அதிமுக அலுவலகத்திற்கு சீல்..! உயர் நீதிமன்ற படிக்கட்டேறிய ஓ.பன்னீர்செல்வம்! முந்திக் கொண்ட எடப்பாடி!
சென்னை : அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டதை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ள நிலையில், ஓ.பன்னீர்செல்வம் தரப்பிலும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை ராயப்பேட்டையில் அதிமுக கட்சி அலுவலகம் யாருடைய கட்டுப்பாட்டில் உள்ளது என்பதை முடிவுசெய்ய இருதரப்பினரும் தாமாகவோ அல்லது வழக்கறிஞர் மூலமாகவோ வரும் 25ஆம் தேதி ஆஜராக வேண்டும் என்று இருதரப்பினருக்கும் வருவாய்துறை நோட்டீஸ் வழங்கியுள்ளது.

நேற்று ஓபிஎஸ் கட்சி தலைமை அலுவலகம் வருகிறார் என என்பதை கேள்விப்பட்ட எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளர்களும் அங்கு சரிசமமாக குவிந்தனர்.
இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவிய நிலையில் கற்கள் கட்டைகள் உள்ளிட்டவற்றால் மாறி மாறி இருதரப்பு ஆதரவாளர்களும் கடுமையாகத் தாக்கி கொண்டனர். தொடர்ந்து அங்கிருந்து ஆவணங்களும் எடுக்கப்பட்டதால் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சட்டம் ஒழுங்கு பிரச்னையை காரணம் காட்டி, அதிமுக அலுவலகத்துக்கு வருவாய் துறையினர் சீல் வைத்தனர்.
மேலும், அலுவலகத்தின் மீது யாருக்கு உரிமை உள்ளது என்பது குறித்து ஜூலை 25ம் தேதி ஆஜராகி விளக்கமளிக்கும்படி இரு தரப்பினருக்கும் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அதிமுக அலுவலகத்துக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற உத்தரவிடக் கோரி மனுத்தாக்கல் செய்ய உள்ளதாகவும், அந்த மனுவை அவசர வழக்காக இன்று பிற்பகல் விசாரிக்க வேண்டும் என அதிமுக தற்காலிக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி சதீஷ்குமார் முன் முறையீடு செய்தார்.
இந்நிலையில் இன்னும் தான் தான் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் பொருளாளர் என ஓபிஎஸ் கூறி வரும் நிலையில், அதிமுக அலுவலகத்துக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற உத்தரவிடக் கோரி ஓபிஎஸ் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தனியாக மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சீலை அகற்றக்கோரி எடப்பாடி பழனிசாமி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் ஓபிஎஸ் தரப்பும் மனு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
-
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
விஜய், உதயநிதி, அண்ணாமலை.. இளம் முகம் இல்லாமல் தடுமாறும் அதிமுக.. எடப்பாடிக்கு அடுத்து யார்? -
இசக்கி சுப்பையா டூ கடம்பூர் ராஜு.. இதுவரை எத்தனை அதிமுக மாஜி அமைச்சர்கள் தவெகவில் ஐக்கியம்! லிஸ்ட் -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
"ஆதவ் அர்ஜுனா வாயை அடக்கிப் பேசணும்.. அதிமுகவை பற்றி பேச அருகதை இல்லை".. கேபி முனுசாமி தாக்கு! -
இரட்டை இலையைக் கடிக்கும் தவெக..நடையை கட்டும் நிர்வாகிகள்! அடுத்த காங்கிரஸா அதிமுக? 1977 ரிட்டர்ன்ஸ்? -
சைலண்ட்டா முடிந்த சாவி மேட்டர்! விழுப்புரம் சண்முகம் ஆதரவாளர்களை மொத்தமா தூக்கிய எடப்பாடி! ஏன் -
“திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது.. நான்தான் வழியனுப்பி வைத்தேன்”.. ஸ்டாலின் ஓபன் டாக்! -
பனையூரில் பின்வாசல் வழியாக நுழைய முயன்ற அதிமுகவினர்! ஒரே தள்ளுமுள்ளு! விஜய் ஆபீஸில் என்ன நடக்கிறது -
இது ட்ரெய்லர் தான்.. அதிமுகவுக்கு தவெக எழுதப்போகும் கிளைமாக்ஸ்.. அருண்ராஜ் அதிரடி -
விஜய் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றல.. எல்லாம் போச்சு.. அப்செட்டில் இருக்கும் அதிமுக புள்ளிகள்! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு










Click it and Unblock the Notifications