பழைய ஓய்வூதியமும் வரல.. தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு திருமண அட்வான்ஸ் ரூ.5 லட்சம் என்னாச்சு
சென்னை: சமீபத்தில் நடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் தமிழக முதல்வரின் அறிவிப்புக்கு பிறகு, அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவருக்கும் திருமண முன்பணம் ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும் என்று அதிரடியாக அறிவித்திருந்தார்.. இது ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைத்து அரசு ஊழியர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்துவந்த நிலையில், தற்போது இந்த திட்டம் குறித்த முக்கிய கோரிக்கை ஒன்று அரசுக்கு விடுக்கப்பட்டுள்ளது. என்ன நடந்தது? அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் என்ன சொல்கிறார்கள்?
அரசு ஊழியர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் பொருட்டு பல்வேறு நலத்திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. அவற்றில் மிக முக்கியமானது முன்பணத் திட்டமாகும்..

அந்தவகையில், தமிழக அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் அவர்களின் பிள்ளைகளுக்கான திருமண முன்பணம் தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது.
கடந்த 1989ம் ஆண்டில், அரசு ஊழியர்களின் மகன் திருமணத்துக்கு ரூ.3000, பெண் ஊழியர் அல்லது மகள் திருமணத்துக்கு ரூ.5000 அட்வான்ஸாக வழங்கப்பட்டது. இதற்கு பிறகு 1995ம் ஆண்டு, இந்த தொகை ரூ.6000 மற்றும் 10000 ஆக உயர்த்தி அறிவிக்கப்பட்டது.
திருமண உதவித்தொகை
சட்டப்பேரவையில் கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரின்போது, 110 விதியின்கீழ் பல்வேறு அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டிருந்தார்..
அதில், ''அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் தமது பணிக்காலத்தில் தேவையின் அடிப்படையில் திருமண முன்பணமாக இதுவரை பெண் ஊழியர்களுக்கு ரூ.10000 மற்றும் ஆண்களுக்கு ரூ.6000 வழங்கப்படுகிறது. இதனை பல மடங்கு உயர்த்தி அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் அனைவருக்கும் பொதுவாக ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும்'' என்று அதிரடியாக அறிவித்திருந்தார்.
கடந்த மாதம் அரசாணை
அதன்படியே, அரசு ஊழியர்களின் திருமணத்திற்காக வழங்கப்படும் திருமண முன்பணத்தை, 5 லட்சம் ரூபாயாக உயர்த்தி அறிவிப்பும் வெளியாகி, இந்த திட்டத்தை செயல்படுத்த, நிதித்துறை அரசாணையும் கடந்த ஜூன் மாதம் வெளியிடப்பட்டது..
பணி ஓய்வு பெறுவதற்கு, குறைந்தபட்சம் 5 வருடங்கள் உள்ள அரசு ஊழியர்களுக்கு, இந்த திருமண முன்பணம் கிடைக்கும். திருமணத்திற்கு 2 மாதங்களுக்கு முன்பு, இந்த உதவித்தொகை விடுவிக்கப்படும். இது, 36 தவணைகளில் வசூல் செய்யப்படும் என்றும் கூறப்பட்டு, இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் அரசு வெளியிட்டிருந்தது.
அட்வான்ஸ் பணம் எப்போது
கணவன், மனைவி, பெற்றோர் அரசு ஊழியர்களாக இருப்பின், ஒரு குடும்பத்தில் ஒரு முறை மட்டுமே முன்பணம் பெற முடியும் என்பது போன்ற வழிகாட்டுதல்களும் வழங்கப்பட்டன..
ஆனால், பண்டிகை முன்பணம், திருமண முன்பணம் திட்டங்கள் தொடர்பாக அரசாணை வெளியிட்டும், இதுவரை அதற்கான கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யாததால் இத்திட்டங்களை பெறுவதில் ஆசிரியர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது..
பல ஆசிரியர்கள் திருமண முன்பணத்திட்டத்திற்கு விண்ணப்பித்துள்ளனர்.. இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லாததால் அவர்கள் ஏமாற்றத்தில் காத்திருக்கிறார்கள்..
அக்கவுண்ட் ஹெட்
இதுகுறித்து பள்ளி தலைமையாசிரியர்கள் தரப்பில் சொல்லும்போது, "அரசு பள்ளிகளுக்கு சில்லறை செலவினம், மின் கட்டணத் தொகை, ஆசிரியர், தலைமையாசிரியர்களுக்கான சம்பளம், அகவிலைப்படி உள்ளிட்டவற்றுக்கான நிதியை ஜூன், ஜூலையில் அந்தந்த பள்ளிகளின் "கணக்கு தலைப்புக்கு" (அக்கவுண்ட் ஹெட்) ஒதுக்கீடு செய்யப்படும்.
ஆனால் இந்த வருடமும் பழைய தொகையே ஒதுக்கப்பட்டுள்ளது. பண்டிகை முன்பணம் ரூ.20000, திருமண முன்பணம் ரூ.5 லட்சம் என உயர்த்தியதால் வழக்கத்தை விட அதிக எண்ணிக்கையில் ஆசிரியர்கள் இத்தொகையை பெறுவதற்காக விருப்பமாக உள்ளனர் .. அரசாணை வெளியானதுமே பல பள்ளிகளில் திருமண முன்பணம் கேட்டும் ஆசிரியர்கள் விண்ணப்பித்திருக்கிறார்கள்.
கூடுதல் நிதி - முன்பணம்
ஆனால், அதற்கான கூடுதல் ஒதுக்கீடு பெறப்படவில்லை என்கிறார்கள். அதேபோல, அதிகரிக்கப்பட்ட கூடுதல் தொகையை IFHRMSல் பதிவேற்றம் செய்வதற்கான வசதியையும் இதுவரை அப்டேட் செய்யவில்லை.
தீபாவளியை முன்னிட்டு செப்டம்பரில் அதற்கான முன்பணம் ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும். அதற்கும் எல்லா ஆசிரியர்களுக்கும் வழங்கும் வகையில் நிதி இருப்பு இல்லை. அதனால் அரசு இத்திட்டங்களுக்கான கூடுதல் தொகையை பள்ளிகளுக்கு விரைவில் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
நிதிப்பாதுகாப்பு
தீபாவளி முன்பணமே விருப்பமுள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும் கிடைக்குமா என்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ள நிலையில், திருமண முன்பணம் கேட்டு காத்திருப்போருக்கு எப்போது தொகை வழங்கப்படும் என தெரியவில்லை.
திருமண முன்பண உயர்வு தேவை என்பது அரசு ஊழியர்களின் நீண்ட கால கோரிக்கையாக இருந்து வந்தது. தற்போது அது ஏற்றுக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட்டும் இன்னும் செயல்பாட்டுக்கு வராமல் உள்ளது, அரசு ஊழியர்களிடம் கவலையை தந்து வருகிறது..!
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications