மதித்தால் மதிப்போம்! மிதித்தால் மிதிப்போம்! பாஜகவை நம்பி நாங்கள் இல்லை! -பெங்களூர் புகழேந்தி!
சென்னை: பாஜகவை நம்பி நாங்கள் இல்லை என்றும் மதித்தால் மதிப்போம், மிதித்தால் மிதிப்போம் எனவும் ஓ.பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த பெங்களூர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளர் என்றும், ஓபிஎஸ் ஐ முன்னாள் முதல்வர் என்றும் அண்ணாமலை குறிப்பிட்டால் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்போம் எனவும் தெரிவித்துள்ளார். சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது அவர் கூறியதாவது;

''நேற்றைய தினம் தமிழகம் முழுவதும் கொடநாடு கொலை, கொள்ளை குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி அமமுக ஆதரவோடு போராட்டம் நடத்தினோம். அம்மா வாழ்ந்த இடத்தில் கொலை கொள்ளை நடந்துள்ளது. முதல்வர் ஸ்டாலின் 90 நாட்களில் குற்றவாளிகள் கண்டறியப்படுவார்கள் எனக் கூறியிருந்தார்.''
''கொடநாடு எஸ்டேட் பற்றின் ஜெயக்குமார் ஒன்றும் தெரியாமல் பேசி வருகிறார். இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் கூட்டணியில் இருக்கிறார்கள் என்று அண்ணாமலை பேசுகிறார் . ஆனால் என்டிஏ கூட்டம் நடந்தபோது ஓபிஎஸ்க்கு அழைப்பு விடுக்கவில்லை. எனவே அன்புடன் உங்களது கூட்டணி முடிந்து விட்டது. "தாய்ப்பகை குட்டி உறவு" என்பது வேண்டாம். மறுநாள் நடந்த குளிர்கால கூட்டத் தொடரின் இப்போது ஃப்ளோர் லீடர் ரவீந்திரநாதை அழைக்கிறீர்கள். ''
''உங்களை நம்பி நாங்கள் இல்லை. நீங்கள் மதித்தால் மதிப்போம், மிதித்தோல் மிதிப்போம் என்ற கொள்கையை கொண்டவர் எங்கள் அண்ணன் ஓபிஎஸ். அண்ணாமலை பல்வேறு இடங்களில் எடப்பாடி பழனிசாமியை பொதுச் செயலாளர் என்று குறிப்பிட்டு வருகிறார். ஆனால் ஓபிஎஸ்-ஐ ஒருங்கிணைப்பாளர் என்று குறிப்பிடுவது இல்லை. அண்ணாமலை மீண்டும் எடப்பாடி பழனிசாமியை பொதுச் செயலாளர் என்றும், ஓபிஎஸ்-ஐ முன்னாள் முதல்வர் என்றும் குறிப்பிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுப்போம்.''
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications