விரைவில் அதிமுக பொதுக்குழு கூட்டம்.. அடுத்ததாக டிடிவி தினகரனுடன் சந்திப்பு.. ஓபிஎஸ் பரபர அறிவிப்பு
சென்னை: மாவட்ட நிர்வாகிகள் நியமனத்துக்கு பிறகு தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளேன். அதிமுக பொதுக்குழு கூட்டம் விரைவில் நடைபெற உள்ளது. டிடிவி தினகரனுடன் சந்திக்க உள்ளேன் என சென்னையில் ஓ பன்னீர் செல்வம் இன்று பகிரங்கமாக அறிவித்தார்.
அதிமுகவில் இரட்டை தலைமை விவகாரம் பூதாகரமாக வெடித்தது. இது அதிமுகவில் இணைந்து செயல்பட்ட ஒ பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிச்சாமி இடையே பிரிவை ஏற்படுத்தியது.
பொதுக்குழு பிரச்சனை உள்பட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக ஓ பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் நீதிமன்றங்களை மாறி மாறி நாடினர்.

ஓ பன்னீர் செல்வம் தனி அணி
தற்போதைய நிலவரப்படி எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக உள்ளார். ஓ பன்னீர் செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இது செல்லாது என ஓ பன்னீர் செல்வம் தரப்பு கூறி வரும் நிலையில் தனி அணியாக செயல்பட்டு வருகின்றனர். மாவட்ட வாரியாக நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர்.

நிர்வாகிகளுடன் ஓபிஎஸ் சந்திப்பு
இந்நிலையில் தான் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள வீட்டில் முன்னாள் முதல் அமைச்சர் ஓ பன்னீர் செல்வம் இன்று ஆதரவாளர்களை சந்தித்து பேசினார். தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்து வந்த நிர்வாகிகள், தொண்டர்களை ஓ பன்னீர் செல்வத்தை சந்தித்தனர். இந்த சந்திப்புக்கு பிறகு ஓ பன்னீர் செல்வம் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு ஓ பன்னீர் செல்வம் பதிலளித்தார்.

மாவட்ட செயலாளர் கூட்டம்
பத்திரிகையாளர் ஒருவர், ‛‛அதிமுகவில் அமைப்பு ரீதியாக புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்படுகிறதேன. ஒட்டு மொத்தமாக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வைக்கும் திட்டம் உள்ளதா'' என கேள்வி கேட்டார். இதற்கு ஓ பன்னீர் செல்வம், ‛‛அதிமுக சார்பில் கூடிய விரைவில் அனைத்து மாவட்ட கழக செயலாளர்கள் கூட்டம் நடத்தப்பட உள்ளது'' என பதிலளித்தார்.

பொதுக்குழு கூட்டம்
இதையடுத்து இன்னொருவர், ‛‛மாவட்ட செயலாளர்களுடன் பொதுக்குழு உறுப்பினர்கள் நியமனம் செய்துள்ளீர்கள். இதனால் பொதுக்குழு கூட்டம் நடத்தப்படுமா?'' என கேள்வி எழுப்பினர். இதற்கு, ஓ பன்னீர் செல்வம், ‛‛உறுதியாக மாவட்ட கழக செயலாளர்கள் கூட்டத்தைபோல் பொதுக்குழு கூட்டமும் நடக்கும்'' என்றார். அப்போது, ‛‛மாவட்டம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்வீர்களா?'' என்ற கேள்விக்கு ஓ பன்னீர் செல்வம், ‛‛அனைத்து நிர்வாகிகளும் அறிவித்த பிறகு அனைத்து மாவட்டங்களிலும் உறுதியாக சுற்றுப்பயணம் செய்ய உள்ளேன்'' என்றார்.

மோடி-அமித்ஷா சந்திப்பு விபரம்
இந்த வேளையில் பத்திரிகையாளர் ஒருவர், ‛‛தமிழகம் வந்த பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை சந்தித்து பேசினீர்கள். அரசியல் சூழலில் ஏதேனும் மாற்றம் வருமா?'' என வினவினார். இதற்கு ஓ பன்னீர் செல்வம், ‛‛பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்று வழியனுப்பி வைத்தோம். அதேபோல் தனியார் நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தோம். இதில் எந்தவித அரசியல் சூழல் பற்றியும் பேசவில்லை'' என்றார்.

டிடிவி தினகரனுடன் சந்திப்பு
மேலும் ‛‛வாய்ப்பு கிடைத்தால் ஓ பன்னீர் செல்வத்தை சந்திப்பேன் என அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். அவரை நீங்கள் சந்திப்பீர்களா?'' என்ற கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு ஓ பன்னீர் செல்வம், ‛‛இதுதொடர்பாக நான் ஏற்கனவே கூறி இருக்கிறேன். வாய்ப்பு கிடைத்தால் டிடிவி தினகரனை சந்திப்பேன்'' என கூறினார். இதையடுத்து, ‛‛கூட்டணி தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி கூறிய கருத்து பற்றி என்ன நினைக்கிறீர்கள்?'' என்ற கேள்விக்கு, ஓ பன்னீர் செல்வம் பதிலளித்தார். அப்போது அவர், ‛‛உள்ளே இருக்கும் உள்கருத்துகளை அவரிடம் தான் கேட்க வண்டும்'' என ஓ பன்னீர் செல்வம் கூறினார்.

டிடிவி தினகரன் கூறியது என்ன?
அதிமுகவில் ஒன்றாக இருந்த ஓ பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிச்சாமி, சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் தற்போது தனித்தனியே செயல்பட்டு வருகின்றனர். இதில் டிடிவி தினகரன், எடப்பாடி பழனிச்சாமி இடையே கடும் மோதல் போக்கு உள்ளது. சமீபத்தில் அதிமுக சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் பெரிய கூட்டணி அமைக்கப்படும் என எடப்பாடி பழனிச்சாமி கூறினார். இதில் டிடிவி தினகரன் கட்சிக்கு ஒரு சதவீதம் கூட வாய்ப்பு இல்லை என அவர் தெரிவித்தார். இதையடுத்து நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், எடப்பாடி பழனிச்சாமியுடன் கூட்டணி வைக்க கால் சதவீதம் கூட விரும்பவில்லை. வாய்ப்பு கிடைத்தால் ஓ பன்னீர் செல்வத்தை சந்திப்பேன் என தெரிவித்தார். இந்நிலையில் தான் ஓ பன்னீர் செல்வமும் வாய்ப்பு கிடைத்தால் டிடிவி தினகரனுடன் சந்திப்பேன் என கூறியுள்ளார்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications