ஒடிசா ரயில் விபத்து..பிரதமருக்கே பொறுப்பு உள்ளது..இதை செய்வதுதான் சரியாக இருக்கும்-திருமாவளவன் நறுக்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரயில்வே துறையை தனியார் மயமாக்க வேண்டும் என்ற மிகப்பெரிய முனைப்பு மோடி அரசுக்கு உள்ளது. இதனால் இதுபோன்ற அலட்சியத்துடன் அவர்கள் இருக்கிறார்கள் என்ற விமர்சனங்கள் இருக்கவே செய்கின்றன. இதை புறம் தள்ள இயலவில்லை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

மதுரை விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- ஒடிசா ரயில் விபத்து உலக அரங்கில் இந்தியாவுக்கு பெரும் தலைகுனிவை ஏற்படுத்தியிருக்கிறது. அதி நவீன தொழில் நுட்பங்கள் வளர்ந்துள்ள இன்றைய கால சூழலில் நடைபெற்றுள்ள இந்த விபத்து நடைபெற்று இருப்பது இந்திய ஆட்சி நிர்வாகத்தின் பலவீனத்தை வெளிப்படுத்துவதாக உள்ளது.

Odisha train accident: Railway minister should resign: VCK Thirumavalavan

விபத்துக்களை தடுக்கக் கூடிய கவாச் பாதுகாப்பு கருவியை முழு அளவில் பயன்படுத்தியிருந்தால் இந்த விபத்தை தடுத்து இருக்க முடியும். ஆட்சியாளர்கள் மக்கள் நலன், பாதுகாப்பு போன்றவற்றில் அக்கறை காட்டுவதை விட வெறுப்பு அரசியலை மேற்கொள்வதில்தான் அக்கறை கொண்டு இருக்கிறார்கள். ரயில்வே துறையை தனியார் மயமாக்க வேண்டும் என்ற மிகப்பெரிய முனைப்பு மோடி அரசுக்கு உள்ளது.

இதனால் இதுபோன்ற அலட்சியத்துடன் அவர்கள் இருக்கிறார்கள் என்ற விமர்சனங்கள் இருக்கவே செய்கின்றன. இதை புறம் தள்ள இயலவில்லை. எனவே அரசு இதற்கு தார்மீக பொறுப்பேற்க வேண்டும். ரயில்வே அமைச்சர் உடனடியாக பதவி விலக வேண்டும். சொல்லப்போனால் பிரதமரே இதற்கு தார்மீக பொறுப்பு உடையவர். ரயில்வே துறை அமைச்சர் பதவியில் இருந்து கொண்டே உண்மையை கண்டறிய முடியாது.

ஆகவே, உண்மை நிலவரத்தை கண்டறிய வேண்டும், உயர்மட்ட விசாரணையை அமைக்க வேண்டும். அப்போது ரயில்வே அமைச்சர் அந்த பொறுப்பில் இருந்து விலகுவதுதான் சரியாக இருக்கும். எதிர்காலத்தில் இதுபோன்ற விபத்துக்கள் நடக்காமல் இருக்க அதி நவீன தொழில் நுட்ப பாதுகாப்பு கருவிகளை பயன்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று இந்திய அரசுக்கு வேண்டு கோள் விடுக்கிறோம்.

Odisha train accident: Railway minister should resign: VCK Thirumavalavan

அந்த மண்டலத்தை சேர்ந்த ரயில்வே பொது மேலாளர் ரயில் தண்டவாளங்களில் நிறுவப்பட்டுள்ள சிக்னல்கள் முறையாக இயங்கவில்லை கோளாறுகள் இருக்கின்றன என்று கடிதம் எழுதியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதற்கு ரயில்வே அமைச்சகத்தில் இருந்து எந்த வித பதிலும் இல்லை என்பதையும் அவர் பதிவு செய்து இருக்கிறார். எனவே இது இந்திய ஆட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தினால் நடந்துள்ளது என்பதை அறிய முடிகிறது.

விபத்து நடந்தவுடன் தமிழக முதல்வர் உடனடியாக விரைவாக நடவடிக்கையில் ஈடுபட்டது பாராட்டுதலுக்கு உரியது. அந்த நாளை துக்க நாளாக அறிவித்தது மட்டும் இன்றி முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு தொடக்க விழா நிகழ்ச்சிகள் அனைத்தையும் ரத்து செய்து விட்டு இரண்டு அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் குழுவையும் அனுப்பி வைத்து இருக்கிறார். ஒடிசா மாநில அரசோடு இணைந்து மீட்பு பணிகளில் ஈடுபடுவதற்கு உரிய நடவடிக்கையிலும் மேற்கொண்டு இருக்கிறார் என்ற நடவடிக்கைகள் பாரட்டுதலுக்கு உரியது. இவ்வாறு அவர் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+