அவர் உங்களை ஏமாத்திருவார்! ஓபிஎஸ் ஆதரவு மா.செ.க்களுக்கு ’சீனியர்’ வீசிய வலை! எஸ்கேப்பாகும் ‘ஸ்வீட்’!

Subscribe to Oneindia Tamil

சென்னை : அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் தற்போது எடப்பாடி பழனிச்சாமியின் பக்கம் காற்று வீசி வரும் நிலையில் ஓபிஎஸ் தரப்பில் இருக்கும் மாவட்ட செயலாளர்களை தங்கள் தரப்புக்கு இழுக்க முயற்சியை சீனியர் முன்னாள் அமைச்சர் ஒருவர் மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா மரணம் அடைந்ததிலிருந்து அதிமுகவில் யார் பெரியவர் என்று அதிகாரம் முதல் நடந்து வருகிறது. அவர் மரணத்தின் போது முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் சசிகலாவின் தலையிட்டால் பதவி இழந்த நிலையில் அப்போது தர்ம யுத்தத்தை தொடங்கினார்.

தற்போது சசிகலாவால் முதல்வராகப்பட்ட எடப்பாடி பழனிச்சாமி அதிமுக அதிகாரத்தை கைப்பற்ற நினைப்பதால் அவருக்கு எதிராக இரண்டாவது தர்ம யுத்தத்தை நடத்தி வருகிறார். இப்படி கடந்த 7 ஆண்டுகளாக ஓபிஎஸ்ஸின் நிலையில் இப்படித்தான் உள்ளது.

 அதிமுக விவகாரம்

அதிமுக விவகாரம்

கடந்த நான்கு ஆண்டுகளில் ஆட்சியை நடத்த ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவு தேவை என்ற நிலையில் அவருக்கு துணை முதலமைச்சர் கட்சியின் தலைமை பதவியான ஒருங்கிணைப்பாளர் பதவி எடப்பாடி பழனிச்சாமி கொடுத்த நிலையில் தற்போது எதிர்க்கட்சியாகிவிட்ட நிலையில் தற்போது அதிமுகவை முழுமையாக தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்று நினைப்பதாகவும் இது நம்பிக்கை துரோகம் என ஓ பன்னீர்செல்வம் தரப்பு ஆதரவாளர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். அதே நேரத்தில் ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவின் பிரதான கொள்கைகளில் ஒன்றான திமுக எதிர்ப்பு என்ற கொள்கையிலிருந்து விலகி விட்டதாகவும் வெளிப்படையாகவே முதல்வரை பாராட்டுவது மகனை விட்டு முதலமைச்சர் சந்திப்பது என அதிமுகவுக்கு எதிராக செயல்பட்டு வருவதாகவும் இரட்டை தலைமையால் எந்த முடிவும் எடுக்க முடியாமல் அதிமுக உறக்க நிலையில் இருப்பதாக கூறுகின்றனர்.

ஓ.பன்னீர்செல்வம்

ஓ.பன்னீர்செல்வம்

இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவு வட்டம் மீண்டும் உயர் நீதிமன்ற இரு நீதிபதிகளின் தீர்ப்பால் சரியா துவங்கி இருக்கிறது. அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற ஒற்றை நீதிபதியின் உத்தரவால் பல ஒன்றிய செயலாளர்களும் பொதுக்குழு உறுப்பினர்களும் ஒ.பன்னீர்செல்வத்தை சந்தித்து ஆதரவு தெரிவித்து வந்த நிலையில் தற்போது மீண்டும் எடப்பாடி பழனிச்சாமியின் பக்கம் அரசியல் ஆதரவு காற்று வீச தொடங்கி இருக்கிறது. இதனை எடுத்து அவருக்கு மீண்டும் ஆதரவு தர ஓபிஎஸ் தரப்பு நிர்வாகிகள் திட்டமிட்டு வருகின்றனர்.

ஆதரவு மா.செ.க்கள்

ஆதரவு மா.செ.க்கள்

முதன்முதலாக ஒற்றை தலைமை விகாரம் எழுந்த போது அதிமுகவுக்கு தேனி சையது கான், திருச்சி வெல்லமண்டி நடராஜன், கன்னியாகுமரி அசோகன் உள்ளிட்ட ஆறு மாவட்ட செயலாளர்கள் ஆதரவளித்து வந்தனர். தற்போது வரை அவர்கள் ஓ.பன்னீர்செல்வம் தரப்பிலேயே இருக்கின்றனர். இந்த நிலையில் தான் உச்ச நீதிமன்றம் தீர்ப்பும் எடப்பாடி பழனிச்சாமிக்கு சாதகமாக வர வாய்ப்புள்ளதாக பல்வேறு அரசியல் நிபுணர்களும் சட்ட நிபுணர்களும் கூறி வருகின்றனர். இன்னும் வழக்கில் தொடுக்காத நிலையில் தற்போது பரவி வரும் தகவலால் ஓபிஎஸ் தரப்பு நிர்வாகிகள் சற்றே கலக்கத்தில் உள்ளனர்.

 சீனியர்கள் தீவிரம்

சீனியர்கள் தீவிரம்

எனவே எடப்பாடி தரப்பிலேயே தஞ்சம் புகுந்து விடலாமா என இரண்டு மாவட்ட செயலாளர்கள் யோசித்து வருவதாகவும், அவர்களிடம் மூத்த முன்னால் அமைச்சர் ஒருவர் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. ஓபிஎஸ்-இன் ஆதரவட்டத்தை முற்றிலுமாக சரித்து அதிமுகவின் எதிர்ப்பே இல்லாத தலைவராக வரவேண்டும் என நினைக்கும் எடப்பாடி பழனிச்சாமி இதற்காக தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.குறிப்பாக ஓ பன்னீர்செல்வம் தரப்பில் இருக்கும் நிர்வாகிகளை முழுமையாக தங்கள் தரப்புக்கு கொண்டு வர வேண்டும் என முனைப்பு காட்டுகிறார். ஏற்கனவே ஒரு முன்னாள் அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில் தற்போது மேலும் பல சீனியர்களை களமிறக்கி உள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+