குரு பெயர்ச்சிக்கு முன் சட்டசபையில் இடம் மாறிய ஓபிஎஸ்.. செந்தில் பாலாஜி நாற்காலி யாருக்கு?
சென்னை: சட்டசபையில் நாற்காலிகள் இடம்மாறியுள்ளன. முன் வரிசையில் இருந்த ஓ.பன்னீர் செல்வம் இரண்டாவது வரிசைக்கு சென்றுள்ளார். அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த நிலையில் செந்தில் பாலாஜியின் நாற்காலி வேறொரு அமைச்சருக்கு வழங்கப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜி பின் வரிசைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
குரு பெயர்ச்சி சிலரது வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். அரசியல், பொது வாழ்க்கையில் இருப்பவர்களுக்கு கிரகங்களின் இடப்பெயர்ச்சி அதிரடி மாற்றத்தை ஏற்படுத்தும். சட்டசபையில் நாற்காலி விவகாரம் மிகப்பெரிய பிரச்சினையாக இருந்தது. எதிர்கட்சி துணைத்தலைவர் நாற்காலியில் அமர்ந்திருந்த ஓ.பன்னீர் செல்வத்தை இடம் மாற்ற வேண்டும் அந்த நாற்காலியை ஆர்.பி உதயகுமாருக்கு தர வேண்டும் என்பது எடப்பாடி பழனிச்சாமியின் நீண்ட நாள் கோரிக்கை.

சபாநாயகர் அப்பாவு அதை பரிசீலிக்கவே இல்லை. யாருக்கு எங்கே நாற்காலி ஒதுக்க வேண்டும் என்பது என்னுடைய முடிவுக்கு உட்பட்டது என்று சொல்லி வந்தார் அப்பாவு. எடப்பாடி பழனிச்சாமியும் ஓ.பன்னீர் செல்வமும் சட்டசபையில் அருகருகே அமர்ந்திருந்தாலும் பேசாமலேயே அமர்ந்திருப்பார்கள். அது அனைவருக்குமே தர்ம சங்கடம்தான்.
இந்த சூழ்நிலையில்தான் சட்டசபையில் நேற்றைய தினம் எதிர்கட்சி துணைத்தலைவர் இருக்கை மாற்றம் தொடர்பாக சபாநாயகருக்கு கோரிக்கை வைத்தார் எடப்பாடி பழனிச்சாமி. அதை ஆதரித்து பேசிய முதல்வர் ஸ்டாலின் சபாநாயகர் பரிசீலனை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். உடனடியாக பரிசீலனை செய்வதாக கூறினார் சபாநாயகர் அப்பாவு.
இன்றைய தினம் சட்டசபையில் ஆர்.பி உதயகுமாருக்கு எதிர்கட்சி துணைத்தலைவர் நாற்காலி ஒதுக்கப்பட்டது. எடப்பாடி பழனிச்சாமியின் அருகில் அமர்ந்திருந்த ஓ.பன்னீர் செல்வத்திற்கு எடப்பாடி பழனிச்சாமிக்கு பின்னால் இரண்டாவது வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. 2வது வரிசையில் முன்னாள் சட்டசபைத் தலைவர் தனபாலுக்கு அருகில் இருக்கை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எதிர்கட்சி வரிசையில் 2வது வரிசையில் அமர்ந்திருந்த கே.பி. அன்பழகன் முன் வரிசைக்கு மாறியுள்ளார்.
அதே போல அமைச்சர் பதவியை செந்தில் பாலாஜி ராஜினாமா செய்ததை அடுத்து சட்டசபையில் செந்தில் பாலாஜியின் நாற்காலியும் வேறொரு அமைச்சருக்கு தரப்பட்டுள்ளது. ஆளுங்கட்சி வரிசையில் அமைச்சராக இருந்த போது முதல்வர் ஸ்டாலின் நாற்காலிக்கு பின் இருக்கையில் அமர்ந்திருந்தார் செந்தில் பாலாஜி. அவர் சிறைக்குப் போன பிறகு இலாகா இல்லாத அமைச்சராக நீடித்தார். சட்டசபையில் அவரது நாற்காலி காலியாவே இருந்தது. இந்த சூழ்நிலையில்தான் இரு தினங்களுக்கு முன்பு அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த நிலையில் அவரது நாற்காலி வேறொரு அமைச்சருக்கு தரப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜி பின்னால் உள்ள வரிசைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
வரும் மே மாதம் குரு பெயர்ச்சி நிகழ உள்ளது. குரு பெயர்ச்சிக்கு முன்பாகவே சட்டசபையில் நாற்காலிகளில் இடப்பெயர்ச்சி நிகழ்ந்துள்ளது. முன்வரிசையில் இருந்தவர்கள் பின் வரிசைக்கும்.. பின் வரிசையில் இருந்தவர்கள் முன் வரிசை நாற்காலிக்கும் இடம்மாறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications