ஜெயலலிதாவின் கனவு.. நிறைவேற்றும் பிரதமர் மோடிக்கு நன்றி.. மகளிருக்கு 33% இடஒதுக்கீடு பற்றி ஓபிஎஸ்!
சென்னை: நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் மகளிருக்கு 33 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கும் சட்டமுன்வடிவு ஜெயலலிதாவின் கனவு என்றும், அதனை நிறைவேற்றும் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிப்பதாகவும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு தெரிவித்துள்ளார்.
மகளிருக்கு 33 சதவிகித இடஒதுக்கீடு வழங்க வழிவகை செய்யும் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்த நிலையில், நேற்று இந்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் மசோதா குறித்து அரசியல் தலைவர்கள் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இந்த மசோதா, ஜெயலலிதாவின் கனவு எனத் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால் அறிவில் ஒங்கி இவ்வையகம் தழைக்குமாம் என்ற மகாகவி பாரதியாரின் வரிகளுக்கு இணங்க, மகளிர் முன்னேற்றம் மலரவும், பெண்ணடிமை தீரவும், பெண்ணுரிமை வாழவும் பாடுபடுகின்ற இயக்கமாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் விளங்குகிறது. 1972 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர், அதிமுகவை துவக்கியபோது உருவாக்கப்பட்ட கொள்கை விளக்கத்திலேயே நாடாளுமன்ற, சட்டமன்ற அமைப்புகளில் குறைந்தது 25 விழுக்காடு இடங்கள் மகளிருக்கு ஒதுக்கீடு அளிக்கவும், கொள்கை வகுக்கும் அமைப்புகளில் மகளிருக்கு போதிய பிரதிநிதித்துவம் வழங்கவும், ஆண்களுக்கு நிகராக பெண்கள் அனைத்து துறைகளிலும் பங்கு பெறவும் வழிவகை செய்யப்பட்டது.
ஜெயலலிதா பொதுச் செயலாளராக பொறுப்பேற்ற பின்னர், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அமைப்புகளில் பெண்களுக்கு 33 விழுக்காடு இடஒதுக்கீடு அளிக்கப்பட்டது. 1991 ஆம் ஆண்டு ஜெயலலிதா முதன் முறையாக முதலமைச்சராக பொறுப்பேற்றபோது, 31 பெண் சட்டமன்ற உறுப்பினர்கள், அதாவது கிட்டத்தட்ட 15 விழுக்காடு பெண்கள் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை பொறுத்த வரையில், ஆரம்பத்திலிருந்தே அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆதரவு அளித்து வருகிறது.
முந்தைய காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் இந்த மசோதா மாநிலங்களவையில் வாக்கெடுப்பிற்கு விடப்பட்டபோது அதனை ஆதரித்த இயக்கம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்பதை இந்தத் தருணத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இருப்பினும், இந்த மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்படாமல் கிடப்பில் போடப்பட்டதை கண்டித்து அறிக்கை வெளியிட்டதோடு இந்தச் சட்டமுன்வடிவு உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும் என்று வலியுறுத்தியவர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா.
இந்தச் சூழ்நிலையில், கிட்டத்தட்ட 13 ஆண்டுகளுக்குப் பிறகு, புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் முதல் அலுவலாக நாடாளுமன்றத்திலும், சட்டமன்றங்களிலும் மகளிருக்கு 33 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா இன்று மக்களவையில் நிறைவேற்றப்பட உள்ளது. என்பதும், நாளை மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட உள்ளது என்பதும் இரட்டிப்பு மகிழ்ச்சியை அளிக்கிறது.
ஜெயலலிதாவின் கனவினை நிறைவேற்றும் வகையில், நாடாளுமன்றத்திலும், சட்டமன்றங்களிலும் மகளிருக்கு 33 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்டமுன்வடிவிற்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தனது முழு ஆதரவினை நல்கும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். ஜெயலலிதா அவர்களின் கனவினை நிறைவேற்றவுள்ள பாரதப் பிரதமர் அவர்களுக்கு அஇஅதிமுக சார்பில் எனது பாராட்டினையும், நெஞ்சார்ந்த நன்றியினையும் தெரிவித்துக் கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.
-
சர்ப்ரைஸ் வானதி சீனிவாசன்.. நோஸ் கட் அண்ணாமலை.. 2021 தேர்தல் பாஜக பிளாஷ்பேக் -
எச்.ராஜாவுக்கு ஆளுநர் பதவி? சென்னையில் உறுதி கொடுத்த பிரதமர் மோடி.. பாஜக மேலிடம் எடுத்த முடிவு! -
வேட்பாளர் லிஸ்டில் பெயர் இல்லை.. அண்ணாமலை இன்று மாலையே முக்கிய மூவ்.. வியந்து போன வானதி.. அசத்தல் -
Annamalai: தமிழக சட்டசபை தேர்தல்.. ஒரு வழியாக பாஜகவின் "அந்த" பட்டியலில் இடம்பெற்ற அண்ணாமலை பெயர்! -
"அண்ணாமலை ஆதரவாளரா?You are rejected!" புதிய பிரச்சார வாகனத்துடன்நொந்து போன அமர்பிரசாத் ரெட்டி ! -
இங்க இருக்குற திருவண்ணாமலைக்கு ஏர்போர்ட்.. அந்த பேச்சு பேசின அஸ்வத்தாமன் பெயர் லிஸ்டில் இல்லையே! -
அண்ணாமலைக்கு 'கல்தா'.. எடப்பாடியின் செல்லப்பிள்ளைகளுக்கு 'சீட்' .. பாஜகவின் திடீர் முடிவு.. ஏன்? -
நேரில் வாங்க அண்ணாமலை.. பாஜக மேலிடம் போட்ட திடீர் உத்தரவு.. சென்னையில் மோடியுடன் முக்கிய மீட்டிங் -
செருப்பு போடாதவர்.. 75 வயதில் முதல்முறை எம்எல்ஏ.. யார் இந்த நாகர்கோவில் பாஜக வேட்பாளர் காந்தி? -
ஊருக்கு முன்பே வேட்புமனு தாக்கல் செய்த தஞ்சை பாஜக நிர்வாகி முரளீதரன்! நயினார் எடுத்த ஆக்ஷன்! -
அண்ணாமலைக்கு இந்த பவர்ஃபுல் போஸ்ட்டிங் தர்றாரா மோடி.. கோவை பிடிவாதம் உடைந்ததா? லாபமா? நஷ்டமா -
திருநெல்வேலி 35 வருட அடையாளம் சார்.. யார் இந்த நயினார் நாகேந்திரன்.. சாத்தூரில் மாஸ்டர் பிளான்












Click it and Unblock the Notifications