பெற்ற தாயின் திதிக்கே ரவீந்திரநாத் வரவில்லை! மகனால் மனம் நொந்த ஓ.பன்னீர்செல்வம்! போட்டுடைத்த காயத்ரி
சென்னை: பெற்ற தாயின் திதிக்கு கூட தனது மகன் ரவீந்திரநாத் எம்.பி. வரவில்லை என்றும் தனது பேச்சை கேட்கும் நிலையில் மகன் இல்லை எனவும் ஓ.பன்னீர்செல்வம் மனம் நொந்து போய் கூறியதை ஊடகங்களிடம் போட்டுடைத்திருக்கிறார் காரைக்குடியை சேர்ந்த காயத்ரி தேவி.
இதன் மூலம் ஓ.பன்னீர்செல்வம் வீட்டின் குடும்ப பஞ்சாயத்து வீதிக்கு வந்துள்ளது. ஏற்கனவே கட்சியில் செல்வாக்கை இழந்து கடும் மன உளைச்சலில் இருந்து வரும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு மூத்த மகன் ரவீந்திரநாத் மீது எழுந்துள்ள பாலியல் தொல்லை குறித்த புகார் மன வேதனையை மேலும் அதிகப்படுத்தியுள்ளது.

ஏற்கனவே ஓபிஎஸ் க்கும் அவரது மகன்களுக்கும் சரியான புரிதல் இல்லை, கருத்து வேறுபாட்டுடன் தான் காலங்கள் நகர்வதாக தகவல்கள் உலா வந்த நிலையில் அதனை உறுதி செய்யும் வகையில் காயத்ரி தேவி கூறியிருப்பது அமைந்துள்ளது.
சொந்த மகனை கூட கட்டுப்படுத்த முடியாத கையறு நிலையில் தான் ஓ.பன்னீர்செல்வம் இருக்கிறார் என்பதை காயத்ரி தேவி போகிற போக்கில் கூறியிருக்கிறார். இதன் மூலம் ஓ.பன்னீர்செல்வத்தை நம்பியுள்ள ஆதரவாளர்களுக்கு சூசகமான மெசேஜ் ஒன்றையும் காயத்ரி தேவி தெரிவித்திருக்கிறார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்தவர் காயத்ரி தேவி. இவர் கடந்த 2020ஆம் ஆண்டு தனது கணவரை விவாகரத்து செய்விட்டு இரண்டு பிள்ளைகளுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் அவருக்கு ஓ.பி.ரவீந்திரநாத் பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்துள்ள புகார் அரசியல் களத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
ஏற்கனவே தேனியில் வெற்றி பெற்றது செல்லுமா செல்லாதா என நீதிமன்றத்தில் வழக்குகளை சந்தித்து வரும் ரவீந்திரநாத்துக்கு காயத்ரி தேவி கொடுத்துள்ள புகார் புது சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications