சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வைத்த குறி தப்பாது! உதயநிதி ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு கொடுத்த ஒடிசா அரசு! பயணப் பின்னணி!

Google Oneindia Tamil News

சென்னை: அரசு முறை பயணமாக ஒடிசா சென்ற தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு அம்மாநில அரசு உற்சாக மிகு வரவேற்பு கொடுத்திருக்கிறது.

ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கை சந்தித்து பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழகத்தில் விளையாட்டுத்துறை மேம்பாட்டுக்காக தமிழக அரசு முன்னெடுத்து வரும் திட்டங்கள் பற்றி பேசியிருக்கிறார்.

ஒடிசாவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை (ஆண்கள்) ஹாக்கி போட்டியை காண சிறப்பு விருந்தினராக வருகை தருமாறு ஒடிசா அரசிடம் இருந்து வந்த அழைப்பை ஏற்று உதயநிதி அங்கு சென்றது குறிப்பிடத்தக்கது.

உதயநிதி மாதிரி நானும் கல்லை எடுத்துட்டு போய்ருவேன்.. விமான நிலையம் கட்ட முடியாது : சீமான் ஆவேசம்! உதயநிதி மாதிரி நானும் கல்லை எடுத்துட்டு போய்ருவேன்.. விமான நிலையம் கட்ட முடியாது : சீமான் ஆவேசம்!

ஒடிசா பயணம்

ஒடிசா பயணம்

உலக நாடுகளில் 16 நாடுகள் பங்கேற்கின்ற 15-வது உலகக் கோப்பை (ஆண்கள்) ஹாக்கி போட்டியானது ஒடிசா மாநிலத்தில் உள்ள புவனேஸ்வர் மற்றும் ரூர்கேலா ஆகிய இடங்களில் 13.01.2023 முதல் 29.01.2023 வரை நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டிகளை காணவும், ஒடிசா மாநிலத்தில் உள்ள விளையாட்டு அரங்கங்களின் கட்டமைப்புகளை பார்வையிடவும் சிறப்பு விருந்தினராக தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று முன் தினம் ஒடிசா மாநிலம் சென்றார்.

உற்சாக வரவேற்பு

உற்சாக வரவேற்பு

அங்கு அவரை ஹாக்கி இந்தியா நிர்வாகி சேகர் மனோகரன், ஹாக்கி இந்தியா செயல் இயக்குநர் கமாண்டர் ஸ்ரீ வத்ஸா உள்ளிட்டோர் புவனேஸ்வர் விமான நிலையத்தில் வரவேற்றனர். ஒடிசா மாநிலத்தின் உணவுத் துறை அமைச்சர் அட்னு சபயாசச்சி நாயக், ஒடிசா மாநில வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை முதன்மைச் செயலாளர் மதிவதனன் ஆகியோர் அமைச்சர் உதயநிதி பங்கேற்ற நிகழ்வுகளில் உடனிருந்து கவனித்துக் கொண்டனர்.

கலிங்கா மைதானம்

கலிங்கா மைதானம்

அதைத்தொடர்ந்து, நேற்று புவனேஸ்வரில் உள்ள கலிங்கா விளையாட்டு அரங்கத்தில் கால்பந்து, ஹாக்கி, தடகள மைதானம், நீச்சல் குளம் மற்றும் துப்பாக்கி சுடும் அரங்கம் ஆகியவற்றை பார்வையிட்டு உள் கட்டமைப்பு வசதிகள் மற்றும் பயன்பாடு குறித்து அமைச்சர் உதயநிதி கேட்டறிந்தார். பின்னர், ஒடிசா மாநில விளையாட்டுத் துறை அமைச்சர் துஷார்கன்டி பெகரா மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

 நவீன் பட்நாயக்

நவீன் பட்நாயக்

இதனிடையே இந்தப் பயணத்தின் போது ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கை சந்தித்து பேசிய அமைச்சர் உதயநிதி, தமிழகத்தில் விளையாட்டுத்துறை மேம்பாட்டுக்காக தமிழக அரசு முன்னெடுத்து வரும் திட்டங்கள் பற்றி எடுத்துக்கூறினார்.

English summary
Tamil Nadu Youth Welfare and Sports Development Minister Udhayanidhi Stalin, who went to Odisha on a state visit, has been given a warm welcome by the state government.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X