நேற்று பெரியார் vs பிரபாகரன்.. இன்று பெரியார் vs அண்ணா.. சீமான் வெளியிட்ட திடீர் புகழார அறிக்கை!
சென்னை: தந்தை பெரியார் vs பிரபாகரன் என்று பேசி வந்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் தற்போது தந்தை பெரியாருக்கு எதிராக பேரறிஞர் அண்ணா என அறிக்கை வெளியிட்டுள்ளார். சீமான் இன்று வெளியிட்ட அறிக்கையில், பெரியாரை எதிர்த்து முதன் முதலாகத் தனி அரசியல் இயக்கம் கண்டு வென்ற பெருந்தகை.. பணம் கொடுத்து வாக்கைப் பறிக்கும் ஈனர்களிடம், தங்களின் சனநாயக உரிமையை அறியாமையால் ஏமாறும் மக்களைக் கண்டு 'தங்கத்தை யாராவது தவிட்டுக்கு விற்பார்களா? என்று நெஞ்சம் கொதித்த இலட்சியவாதி என பேரறிஞர் அண்ணாவுக்கு திடீரென புகழாரம் சூட்டி உள்ளார்.
இது தொடர்பாக சீமான் இன்று வெளியிட்ட அறிக்கை: பெரியாரை எதிர்த்து முதன் முதலாகத் தனி அரசியல் இயக்கம் கண்டு வென்ற பெருந்தகை..!

பணம் கொடுத்து வாக்கைப் பறிக்கும் ஈனர்களிடம், தங்களின் சனநாயக உரிமையை அறியாமையால் ஏமாறும் மக்களைக் கண்டு 'தங்கத்தை யாராவது தவிட்டுக்கு விற்பார்களா? என்று நெஞ்சம் கொதித்த இலட்சியவாதி..!
'மதுவை விற்று வரும் வருமானம் குஷ்டரோகியின் கையில் வெண்ணெய்க்கு ஈடானது, என்று கூறி மதுவிலக்கை தன் உயிருள்ளவரை விலக்க மறுத்த மக்கள் தலைவர்..!
நேர்மையையும், சுய ஒழுக்கத்தையும், கொள்கைப்பற்றுறுதியையும் இனம்கண்டு, 'தம்பி வா தலைமையேற்க வா' என்று தனக்கடுத்துத் தலைமை பொறுப்பேற்க நாவலர் நெடுஞ்செழியனை அழைத்த நேர்மையாளர்..!
தமிழ் இலக்கியமும், தமிழர் வரலாறும் அரசியல் மேடைகளிலும் அதிகம் பேசப்படக்கூடிய வழக்கத்தை உருவாக்கிய பெருமகன்..!
அவதூறு பரப்புரைகளும், அரசியல் பழிவாங்கலும் இல்லாது கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற கொள்கை முழக்கத்தை முன்வைத்து நாகரீக அரசியல் மேற்கொண்ட பண்பாளர்..!
யாரும் படிக்க வைக்காமல் தன்னுடைய முயற்சியால் இரண்டு முதுகலை பட்டம் பெற்ற பேரறிஞர் பெருந்தகை..!
தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் அறிஞர் அண்ணா அவர்களின் பெரும்புகழ் போற்றுவோம்! இவ்வாறு சீமான் தெரிவித்துள்ளார்.

சர்ச்சைகளில் சீமான்
தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா உள்ளிட்டோர் முன்வைத்த திராவிடம்தான் தமிழருக்கு எதிரானது என பேசிவந்தார் சீமான். பின்னர் தந்தை பெரியார்தான் தமிழருக்கு எதிரானவர்; தமிழ் சமூகத்தைச் சீரழித்தவர் என சீமான் பேச பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது. இதனையடுத்து தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன்தான் திராவிடம், பெரியாரை எதிர்க்க வேண்டும் என என்னிடம் சொன்னார் என்றார் சீமான். இதற்கும் தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழ நாடு கடந்த அரசாங்கம் ஆகியவை எதிர்ப்பும் கண்டனமும் தெரிவித்தன. இந்த நிலையில் திராவிடம், திமுகவை கடுமையாக எதிர்க்கும் சீமான், திராவிட இயக்க முன்னோடியும்- திராவிட கட்சிகளின் நிறுவனருமான பேரறிஞர் அண்ணாவை தந்தை பெரியாருக்கு எதிராக முன்னிறுத்தும் வகையில் அறிக்கை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications