Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கடைசி முயற்சி.. ஓபிஎஸ் எடுத்த அஸ்திரம்.. அண்ணாமலைக்கு எதிராக கிளம்பிய குரல்.. அதிரும் அதிமுக!

எடப்பாடி பழனிசாமிக்கு பாஜக ஆதரவு கொடுப்பதன் பின்னணியில் அண்ணாமலை இருப்பதாக ஓபிஎஸ் தரப்பினர் குற்றம்சாட்டினர்.

Subscribe to Oneindia Tamil

சென்னை : தொடர் பின்னடைவுகளைச் சந்தித்த ஓ.பன்னீர்செல்வம் இன்று தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இதில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு எதிராக கட்சியினரின் குரல்கள் ஒலிக்கும் எனக் கூறப்படுகிறது.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலைப் பயன்படுத்தி அதிமுவில் தனது இருப்பை நிறுவ ஓ.பன்னீர்செல்வம் முயன்ற நிலையில், அதிலும் எடப்பாடி பழனிசாமியே ஸ்கோர் செய்தார்.

இந்நிலையில் அடுத்த கட்ட நகர்வு குறித்து இன்று தனது அணியின் மாவட்டச் செயலாளர்கள், தலைமைக் கழக நிர்வாகிகளுடன் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தி வருகிறார்.

நிலுவையில் வழக்கு

நிலுவையில் வழக்கு

அதிமுகவில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஏற்பட்ட ஒற்றைத் தலைமை பிரச்சினை காரணமாக, ஜூலை 11ஆம் தேதி ஈபிஎஸ் அணி நடத்திய பொதுக்குழுக் கூட்டத்தில், கட்சியின் இடைக்காலப் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றுக்கொண்டார். மேலும், ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். இதை எதிர்த்து பன்னீர்செல்வம் சட்டப் போராட்டம் நடத்தி வருகிறார். பொதுக்குழு குறித்த வழக்கின் தீர்ப்பு உச்ச நீதிமன்றத்தில் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பின்னடைவைச் சந்தித்த ஓபிஎஸ்

பின்னடைவைச் சந்தித்த ஓபிஎஸ்

இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஈபிஎஸ், ஓபிஎஸ் இரு தரப்பினருமே வேட்பாளர்களை அறிவித்தனர். இரட்டை இலை சின்னம் கோரி எடப்பாடி உச்ச நீதிமன்றத்தை நாடினார். அதில் வழங்கப்பட்ட தீர்ப்பின்படி, பொதுக்குழு உறுப்பினர்களின் கையெழுத்தைப் பெற்று தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்தார் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன். அதன் அடிப்படையில் ஈபிஎஸ் நிறுத்திய வேட்பாளர் தென்னரசுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்பட்டது. ஓபிஎஸ் தனது வேட்பாளரைத் திரும்பப் பெற்று, இரட்டை இலைக்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்தார்.

ஆலோசனைக் கூட்டம்

ஆலோசனைக் கூட்டம்

ஆனால், ஓபிஎஸ் தரப்பு சார்பில் வழங்கப்பட்ட நட்சத்திரப் பேச்சாளர் பட்டியலை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கவில்லை. இதனால் தேர்தலில் ஓபிஎஸ் பிரச்சாரம் மேற்கொள்ள முடியவில்லை. இந்நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்தும், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாகவும் தனது ஆதரவாளர்களுடன் ஓபிஎஸ் ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னை எழும்பூரில் உள்ள தனியார் ஹோட்டலில், அதிமுக ஓபிஎஸ் அணி அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில், மாவட்டச் செயலாளர்கள், கட்சியின் தலைமைக் கழக நிர்வாகிகள் ஆகியோருடன் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தி வருகிறார்.

செல்போன்கள்

செல்போன்கள்

87 மாவட்ட செயலாளர்கள், 176 தலைமைக் கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க வந்த நிர்வாகிகள் அனைவருக்கும் அடையாள அட்டை வழங்கப்பட்டது. ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கும் நிர்வாகிகளின் செல்போன்கள் வாங்கி வைக்கப்பட்டன. இதில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

என்ன முடிவு

என்ன முடிவு

இந்தக் கூட்டத்தில் ஓபிஎஸ் என்ன முடிவெடுக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு அதிமுகவுக்குள் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை எடப்பாடி ஆதரவு நிலைப்பாட்டில் இருப்பதாக ஓபிஎஸ் ஆதரவாளர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். அண்ணாமலையின் தலையீடுகள் காரணமாகவே, பாஜக டெல்லி தலைமை எடப்பாடி பழனிசாமி ஆதரவு நிலைப்பாட்டுக்குச் சென்றுவிட்டதாக ஓபிஎஸ் அணியினர் நினைக்கின்றனர். இந்நிலையில், இன்றைய ஆலோசனைக் கூட்டத்தில் அண்ணாமலையின் நடவடிக்கைகள் தொடர்பாகவும் பேசக்கூடும் எனக் கூறப்படுகிறது.

இடைத்தேர்தல்

இடைத்தேர்தல்

மேலும், இடைத்தேர்தல் வாக்குப்பதிவுக்கு இன்னும் ஒரு வாரமே இருக்கும் நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதியில் இரட்டை இலைக்கு வாக்களிக்குமாறு கேட்டு அறிக்கை வெளியிடவும், ஆடியோ - வீடியோக்களை ஓபிஎஸ் குரலில் வெளியிடவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும், வரும் பிப்ரவரி 24ஆம் தேதி ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாளை கொண்டாடுவது பற்றியும் ஓபிஎஸ் அணி ஆலோசிப்பதாகக் கூறப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+