இது தப்புன்னா.. அதுவும் தப்பு.. ஓபிஎஸ்தான் ஒத்துக்கிட்டாரு! கோர்ட்டில் எடப்பாடி இப்படி சொல்லிட்டாரே!
சென்னை: அதிமுக பொதுக்குழு வழக்கில் இன்று எடப்பாடி பழனிசாமி தரப்பு வைத்த வாதத்தில் அதிமுக பொதுக்குழு ஓ பன்னீர்செல்வத்திற்கு தெரியாமல் நடந்தது என்றெல்லாம் சொல்ல முடியாது. ஓ பன்னீர்செல்வத்திற்கு பொதுக்குழு அறிவிக்கப்பட்டது குறித்து தெரியும், என்று குறிப்பிட்டார்.
அதிமுக பொதுக்குழு வழக்கு விசாரணை கிளைமேக்ஸை நெருங்கி உள்ளது. இந்த வழக்கில் இன்று எடப்பாடி வாதம் வைத்த நிலையில், நாளை வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. அதிமுக பொதுக்குழு ஜூலை 11ம் தேதி கூடியது. ஜூலை 11ம் தேதி நடந்த பொதுக்குழுவில் அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி நியமிக்கப்பட்டார்.
இந்த பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் நீக்கப்பட்டன. அதோடு இந்த பொதுக்குழுவில் ஓ பன்னீர்செல்வம் அதிமுகவில் இருந்தே நீக்கப்பட்டார். இந்த பொதுக்குழு செல்லாது என்று ஓ பன்னீர்செல்வம், வைரமுத்து ஆகியோர் மனுதாக்கல் செய்துள்ளனர். இதை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பு எதிர் மனு தொடுத்து உள்ளது. இந்த வழக்குதான் தற்போது தீவிரமாக விசாரணை செய்யப்பட்டு வருகிறது.

எடப்பாடி வாதம்
அதிமுக பொதுக்குழு வழக்கில் இன்று எடப்பாடி பழனிசாமி தரப்பு வைத்த வாதத்தில் அதிமுக பொதுக்குழு ஓ பன்னீர்செல்வத்திற்கு தெரியாமல் நடந்தது என்றெல்லாம் சொல்ல முடியாது. ஓ பன்னீர்செல்வத்திற்கு பொதுக்குழு அறிவிக்கப்பட்டது குறித்து தெரியும். ஜூலை 23ம் தேதி பொதுக்குழுவில்தான் ஜூலை 11ம் தேதி பொதுக்குழு நடக்கும் என்று அறிவித்தோம். அப்போது பொதுக்குழு மேடையில் ஓபிஎஸ் இருந்தார். அவரிடம் பொதுக்குழு நடக்கும் தேதியை மேடையிலேயேதான் எல்லோருக்கும் முன் அறிவித்தோம். அப்படி இருக்கும் போது பொதுக்குழு அவருக்கு தெரியாமல் நடந்தது என்று சொல்ல முடியாது.

பொதுக்குழு
ஜூன் 23ம் தேதி ஜூலை 11ம் தேதி பொதுக்குழுவை பற்றி அறிவித்தது ஓ பன்னீர்செல்வம் ஒப்புக்கொள்கிறார். அப்படி இருக்கும் போது இதில் குறை கூற என்ன இருக்கிறது. அதிமுகவில் முக்கியமான ஒரு விதி இருக்கிறது. அந்த விதி பொதுக்குழுதான் உட்சபட்ச அதிகாரம் கொண்டது என்ற விதி. பொதுக்குழு நினைத்தால்தான் எந்த முடிவையும் எடுக்க முடியும். அதேபோல் கட்சியின் அடிப்படை உறுப்பினராக இருக்கவும், கட்சியின் பொதுக்குழு உறுப்பினராக இருக்கவும் சில விதிகள் உள்ளன. அடிப்படை உறுப்பினராக இருக்க அதிமுகவின் பொதுக்குழு விதிகளை பின்பற்ற வேண்டும்.

விதி
அதேபோல் பொதுக்குழுவில் உறுப்பினராக இருக்க கட்சியின் பொதுக்குழு விதிகளை பின்பற்ற வேண்டும். ஆனால் ஓ பன்னீர்செல்வம் இந்த இரண்டு விதிகளையும் மீறிவிட்டார். இந்த இரண்டு விதிகளையும் மீறியதால்தான் பொதுக்குழுவை கூட்டி ஓ பன்னீர்செல்வத்திற்கு எதிராக முடிவு எடுத்தோம். நான் ஓ பன்னீர்செல்வத்தை கட்சியில் இருந்து நீக்கவில்லை. பொதுக்குழுதான் ஓ பன்னீர்செல்வத்தை நீக்கியது. அதிமுகவில் இடைக்கால பொதுச்செயலாளர் பதவியை பொதுக்குழுதான் நீக்கியது. அப்போது அதை ஓ பன்னீர்செல்வம் ஏற்றுக்கொண்டார்.

சரியாக பட்டது
அப்போது மட்டும் ஓ பன்னீர்செல்வத்திற்கு இது சரியாக பட்டது. ஆனால் இப்போது மட்டும் இதை ஓ பன்னீர்செல்வம் எதிர்க்கிறார். அதேபோல் பொதுக்குழுதான் தற்போது ஒருங்கிணைப்பாளர் - இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை நீக்கி உள்ளது. பொதுக்குழுதான் ஒருங்கிணைப்பாளர் - இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு ஒப்புதல் அளிக்க முடியும். அதே பொதுக்குழுதான் அவரை நீக்கவும் முடியும். அப்படி இருக்கும் போது இதை மட்டும் ஓ பன்னீர்செல்வம் எப்படி எதிர்க்கலாம். . பொதுக்குழுவில் விதிகளை பின்பற்றும் நபர்களே அடிப்படை உறுப்பினராக இருக்க முடியும் என்று கட்சி விதி கூறுகிறது. அதை ஓ பன்னீர்செல்வம் மீறியதால் அவர் கட்சியில் இருந்தே நீக்கப்பட்டார், என்று எடப்பாடி பழனிசாமி தரப்பு வாதம் வைத்துள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications