ஜீரணிக்க முடியாது.. யார் தூண்டிவிட்டது? எடப்பாடியை ஆட்டிப்படைக்கும் ஓபிஎஸ் லெட்டர்! உடையும் சீக்ரெட்
சென்னை: அதிமுக தொண்டர்களுக்கு எடப்பாடி பழனிச்சாமி கடிதம் எழுதிய நிலையில் ஓ பன்னீர்செல்வமும் பதிலடியாக முக்கிய கடிதம் ஒன்றை எழுத போவதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதிமுகவில் உட்கட்சி மோதல் நிலவி வரும் நிலையில், அதிமுக தொண்டர்களுக்கு அக்கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று தனித்தனியாக கடிதம் எழுதியுள்ளார்.
1,16,000 அதிமுக நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிசாமி இந்த கடிதத்தை எழுதி உள்ளார். தங்கள் எண்ணம் ஈடேறவில்லை, தங்களுக்கும் தங்களுடைய வாரிசுகளுக்கும் எதிர்பார்த்த பதவி கிடைக்கவில்லை என சிலர் இடம்மாறியுள்ளனர் தவிர உண்மையான தொண்டர்கள் ஒருவர் கூட இயக்கத்தைப் புறந்தள்ளி மாற்று இயக்கத்திற்குச் சென்றதில்லை என ஓ.பன்னீர்செல்வத்தை விமர்சனம் செய்து அந்தக் கடிதத்தை எழுதியுள்ளார் எடப்பாடி பழனிசாமி.
என் உயிர் உள்ளவரை அதிமுகவின் வளர்ச்சிக்காக பாடுபடுவேன், அதிமுகவை மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமரவைத்தே தீருவேன் என்றும் எடப்பாடி பழனிசாமி உறுதியாக எழுதி இருக்கிறார் .
எடப்பாடி பழனிச்சாமியின் இந்த திடீர் கடிதம் விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.

ஓ பன்னீர்செல்வம் கடிதம்
இந்த நிலையில்தான் ஏட்டிக்குப் போட்டி என்பது போல அ.தி.மு.க. தொண்டர்கள் 1,16,000 பேருக்கு எடப்பாடி பழனிச்சாமி கடிதம் எழுதியதற்கு பதிலடித் தருவது போல, ஓபிஎஸ் கடிதம் எழுதும் திட்டத்தில் இருக்கிறார். எடப்பாடி, தனது கடிதத்தில் ஓபிஎஸ்சை அவரது பெயரைக் குறிப்பிடாமல் துரோகிகள் என விமர்ச்சித்திருப்பதை ஓபிஎஸ்சால் ஜீரணித்துக் கொள்ளமுடியவில்லையாம். அதனால், அதே தொண்டர்களுக்கு ஓபிஎஸ் எழுதும் கடித்ததில் எடப்பாடியின் துரோகத்தை வெளிப்படுத்தும் வகையில் கடிதம் தயாரிக்கப்பட்டிருக்கிறதாம்.

குடும்பம்
குறிப்பாக, சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினரை எதிர்த்து ஓபிஎஸ் நடத்திய தர்மயுத்தத்தின் பின்னணியில் யார் இருந்தது ? யார் தூண்டிவிட்டது? என்கிற உண்மையை சொல்லும் வகையில் அந்த கடிதம் தயாரிக்கப்பட்டதாம். இந்த கடிதம் ஓபிஎஸ்சின் பார்வைக்கு சென்றது. அதில் சில மாற்றங்களை செய்திருக்கிறாராம் ஓபிஎஸ். சிலவற்றை நீக்கியிருக்கிறாராம்.

புதிய கடிதம்
அதனையொட்டி புதிதாக ஒரு கடிதம் தயாரிக்கப்பட்டுள்ளது. எடப்பாடி அனுப்பி வைத்தது போல ஓபிஎஸ்சின் கடிதமும் அனுப்பி வைக்கப்படவிருக்கிறது. ஏட்டிக்கு போட்டி நடக்கும் இந்த கடித போக்குவரத்து அதிமுக தொண்டர்களிடம் எந்த வகையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என புரியவில்லை. காரணம், எடப்பாடி அனுப்பிய கடிதத்தை பார்த்த அதிமுகவினர் பெரும்பாலோனோர், கடிதத்தில் சொல்லப்பட்ட எல்லா விசயங்களும் எடப்பாடியை விட எங்களுக்கு நிறையவே தெரியும்.

இரண்டு பேர்
எம்ஜிஆர்-ஜெயலலிதா இருவரும் கட்சியையும் ஆட்சியையும் எப்படி வழிநடத்தினார்கள் என்பதெல்லாம் தெரியும். இப்போதைய சூழலில், எம்ஜிஆர்-ஜெயலலிதாவின் வரலாறு எங்களுக்கு முக்கியமில்லை. மாறாக, தொண்டர்களின் நிலையறிந்து வள்ளல்களாக இருந்த அந்த இருபெரும் தலைவர்களின் வழிகாட்டுதலில், நலிவடைந்த தொண்டர்களுக்கு உதவி செய்யுங்கள். அதைவிட்டுவிட்டு இப்போது ஏன் பழைய புராணங்களை பேசுகிறீர்கள். நிகழ்காலம் எப்படி இருக்கிறது என்று பாருங்கள்.

அவசியமா?
கழகம் பொன்விழா ஆண்டை நிறைவு பெற்றிருக்கும் சூழலிலும் அதனை விமர்சியாக கொண்டாடவிருக்கும் நிலையிலிலும் அதனையொட்டி மாவட்டம் தோறும் 1 லட்சம் தொண்டர்களுக்கு உதவி செய்யுங்கள். அது தான் கழகம் பொன்விழா கொண்டாடும் நிலையில் எம்ஜிஆர்-ஜெயலலிதாவுக்கு செய்யும் நன்றியாக இருக்கும் . தொண்டர்களின் குறைகளை கேட்டறியுங்கள். அவர்களை நேரடியாக சந்தித்து பேசுங்கள். வெறும் கடிதம் எழுதுவதால் எதுவும் ஆகிவிடப்போவதில்லை, என்று குமுறத் தொடங்கியுள்ளனர்.












Click it and Unblock the Notifications