அந்த ஒன்று மட்டும் டெல்லியில் நடக்காமல் போனால்.. அடுத்த விஸ்வரூபத்தை காட்டுவார் ஓபிஎஸ்?
சென்னை: மத்திய அமைச்சரவை விரிவாகத்தின் போது மகனுக்கு அமைச்சர் பதவி கிடைக்காமல் போனால் பாஜகவுக்கு எதிரான ஆட்டத்தையும் ஓ. பன்னீர்செல்வம் தொடங்குவார் என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.
அதிமுகவில் தமது கை ஓங்கி இருக்க வேண்டும் என்பதற்காக ஓ. பன்னீர்செல்வம் மேற்கொண்ட அத்தனை முயற்சிகளும் தகர்ந்து போய்விட்டன. சட்டசபை தேர்தலுக்கு முன்னர் இருந்தே ஓபிஎஸ் தனி ஆவர்த்தனத்தை தொடங்கி இருந்தார்.

எடப்பாடிக்கு ஆதரவு
சட்டசபை தேர்தலின் போது தமது ஆதரவாளர்கள் அதிகம் பேர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட வேண்டும் என எதிர்பார்த்தார் ஓபிஎஸ். ஆனால் எடப்பாடி பழனிசாமி தரப்பு இதற்கு இடம்தரவில்லை. இதனால் தற்போது அதிமுகவின் பெரும்பாலான எம்.எல்.ஏக்கள் எடப்பாடி பழனிசாமி பக்கமே இருக்கின்றனர்.

சட்டசபை எதிர்க்கட்சி துணை தலைவர்
எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இல்லாமல் போனதால் முட்டி மோதிப் பார்த்தும் ஓபிஎஸ்-க்கு சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் பதவி கிடைக்கவில்லை. இதனையடுத்து தனி அறிக்கைகள் வெளியிட்டு தனது அதிருப்தியை வெளிப்படுத்திக் கொண்டார் ஓபிஎஸ். மேலும் எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியை ஏற்க முடியாது எனவும் திட்டவட்டமாக கூறி வந்தார்.

2-வது இடம் ஏற்பு
அதேபோல் சசிகலாவை அதிமுகவில் இணைக்க வேண்டும் என்பதில் ஓபிஎஸ் உறுதியாக இருந்தார். ஆனால் அதிமுக எம்.எல்.ஏக்கள் மட்டுமல்ல, நிர்வாகிகளும் கூட ஓபிஎஸ்-க்கு ஆதரவாக இல்லை. இதனால் சட்டசபை எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியையும் ஏற்றுக் கொண்டார்; சசிகலாவுடன் போனில் பேசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் கையெழுத்திட்டார். இப்படி ஒட்டுமொத்தமாக அதிமுகவில் தமது பிடி தளர்ந்து போய் இனி 2-வது இடம்தான் தமக்கு என்பதை புரிந்து கொண்டார் ஓபிஎஸ்.

மகனுக்கு அமைச்சர் பதவி
அதேநேரத்தில் தம்மை உட்கட்சி விவகாரங்களில் கை கழுவிவிட்ட டெல்லி பாஜக மகன் விவகாரத்திலாவது அனுசரணையாக இருக்கும் என எதிர்பார்க்கிறாராம் ஓபிஎஸ். பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படுவது உறுதியாகி உள்ளது. இந்த அமைச்சரவை விரிவாக்கத்தின் போது அதிமுகவின் ஒற்றை லோக்சபா எம்.பி.யான மகன் ரவீந்திரநாத் குமாருக்கு டெல்லி பாஜக அமைச்சர் பதவி கொடுக்கும் என மலைபோல் நம்பிக் கொண்டிருக்கிறாராம் ஓபிஎஸ். அப்படி மகனுக்கு அமைச்சர் பதவி கிடைத்துவிட்டால் டெல்லி பாஜகவின் ஆதரவு தமக்கே இருக்கிறது என்கிற கெத்தாவது கிடைக்குமே என்பதுதான் ஓபிஎஸ் கணக்கு. ஒருவேளை அமைச்சரவை விரிவாக்கத்திலும் தம்மை டெல்லி புறக்கணித்துவிட்டால் பாஜகவுக்கு எதிராக அதிமுகவை நகர்த்தும் ஆட்டங்களை ஓபிஎஸ் தொடங்குவார் என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.
-
AMMK: அமமுக போட்டியிடும் 11 தொகுதியின் உத்தேச பட்டியலை கொடுத்த தினகரன்! கோவில்பட்டி எங்கே? -
9 ஆண்டுகள் கழித்து! அதிமுக தலைமை அலுவலகத்தில் நுழைந்த டிடிவி தினகரன்! மாடத்தில் Nostalgic மொமன்ட்ஸ்! -
ADMK: பாஜக 27, பாமக 18, அமமுக 11! அப்போ அதிமுக 172? வெளியான உத்தேச பட்டியல்? -
Annamalai: அதிமுக அலுவலகத்தில் அண்ணாமலையை காணோமே! ஆதரவாளர்கள் அப்செட்! எடப்பாடி கண்டிஷனா? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
அசைக்க முடியாத சாதனையைச் செய்த மோடி! 8,931 நாள் அரசு பதவி! உலக அளவில் உயரும் டிஜிட்டல் செல்வாக்கு! -
“போர் நடந்தாலும்.. எரிபொருள் கொள்முதலில் பாதிப்பு இருக்காது”.. நாடாளுமன்றத்தில் மோடி உறுதி! -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்!












Click it and Unblock the Notifications