ஈபிஎஸ் பனிப்போர்.. ‘முத்து’ நகரை 3 ஆக பிரித்த ஓபிஎஸ்.. அதிரடியாக மா.செக்கள் நியமனம்! செம ஃபாஸ்ட்!
சென்னை : ஒருபக்கம் பாஜக - எடப்பாடி பழனிசாமி இடையே பனிப்போர் ஏற்பட்டிருக்கும் நிலையில், அதிரடியாக நிர்வாகிகள் நியமனத்தில் வேகம் காட்டி வருகிறார் ஓ.பன்னீர்செல்வம்.
தூத்துக்குடி மாவட்டத்தை மூன்றாகப் பிரித்து, அதற்கு புதிய மாவட்ட செயலாளர்களை ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். இரண்டாகச் செயல்பட்டு வந்த தூத்துக்குடி மாவட்டத்தை தூத்துக்குடி மாநகர், தூத்துக்குடி புறநகர் தெற்கு மற்றும் தூத்துக்குடி புறநகர் வடக்கு என மூன்று மாவட்டங்களாக பிரித்துள்ளார் ஓபிஎஸ்.
மூன்று மாவட்டங்களுக்கும் மாவட்ட செயலாளர்களை நியமனம் செய்துள்ளார் ஓபிஎஸ். மேலும், அதிமுக இளைஞரணி இணைச் செயலாளராக எட்டையபுரத்தைச் சேர்ந்த கருப்பூர் கே.சீனி என்கிற ராஜகோபாலை நியமித்துள்ளார்.

ஓபிஎஸ் vs ஈபிஎஸ்
அதிமுகவில் ஓபிஎஸ் - ஈபிஎஸ் இடையே உட்கட்சி பூசல்கள் நீடித்து வரும் நிலையில், கட்சியைக் கைப்பற்றுவதில் இருவருமே தீவிரம் காட்டி வருகின்றனர். இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. தேர்தல் ஆணையம் மற்றும் நீதிமன்றத்தின் முடிவைப் பொறுத்துத் தான் அதிமுக யார் கட்டுப்பாட்டில் இருக்கும் என்பது தெரியவரும். இதற்கிடையே, தேர்தல் கூட்டணி தொடர்பான மோதல்களும் அரங்கேறி வருகின்றன.

சலசலப்பு - அதிரடி
பாஜக ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவாக இருப்பது போன்ற சூழல் நிலவுவதால், எடப்பாடி பழனிசாமி, பாஜகவை சீண்டும் விதமாகப் பேசத் தொடங்கியுள்ளார். பாஜகவின் விருப்பங்களுக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி பேசி வருவதால், பாஜக தலைவர்களும் பதிலடி கொடுக்கத் தொடங்கியுள்ளனர். இதனால், பாஜக கூட்டணி தொடர்பாக சலசப்புகள் எழுந்துள்ளன. இந்நிலையில், புதிதாக நிர்வாகிகளை அறிவித்து அதிரடி காட்டியுள்ளார் ஓ.பன்னீர்செல்வம்.

கட்சியை நீக்கம் - நியமனம்
எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், ஓபிஎஸ் மற்றும் அவரின் ஆதரவாளர்களை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவி உட்பட அனைத்து பதவிகளில் இருந்தும் நீக்கி உத்தரவிட்டார். அதேசமயம், ஓபிஎஸ், தான் தான் ஒருங்கிணைப்பாளர் எனக் கூறி எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அவரது ஆதரவாளர்களை கட்சியை விட்டு நீக்கினார். இரு தரப்புமே, தனித்தனியாக புதிதாக நிர்வாகிகளையும் நியமித்துள்ளனர்.

ஓபிஎஸ் வேகம்
தமிழகம் முழுவதும் கட்சி ரீதியாக மாவட்டங்களைப் பிரித்து நிர்வாகிகளை நியமனம் செய்வதில் வேகம் காட்டி வருகிறார் ஓபிஎஸ். அனைத்து மட்டத்திலும் நிர்வாகிகளை நியமித்த பிறகு, பொதுக்கூட்டங்கள், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா என தொடர்ந்து நடந்த ஓ.பன்னீர்செல்வம் தரப்பு திட்டமிட்டுள்ளது. தனது அணி பலமாக இருக்க வேண்டும் என்பதற்காக, அந்தந்த மாவட்டங்களில் சாதி பலம், செல்வாக்கு என கணக்கிட்டு ஓபிஎஸ் நிர்வாகிகளை நியமிப்பதாகக் கூறப்படுகிறது.

தூத்துக்குடி புதிய நிர்வாகிகள்
இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டத்திற்கு புதிய மாவட்ட செயலாளர்களை நியமித்துள்ளார் ஓபிஎஸ். இது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அதிமுக இளைஞரணி இணைச் செயலாளராக தூத்துக்குடி மாவட்டம், எட்டையபுரத்தைச் சேர்ந்த கருப்பூர் கே.சீனி என்கிற ராஜகோபால் இன்று முதல் நியமிக்கப்படுகிறார். தூத்துக்குடி புறநகர் வடக்கு மற்றும் தூத்துக்குடி புறநகர் தெற்கு எனக் கழக ரீதியாக செயல்பட்டு வந்த இரண்டு மாவட்டங்கள், நிர்வாக வசதியை முன்னிட்டு தூத்துக்குடி மாநகர், தூத்துக்குடி புறநகர் தெற்கு மற்றும் தூத்துக்குடி புறநகர் வடக்கு என மூன்று மாவட்டங்களாக இன்று முதல் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

புதிய மாவட்ட செயலாளர்கள்
இதன் அடிப்படையில், அ.தி.மு.க மாவட்டக் கழகச் செயலாளர்களாக கீழ்க்கண்டவர்கள் கீழ்க்காணும் பொறுப்புகளுக்கு இன்று முதல் நியமிக்கப்படுகிறார்கள். எஸ்.ஏசாதுரை (தூத்துக்குடி மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர்), டாக்டர் ம. புவனேஸ்வரன் (தூத்துக்குடி புறநகர் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர்), டி.வினோபாஜி, (தூத்துக்குடி புறநகர் வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர்). என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
-
AMMK: அமமுக போட்டியிடும் 11 தொகுதியின் உத்தேச பட்டியலை கொடுத்த தினகரன்! கோவில்பட்டி எங்கே? -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
9 ஆண்டுகள் கழித்து! அதிமுக தலைமை அலுவலகத்தில் நுழைந்த டிடிவி தினகரன்! மாடத்தில் Nostalgic மொமன்ட்ஸ்! -
ADMK: பாஜக 27, பாமக 18, அமமுக 11! அப்போ அதிமுக 172? வெளியான உத்தேச பட்டியல்? -
Velmurugan: அதிமுகவில் 3 சீட்? பாஜக கூட்டணிக்கு செல்லமாட்டேன்! தவாக வேல்முருகன் உறுதி! -
Annamalai: அதிமுக அலுவலகத்தில் அண்ணாமலையை காணோமே! ஆதரவாளர்கள் அப்செட்! எடப்பாடி கண்டிஷனா? -
"டெல்லி என்ன.. அமெரிக்காவே மிரட்டினாலும்..” டிடிவி தினகரனுக்கு ஓபிஎஸ் கொடுத்த பதில்! -
ஓ.பன்னீர்செல்வத்திடம் ஏடாகூட கேள்வி.. சட்டென டென்ஷனான பெரியகருப்பன் -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை?












Click it and Unblock the Notifications