நீங்க என்ன என்னை நீக்குவது? எடப்பாடியை அதிமுகவிலிருந்து நான் நீக்குகிறேன்! ஓபிஎஸ் பரபர அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுகவில் இருந்து ஓ பன்னீர்செல்வம் நீக்கப்பட்ட நிலையில், எடப்பாடி பழனிசாமியை கட்சியில் இருந்து நீக்குவதாக ஓ பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். தன்னை நீக்க யாருக்கும் அதிகாரம் இல்லை என்றும் ஓ பன்னீர்செல்வம் பேட்டி அளித்துள்ளார்.

Recommended Video

    எடப்பாடியை அதிமுகவிலிருந்து நான் நீக்குகிறேன்! ஓபிஎஸ் பரபரஅறிவிப்பு

    அதிமுகவில் தற்போது உச்சகட்ட மோதல் ஏற்பட்டுள்ளது. அதிமுக பொதுக்குழு, செயற்குழு தற்போது சென்னை வானகரத்தில் நடைபெற்று வருகிறது. அதிமுக செயற்குழுவில் தற்போது 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன.

    தற்போது இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அதிகாரபூர்வமாக தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். அதிமுகவில் இடைக்கால பொதுச்செயலாளர் பதவியை உருவாக்குவது தொடர்பாக தற்போது தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    பொதுச்செயலாளர்

    பொதுச்செயலாளர்

    இதையடுத்து பொதுச்செயலாளர் பதவிக்கு தேர்தல் நடத்த தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று அதிமுக பொதுக்குழுவில் ஓ பன்னீர்செல்வத்தை அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கும் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதாவது அதிமுகவின் பொருளாளர், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பதவிகளில் இருந்தும் ஓ பன்னீர்செல்வம் நீக்கப்பட்டு இருக்கிறார்.

    நீக்கம்

    நீக்கம்

    அவர் மட்டுமின்றி அவரோடு நட்பாக இருந்த ஓ பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களும் மொத்தமாக நீக்கப்பட்டு உள்ளனர். அதாவது வைத்தியலிங்கம், ஆர்சிபி பிரபாகர், மனோஜ் பாண்டியன் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்,. இவர்களுடன் அதிமுக நிர்வாகிகள் யாரும் தொடர்பு வைத்திருக்க கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதையடுத்து ஓ பன்னீர்செல்வம் உடனே அதிமுக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

    உத்தரவு

    உத்தரவு

    அதிமுக அலுவலகத்தில் தொண்டர்களுடன் அமைதியாக ஓ பன்னீர்செல்வம் அமர்ந்து இருந்தார். தான் நீக்கப்பட்ட செய்தி கேட்டதும் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய ஓ பன்னீர்செல்வம், இன்று நடந்த பொதுக்குழு சட்டபடி செல்லாது. நான் தொண்டர்கள் மூலம் ஒருங்கிணைப்பாளராக தேர்வு செய்யப்பட்டேன். அதிமுகவில் இருந்து நீக்க இபிஎஸ்-க்கு அதிகாரமில்லை. என்னை நீக்க அவர்களுக்கு அதிகாரம் இல்லை. நான் தொண்டர்கள் மூலம் தேர்வு செய்யப்பட்டேன்.

    பதிலடி

    பதிலடி

    அதிமுகவில் இருந்து எடப்பாடி பழனிச்சாமி நீக்கம் செய்யப்படுகிறார். கே.பி.முனுசாமியையும் கட்சியில் இருந்து நீக்குவதாக முடிவு எடுக்கிறேன். அவர்கள்தான் கழக விதிகளுக்கு புறம்பாக செயல்பட்டுள்ளனர். அவர்கள் இருவரையும் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்குகிறேன். கழக சட்ட விதிப்படி நீதிமன்றத்திற்கு செல்வோம். தொண்டர்களோடு இணைந்து சட்ட ரீதியாக போராட்டம் செய்வோம், என்று ஓ பன்னீர்செல்வம் பேட்டி அளித்துள்ளார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+