பங்கு போடும் திமுக - பாஜக..எல்லாத்துக்கு காரணமே ஜெயலலிதா தான்.. நானே சாட்சி! ஓபனாக பேசிய ஓபிஎஸ்..!
சென்னை: அத்திக்கடவு - அவினாசி திட்டம் நிறைவேற்றப்பட்டதற்கு முழு முதற்க் காரணமாக விளங்கியவர் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தான்.. இதற்கு வேறு யாரும் சொந்தம் கொண்டாட முடியாது என தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில்,"அத்திக்கடவு -அவினாசி திட்டம் என்பது கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்ட மக்களின் நீண்டநாளையக் கனவு. கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள கிட்டத்தட்ட 24,000 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறும்

பவானி ஆற்றில் காளிங்கராயன் அணைக்கட்டின் கீழ்ப்புறத்திலிருந்து உபரி நீரை நீரேற்று முறையில், நிலத்தடி குழாய் பதிப்பின்மூலம், அங்குள்ள பொதுப் பணித் துறை ஏரிகள், ஊராட்சி ஒன்றியக் குளங்கள் மற்றும் ஏனைய நீர்நிலைகளில் நிரப்ப வழிவகை செய்யும் திட்டம்தான் அத்திக்கடவு - அவினாசி திட்டம். இந்தத் திட்டம் இன்று நிறைவேற்றப்பட்டு இருக்கிறது என்றால் அதற்கு முக்கியக் காரணம் ஜெயலலிதா தான் என்று சொன்னால் அது மிகையாகாது.
அத்திக்கடவு அவினாசி திட்டத்தை துவக்கி வைத்துப் பேசிய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், இந்தத் திட்டத்தை 1972 ஆம் ஆண்டு செயல்படுத்திட முனைந்து நடவடிக்கைகளை எடுத்தவர் அப்போதைய முதலமைச்சர் மறைந்த திரு. மு. கருணாநிதி என்றும், 1976 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டதன் காரணமாக இந்தத் திட்டத்தில் தொய்வு ஏற்பட்டதாகவும், 1996 ஆம் ஆண்டு இந்தத் திட்டத்தை மீண்டும் நிறைவேற்ற மறைந்த முன்னாள் முதலமைச்சர் திரு. கருணாநிதி அவர்கள் ஆய்வு செய்து ஒப்புதல் வழங்கிய நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதாகவும் தெரிவித்து இருக்கிறார்.
1972 முதல் 1976 வரை நான்கு ஆண்டுகள், 1996 முதல் 2001 வரை ஐந்து ஆண்டுகள் மற்றும் 2006 முதல் 2011 வரை ஐந்து ஆண்டுகள் என கிட்டத்தட்ட 14 ஆண்டுகளை வீணடித்து, தற்போது இந்தத் திட்டத்திற்கு காரணமே தி.மு.க. தான் என்ற மாயத் தோற்றத்தை உருவாக்க முயற்சிப்பது முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பதற்குச் சமம். இந்த 14 ஆண்டுகளில், ஓராண்டைத் தவிர 13 ஆண்டுகள் மத்திய அரசிலும் அங்கம் வகித்த தி.மு.க. மத்திய அரசின் நிதி உதவியுடன் இந்தத் திட்டத்தை நிறைவேற்றி இருக்கலாம். ஆனால், அது பற்றியே நினைவே அப்போது தி.மு.க.வுக்கு இல்லை. இப்போது, ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் அந்தத் திட்டம் தடைபட்டுவிட்டது என்று கூறுகிறார் முதலமைச்சர் அவர்கள். இதெல்லாம் ஒரு சாக்குபோக்கு தானே தவிர, உண்மை ஏதுமில்லை. ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆட்சி மாற்றம் ஏற்படுவது என்பது வழக்கமான ஒன்று என்ற நிலையில், மத்திய அரசில் தனக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தி அந்தத் திட்டத்தை தி.மு.க. அப்போதே நிறைவேற்றி இருக்க வேண்டும். ஆனால், அதைச் செய்ய தி.மு.க. தவறிவிட்டது. இதுதான் உண்மை.
அத்திக்கடவு - அவினாசி திட்டத்தின் பலனை நன்கு அறிந்த மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள், இந்தத் திட்டத்தை 1,862 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்த விரிவான அறிக்கை ஒன்றினை 2011 ஆம் ஆண்டு தயார் செய்து, நிதி உதவி கோரி மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தார்கள். ஆனால், மத்திய அரசு இதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை. எனவே, உடனடியாக மாற்றுத் திட்டமாக, நீர்ப்பாசனம், நிலத்தடி நீர் செறிவூட்டுதல் மற்றும் குடிநீர் வழங்கல் திட்டமாக, அத்திக்கடவு - அவினாசி திட்டத்தை உடனடியாக செயல்படுத்த ஜெயலலிதா ஆணையிட்டார்கள்.
இந்தத் திட்டத்தினை 16-02-2016 அன்று 2016-2017 ஆம் ஆண்டு இடைக்கால நிதிநிலை அறிக்கையில் இடம் பெறச் செய்து அதனை வாசிக்கும் பெருமையை எனக்கு வழங்கியவர் ஜெயலலிதா. இதனைத் தொடர்ந்து, அத்திக்கடவு-அவினாசி திட்டம் தொடர்பான திருத்திய கருத்துருவை மத்திய அரசுக்கு அனுப்ப உத்தரவிட்டதோடு, அந்தத் திட்டத்திற்கான ஆரம்பக் கட்டப் பணிகளையும் தொடங்க உத்தரவிட்டவர் ஜெயலலிதா. பின்னர், 2016 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக்கு பொதுத் தேர்தல் நடந்தபோது, அத்திக்கடவு-அவினாசி திட்டம் நிறைவேற்றப்படும் என்ற வாக்குறுதியையும் ஜெயலலிதா அளித்தார்கள்.
இதனைத் தொடர்ந்து, 2016 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக்கு நடைபெற்ற பொதுத் தேர்தலில் மீண்டும் ஜெயலலிதா ஆறாவது முறையாக முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார்கள். அப்பொழுதே இந்தத் திட்டத்தை நிறைவேற்ற அவர் முனைப்புக் காட்டினார்கள். இருப்பினும், அவர் உடல் நலம் குன்றி, அந்த ஆண்டு இறுதியில் மறைவுற்றதன் காரணமாக இந்தத் திட்டம் சற்று தாமதப்படுத்தப்பட்டு, ஜெயலலிதா வழியில் நடைபெற்ற ஆட்சியில் இந்தத் திட்டத்தினை நிறைவேற்றுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு இன்று இந்தத் திட்டம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.
எனவே, இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டதற்கு முழு முதற் காரணம் ஜெயலலிதா தான் என்பதை இந்தத் தருணத்தில் சுட்டிக்காட்டுவதோடு, இதற்கு வேறு யாரும் சொந்தம் கொண்டாட முடியாது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தத் தருணத்தில், அத்திக்கடவு-அவினாசி திட்டத்தினை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் அறிவிக்கும் வாய்ப்பினை எனக்கு அளித்த ஜெயலலிதாவுக்கு எனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்." என கூறியுள்ளார்.
-
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
கண் சிவந்த ஸ்டாலின்.. அறிவாலயத்தில் இருந்து பறந்த உத்தரவு.. அதிர்ச்சியில் திமுக நிர்வாகிகள் -
சிபிஎம் கட்சிக்கு 5 தொகுதிகள்தான்! கட் அன்ட் ரைட்டாக சொன்ன ஸ்டாலின்! பெ.சண்முகம் வைத்த டிமாண்ட் -
Election Exclusive: வேடசந்தூரில் வென்றால் கோட்டையில் கொடி! மீண்டும் களத்தில் திமுக சிட்டிங் சீனியர்! ஜூனியர்கள் பாவம்! -
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்! -
ஓ.பன்னீர்செல்வத்திடம் ஏடாகூட கேள்வி.. சட்டென டென்ஷனான பெரியகருப்பன் -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்?












Click it and Unblock the Notifications