மகன்களிடம் தரப்பட்ட டாஸ்க்.. நொந்து போன ஓபிஎஸ்.. மனசு விட்டு கூட பேசலையாமே.. என்ன நடந்தது?
சென்னை: லோக்சபா தேர்தல் முடிந்திருக்கும் சூழலில், அடுத்தக் கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிப்பதற்காக ஓபிஎஸ்சிடம், அவரது ஆதரவு அணி சீனியர்கள் பேசியிருக்கிறார்கள். இதில் ஓ பன்னீர்செல்வம் மிகவும் மனமுடைந்து காணப்பட்டதாக கூறப்படுகிறது.
இரண்டு வாரம் முன் 2024 மக்களவை தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நடந்தது. தமிழ்நாட்டின் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் முதற்கட்ட வாக்குப்பதிவு நடந்தது. தமிழ்நாட்டில் மொத்தம் 950 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நாடு முழுவதும் 21 மாநிலங்களில் உள்ள 102 லோக்சபா தொகுதிகளுக்கு முதற்கட்டமாக தேர்தல் நடந்தது.

நாடாளுமன்ற தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் சுயேட்சையாக களமிறங்கினார் ஓபிஎஸ். இது போக இன்னும் நான்கு ஓபிஎஸ்களும் சுயேச்சைகளாக போட்டியிட்டனர். அவர்களில் ஒருவர் உசிலம்பட்டியில் வசிப்பவர், மற்றொருவர் காட்டூரைச் சேர்ந்தவர், இருவர் மதுரையைச் சேர்ந்தவர்கள். எல்லோரும் சுயேச்சை என்பதால் கண்டிப்பாக வாக்குகள் சிதறும் வாய்ப்புகள் உள்ளன.
முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வத்திற்கு பலா பழ சின்னம் ஒதுக்கப்பட்டு உள்ளது. இன்னொரு ஓ பிஎஸ்சுக்கு திராட்சை சின்னம் ஒதுக்கப்பட்டு உள்ளது. இந்த இரண்டு சின்னமும் பார்க்க கொஞ்சம் ஒரே மாதிரியாக இருப்பது ஓ பன்னீர்செல்வத்திற்கு சிக்கலாக மாற வாய்ப்பு உள்ளது. ஒரே மாதிரி இரண்டு சின்னமும் இருப்பதால் ஓ பன்னீர்செல்வத்திற்கு சிக்கல் ஏற்படலாம். மற்றவர்களுக்கு வாளி, டம்ளர் மற்றும் புளி சின்னம் கொடுக்கப்பட்டு உள்ளது.
தேர்தல் ரிசல்ட்: தேர்தல் முடிந்திருக்கும் சூழலில், அடுத்தக் கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிப்பதற்காக ஓபிஎஸ்சிடம், அவரது ஆதரவு அணி சீனியர்கள் பேசியிருக்கிறார்கள். தேர்தல் எப்படி அண்ணே போச்சு.. திருப்தியா.. நமக்கு சாதகமாக ரிசல்ட் இருக்குமா என்றெல்லாம் கேட்டுள்ளனர்
குறிப்பாக, ''திமுக, அதிமுக கட்சிகள் தங்கள் கட்சியினரை அழைத்து வாக்குப்பதிவு நிலவரம் பற்றி விசாரித்திருக்கிறார்கள். நாமும் அதேபோல, கட்சியினரை அழைத்து ஆலோசிக்க வேண்டும்'' என சொல்ல, ''போட்டியிட்டது நான் மட்டும் தான். இதில் யாரை அழைத்து விசாரிக்க வேண்டும் ? ஆலோசிக்க வேண்டும் ? '' என்று ஓபிஎஸ் திருப்பிக் கேட்டிருக்கிறார்.
அதற்கு சீனியர்களால் பதில் சொல்ல முடியவில்லை. இதனை ஒருவருக்குள் ஒருவர் பகிர்ந்துகொள்ளும் அவர்கள், '' ஓபிஎஸ்சுக்கு என்னாச்சு ? பட்டும் படாமலே பேசுறார். ஒரு வித கவலையாக இருக்கிறாரே? '' என்று சொல்லிக்கொள்கிறார்கள்.
இதுகுறித்து ஓபிஎஸ் தரப்பில் விசாரித்த போது, ''தேர்தல் வேலைக்கு செலவு செய்யும் பொறுப்பை தனது மகன்களிடம் கொடுத்திருந்தார். ஆனால், அவர்கள் செலவு செய்யவே இல்லையாம். அதுவும் தேர்தல் செலவுக்களுக்கென அவர் கொடுத்த பணத்தைத்தான் செலவு செய்திருக்கிறார்கள். அவர்கள் சொந்த பணத்தை எடுக்கவே இல்லையாம். அதுவும், தொகுதியிலுள்ள அதிமுக நிர்வாகிகளை தனக்கு ஆதரவாக வளைத்து வைத்திருந்தார் ஓபிஎஸ். கடைசி 2 நாளில் அதிமுக நிர்வாகிகளை கவனிப்பதாகச் சொல்லியிருந்திருக்கிறார். அதனை செட்டில் செய்யச் சொல்லி மகன்களிடம் கேட்டுக்கொண்டிருக்கிறார் ஓபிஎஸ்.
ஆனால், அவர்களோ தங்களிடம் பணம் இல்லை என சொல்லிவிட்டார்களாம். இது ஓபிஎஸ்சை சங்கடப்படுத்தியிருக்கிறது. எவ்வளவு செலவு செய்தாலும் அப்பா ஜெயிக்க மாட்டார்னு பையன்கள் நினைத்தார்களோ என்னவோ பணம் இல்லைன்னா சொல்லிட்டாங்க. இதுதான் அவரது மனதை அரித்துக் கொண்டே இருக்கிறது. அதனால்தான் யார் பேசினாலும் மனம் விட்டு ஓபிஎஸ் பேசவில்லை. கவலையாகவே இருக்கிறார்'' என்று பின்னணிகளை விவரிக்கி றார்கள் ஓபிஎஸ் தரப்பினர்.












Click it and Unblock the Notifications