டாடா.. பாய்.. பாய்.. ரத்தன் டாடா மறைவுக்கு பேடிஎம் சிஇஓ போட்ட பதிவு.. கடும் எதிர்ப்பால் வருத்தம்
சென்னை: பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு பேடிஎம் தலைமை செயல் அதிகாரி விஜய் ஷேகர் சர்மா, ‛‛ஓகே டாடா பாய் பாய்’’ என இரங்கல் தெரிவித்தது சர்ச்சையானது. விஜய் ஷேகர் சர்மாவின் இந்த பதிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அவர் அதனை டெலிட் செய்தார். அதன்பிறகு பேடிஎம் சார்பில் வருத்தம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நம் நாட்டின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவராக இருந்தவர் ரத்தன் டாடா. 86 வயது நிரம்பிய இவர் நேற்று முன்தினம் இரவில் காலமானார். வயது முதிர்வால் ஏற்பட்ட உடல்நல பிரச்சனையால் ரத்தன் டாடா மும்பை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.

தனியார் மருத்துவமனையின் ஐசியூவில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அவர் காலமானார். நேற்று அவரது உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். அதன்பிறகு இறுதி சடங்குகளுடன் அவரது வழக்கப்படி ஈமக்காரியங்கள் நடந்து முடிந்துள்ளது.
தொழிலாளர்களுக்கு ஓடிஓடி உதவிய முதலாளி.. மறைந்தாலும் மனதை விட்டு நீங்காத ரத்தன் டாடாவின் மனிதநேயம்
தொழிலதிபர் டாடா ஏழைகளுக்கு உதவி செய்வதில் அதிக அக்கறை காட்டினார். தனது நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள், சாதாரண ஏழை மக்களுக்கு என்று நிதி உதவி செய்வதில் தாராளம் காட்டினார். தனது சம்பாத்தியத்தில் பெரும் தொகையை ஒவ்வொரு ஆண்டும் அவர் நன்கொடையாக அளித்து வந்தார். இதனால் தான் பிற தொழிலதிபர்களை காட்டிலும் அவரது சொத்து மதிப்பு குறைவாக இருந்தது. மாறாக அவர் மக்களின் மனங்களில் இடம் பிடித்தார்.
அந்த 6 வார்த்தை.. ரத்தன் டாடாவின் கடைசி இன்ஸ்டா பதிவை அனைவரும் பகிர்வது ஏன்? உருக்கமான தகவல்
இதனால் தான் ரத்தன் டாடாவின் மறைவுக்கு அனைத்து தரப்பு மக்களும் இரங்கல் தெரிவித்து வலைதள பக்கங்களில் நேற்று பதிவு செய்தனர். அதேபோல் ரத்தன் டாடா மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், முதல்வர் ஸ்டாலின் உள்பட பல்வேறு மாநில முதல் அமைச்சர்கள் இரங்கல் தெரிவித்தனர். மேலும் ரத்தன் டாடாவுடன் இருந்த உறவு பற்றி அவர்கள் தெரிவித்து புகழஞ்சலி செலுத்தி உள்ளனர். அதேபோல் கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை,அம்பானி, அதானி, ஆனந்த் மஹிந்திரா உள்பட பல்வேறு தொழிலதிபர்கள் ரத்தன் டாடா மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் தான் பேடிஎம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி (சிஇஓ) விஜய் ஷேகர் சர்மாவும் ரத்தன் டாடாவுக்கு தனது எக்ஸ் பக்கத்தில் இரங்கல் தெரிவித்தார். அவரது இந்த பதிவு சர்ச்சையாகி கடும் எதிர்ப்பை சம்பாதித்தது. இதுதொடர்பாக விஜய் ஷேகர் சர்மா வெளியிட்ட பதிவில், ‛‛அனைத்து ஜெனரேஷனை சேர்ந்தவர்களையும் ஊக்குவித்த லெஜன்ட். அடுத்த தலைமுறைக்கான தொழிலதிபர்கள் பண்பான இந்திய தொழிலதிபரிடம் கலந்துரையாடுவதை மிஸ் செய்ய உள்ளனர். சல்யூட் சார். ஓகே டாடா பாய்.. பாய்..’’ என கூறியுள்ளார்.
டாடா அறக்கட்டளையின் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்ட நோயல் டாடா.. யார் இவர்? பின்னணி
இந்த பதிவில் டாடா.. பாய் பாய்.. என விஜய் ஷேகர் சர்மா கூறியது தான் சர்ச்சையானது. பலரும் அவரை விமர்சனம் செய்ய தொடங்கினர். இன்னும் சிலர் பேடிஎம் செயலியை டெலிட் செய்வதாகவும், செய்து விட்டதாவும் கொந்தளித்தனர். இதையடுத்து விஜய் ஷேகர் சர்மா அந்த பதிவை டெலிட் செய்தார். அதுமட்டுமின்றி இந்த பதிவுக்கு பேடிஎம் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் வருத்தம் தெரிவித்து இருந்தது. பேடிஎம் நியூஸ் ரூம் எனும் அதிகார்ப்பூர்வ எக்ஸ் பக்கத்தில், ‛‛ ரத்தன் டாடாவை பற்றிய பதிவு யாரையும் புண்படுத்தி இருந்தால் ஆழ்ந்த வருத்தம் தெரிவித்து கொள்கிறோம். அவரது மறைவு நாட்டுக்கு மிகப்பெரிய இழப்பாகும்.
நாங்கள் உண்மையிலேயே வருத்தப்படுகிறோம். ரத்தன் டாடாவின் நேர்மை, இரக்கம், கருணை என்பது ஒவ்வொரு இந்தியர் மனதில் முத்திரையாக பதிந்துள்ளது. அவர் எப்போதும் நம் இதயத்தால் போற்றப்படுவார். அவரது லீகஸி தொடர்ந்து நம்மை வழிநடத்தும். ரத்தன் டாடா எப்போதும் இந்தியாவின் ரத்னா. இந்தியாவின் ஜாம்பவான் ஆவார்'' என குறிப்பிட்டு கிளம்பிய எதிர்ப்பை சமாளித்தது பேடிஎம் நிறுவனம்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications