காங்கிரசை விடுங்க.. திமுகவிற்கு பிரஷரை ஏற்றும் இன்னொரு கட்சி.. இத்தனை இடம் கேட்கிறாங்களே.. போச்சு
சென்னை: திமுக கூட்டணியில் காங்கிரஸ் மட்டுமன்றி மற்ற கூட்டணி கட்சிகளும் அதிக இடங்களை கேட்க தொடங்கி உள்ளன. மதிமுக, விசிக என்று வரிசையாக கட்சிகள் அதிக இடங்களை கேட்க தொடங்கி உள்ளன.
2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்துள்ளன. இதில் முக்கிய அங்கமான மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (மதிமுக), இந்த முறை திமுகவிடம் 8 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது. மற்றபடி இந்த கூட்டணி பேச்சுவார்த்தைகள் சுமுகமாக செல்வதாகாவே திமுக, மதிமுக ஆகிய இரண்டு தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 2021 தேர்தலில் 6 இடங்களில் போட்டியிட்ட மதிமுக, இந்த முறை கட்சியின் வளர்ச்சியை முன்னிறுத்தி கூடுதல் இடங்களைக் கேட்டுள்ளது. திமுகவிற்கு இதனால் பிரஷர் அதிகரிக்க தொடங்கி உள்ளது.
மதிமுக கேட்பது என்ன? - தனிச் சின்னம்: கட்சியின் அடையாளம் முக்கியம்
மதிமுகவின் இந்தப் பேச்சுவார்த்தையில் மிக முக்கியமான அம்சம் 'தனிச் சின்னம்'. கடந்த தேர்தலில் திமுகவின் 'உதயசூரியன்' சின்னத்தில் போட்டியிட்ட மதிமுக, இந்த முறை தனது சொந்தச் சின்னத்தில் (தற்போது 'தீப்பெட்டி' அல்லது புதிய சின்னம்) போட்டியிட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது.
இது குறித்து அக்கட்சியின் முதன்மைச் செயலாளர் துரை வைகோ கூறுகையில், கட்சியின் தனித்துவத்தைத் தக்கவைக்கவும், தொண்டர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கவும் தனிச் சின்னத்தில் போட்டியிடுவதே சிறந்தது எனத் தெரிவித்துள்ளார்.
எதிர்பார்க்கப்படும் சமரசம்: 3 இடங்கள் மற்றும் தனிச் சின்னம்?
திமுக தரப்பிலிருந்து வரும் தகவல்களின்படி, உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டால் மட்டுமே கூடுதல் இடங்கள் தர முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், மதிமுக தனிச் சின்னத்தில் நிற்க விரும்புவதால், ஒரு சுமுகமான உடன்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது.
சாத்தியமான ஒப்பந்தம்: மதிமுகவின் தனிச் சின்னக் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு, அவர்களுக்கு 3 தொகுதிகளை ஒதுக்க திமுக முன்வரலாம் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
காரணம்: திமுக இந்த முறை 200-க்கும் மேற்பட்ட இடங்களில் நேரடியாகப் போட்டியிடத் திட்டமிட்டுள்ளதால், கூட்டணி கட்சிகளுக்கான இடங்களைக் குறைக்க வேண்டிய சூழலில் உள்ளது.
ராஜ்ய சபா: இன்னொரு பக்கம் திமுகவிடம் மதிமுக ராஜ்ய சபா சீட் கேட்கும் திட்டத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் திமுக அதை வழங்குவதற்கு வாய்ப்பே இல்லை என்று திமுக தரப்பு வட்டாரங்கள். தெரிவிக்கின்றன மற்றபடி இந்த கூட்டணி பேச்சுவார்த்தைகள் சுமுகமாக செல்வதாகாவே திமுக, மதிமுக ஆகிய இரண்டு தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் திமுக இந்த முறை 200-க்கும் மேற்பட்ட இடங்களில் நேரடியாகப் போட்டியிடத் திட்டமிட்டுள்ளதால் மதிமுகவிற்கு கேட்கற எண்ணிக்கையில் இடங்களை கொடுக்க முடியுமா அல்லது தனி சின்னத்தில் போட்டியிட அனுமதிக்க முடியுமா என்ற கேள்வி உள்ளது.
வைகோவின் 'எஃகு கோட்டை' முழக்கம்
மதுரையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, திமுக தலைமையிலான கூட்டணி ஒரு "எஃகு கோட்டை" என்றும், வரும் தேர்தலில் இந்தக் கூட்டணி மகத்தான வெற்றி பெறும் என்றும் மீண்டும் ஒருமுறை உறுதிபடத் தெரிவித்துள்ளார். சின்னம் மற்றும் தொகுதிகள் குறித்த பேச்சுவார்த்தைகள் சுமுகமாக முடியும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
-
Sengottaiyan: அதிமுக அவ்வளவு தான் முடிஞ்சுது.. செங்கோட்டையன் டைமிங் பன்ச் -
இரட்டை இலையைக் கடிக்கும் தவெக..நடையை கட்டும் நிர்வாகிகள்! அடுத்த காங்கிரஸா அதிமுக? 1977 ரிட்டர்ன்ஸ்? -
சைலண்ட்டா முடிந்த சாவி மேட்டர்! விழுப்புரம் சண்முகம் ஆதரவாளர்களை மொத்தமா தூக்கிய எடப்பாடி! ஏன் -
இது ட்ரெய்லர் தான்.. அதிமுகவுக்கு தவெக எழுதப்போகும் கிளைமாக்ஸ்.. அருண்ராஜ் அதிரடி -
இதுக்கு ஒரு எண்டே இல்லையா சாரே! எடப்பாடிக்கு மீண்டும் மீண்டும் தலைவலி! கட்சி தாவ தயாராகும் தலைகள்! -
சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்குது.. உங்களுடன் நிற்கும் கம்யூனிஸ்ட்டுகள் சொல்றாங்க.. விளாசிய எடப்பாடி! -
விஜய், உதயநிதி, அண்ணாமலை.. இளம் முகம் இல்லாமல் தடுமாறும் அதிமுக.. எடப்பாடிக்கு அடுத்து யார்? -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி!












Click it and Unblock the Notifications