைக்கப்பட்டார் பாலாஜி. அதுவும் வாக்குப் பதிவு நாளில் குழப்பத்தை ஏற்படுத்த ரவுடிகளுடன் பதுங்கி இருந்த போது துப்பாக்கி முனையில் போலீசார் கைது செய்யப்பட்டார் பாலாஜி.
பாலாஜி மீது கொலை, கொள்ளை முயற்சி உட்பட 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. வடசென்னையில் சுயம்பு ரவுடியாக உருவெடுத்த பாலாஜி, தடயமே இல்லாமல் கொலை செய்தவர்கள் பட்டியல் நீளும் என்கின்றன போலீஸ் வட்டாரங்கள். இந்த பின்னணி கொண்ட காக்கா தோப்பு பாலாஜி இன்று போலீசார் என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். இது தொடர்பான மேலதிக விவரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே!












Click it and Unblock the Notifications