என்ன வேணா நடக்கட்டும்.. அசராத ஓபிஎஸ்.. நிர்வாகிகள் நியமனத்தில் ஒரே பிஸி.. இது லிஸ்ட்லயே இல்லையே?!
அதிமுகவுக்கு புதிய நிர்வாகிகளை நியமித்து, தமது அணியினரையே அசரடித்து வருகிறார் ஓ.பன்னீர்செல்வம்.
சென்னை : ஒருபக்கம் நீதிமன்றத்தில் தொடர்ச்சியாக எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமான தீர்ப்புகள் வந்து, கட்சி கிட்டத்தட்ட அவர் கைக்குச் சென்றிருக்கும் சூழலில், என்ன வேணா நடக்கட்டும்.. நான் அசரவேமாட்டேன் என்பது போல, நிர்வாகிகளை நியமித்து வருகிறார் ஓபிஎஸ்.
ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டு 8 மாதங்களாகிவிட்டது என ஈபிஎஸ் தரப்பினர் நீதிமன்றங்களில் தெரிவித்து வருகின்றனர்.
ஆனால், கட்சியில் நான் தான் ஒருங்கிணைப்பாளர் என்று கூறி இன்னும் நிர்வாகிகளை நியமித்து வருகிறார் ஓ.பன்னீர்செல்வம்.

ஓபிஎஸ் - ஈபிஎஸ்
அதிமுகவில் ஒற்றைத் தலைமை பிரச்சனை தலைதூக்கி 9 மாதங்களைக் கடந்துவிட்டது. இதற்கிடையே இரு முறை பொதுக்குழு கூட்டங்கள் நடத்தப்பட்ட நிலையில், பொதுக்குழு தொடர்பான வழக்குகள் உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் என மாறி மாறிச் சென்றன. அதிமுக பொதுக்குழு வழக்கில் உச்ச நீதிமன்றம் எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமான தீர்ப்பை அளித்த நிலையில், பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பு தொடர்ந்த வழக்கு நாளை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது. இதனிடையே அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் வேட்பு மனுத் தாக்கலையே முடித்துவிட்டது ஈபிஎஸ் தரப்பு.

ஓபிஎஸ் அணி
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் வரும் 26ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு, வேட்பு மனு தாக்கல் நிறைவடைந்துள்ளது. எடப்பாடி பழனிசாமி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார். இந்த பொதுச் செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜேசிடி பிரபாகர் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்காக நேற்று முன்தினம் விசாரிக்கப்பட்டது.

அதிமுக
விசாரணை முடிவில் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் நடத்த அனுமதி அளிக்கப்பட்டு, அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிரான வழக்கில் தீர்ப்பு வரும் வரை தேர்தல் முடிவுகளை வெளியிட தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்குகளும், அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் தொடர்பான வழக்குகளும் சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருவதால் அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதிய நிர்வாகிகள் நியமனம்
இந்த நிலையில், அதிமுகவிற்கு புதிய நிர்வாகிகளை நியமித்து உள்ளதாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். அதிமுகவில் மாவட்ட செயலாளர், பழங்குடியின நலப்பிரிவு உள்ளிட்ட பொறுப்புகளுக்கு செயலாளர்களை நியமனம் செய்துள்ளதாக ஓ.பன்னீர்செல்வம் அறிவித்து உள்ளார். கரூர் மேற்கு மாவட்ட செயலாளராக ரமேஷ் என்பவரை நியமித்துள்ளார். கரூர் மேற்கு மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளராக வி.சி.இளங்கோவையும், மாவட்ட புரட்சித் தலைவி அம்மா பேரவை செயலாளராக செந்தில் குமாரையும் நியமித்து ஓபிஎஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

என்ன வேணா நடக்கட்டும்
ஓபிஎஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு 8 மாதங்கள் ஆகிவிட்டது, அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலுக்கு எதிராக வழக்கு தொடரவே அவருக்கு உரிமை இல்லை என ஒருபக்கம் ஈபிஎஸ் தரப்பினர் கூறி வரும் நிலையில், ஓபிஎஸ் கொஞ்சமும் அசராமல் புதிதாக நிர்வாகிகளை நியமித்து வருவது அதிமுகவினர் மத்தியில் குழப்பங்களை ஏற்படுத்தி வருகிறது. சட்டப் போராட்டத்தில் தொடர்ச்சியாக பின்னடைவைச் சந்தித்து வரும் ஓபிஎஸ்ஸுக்கு நாளை நடைபெறும் பொதுக்குழு தீர்மான வழக்கு விசாரணை சாதகமாக அமையுமா என்பதுதான் ஓபிஎஸ் தரப்பின் உச்சபட்ச எதிர்பார்ப்பு.

மீண்டும் களத்தில்
அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிரான வழக்கு ஓபிஎஸ்ஸுக்கு சாதகமாக திரும்பினால், அதாவது பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லாது என்று தீர்ப்பு வந்தால், ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டது செல்லாது என்ற நிலைமை வரும். அப்படி ஒரு நிலை வந்தால், மீண்டும் ஓபிஎஸ் அணி பலம் பெறும். எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான சண்டையை வீரியத்துடன் மீண்டும் தொடங்கும். ஆனால், எதிராக வந்தால் கிட்டத்தட்ட ஓபிஎஸ்ஸுக்கு இனி அதிமுகவில் எதிர்காலம் இல்லை என்றே சொல்லலாம்.. என்ன நடக்கப்போகிறதென்று பொறுத்திருந்து பார்ப்போம்.
-
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல் -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
கைவிட்டு போன அவிநாசி.. தவெகவுக்கு தாவிய மகன்! முன்னாள் சபாநாயகர் தனபால் கொடுத்த விளக்கம்! -
நான் பார்த்துக்கிறேன்.. எடப்பாடிக்கு போனை போட்ட டிடிவி தினகரன்.. போனை எடுக்கலையாமே.. ஏன்? -
ஆத்திரத்தின் உச்சியில் அண்ணாமலை..டெல்லியை ஆட்டி படைக்கும் அடிவருடிகள்! கருப்பு சிகப்பாகும் காவிகள்? -
ஏ.சி.சண்முகம் கட்சிக்கு அதிர்ச்சி கொடுத்த பாஜக தலைமை.. தாமரை சின்னத்தில் போட்டியிட சீட் இல்லை! -
எடப்பாடி பழனிசாமி ஆட்சியை நான்தான் காப்பாற்றிக் கொடுத்தேன்! எனக்கே சீட் இல்லை! தனபால் குமுறல் -
170ஐ தாண்டி.. சிக்ஸர் அடிக்கும்.. திமுகதான் மீண்டும்.. அப்போ தவெக, அதிமுக? 3 சர்வே ரிப்போர்ட்ஸ்! -
திமுக கூட்டணிக்கு 172 முதல் 178 இடங்கள்.. அதிமுக சறுக்கல்.. அப்போ தவெக.. வெளியான பரபர சர்வே! -
தமிழக வெற்றிக் கழகத்தின் அஸ்திவாரத்தை அசைத்த சர்வே.. ஆசையா இருந்தாங்களே.. தவெக விஜய்க்கு ஷாக்! -
பிரச்சார வாகனத்தால் பறிபோன எம்.எல்.ஏ பதவி? - ஜெயலலிதாவுக்கு எதிராக பி.ஹெச்.பாண்டியன் செய்த சம்பவம்! -
TN Election history: முதலும் கடைசியும்.. 2 தேர்தல்கள்.. மருத்துவமனையில் படுத்தபடி ஜெயித்த எம்.ஜி.ஆர்












Click it and Unblock the Notifications