அரசு எச்சரிக்கையையும் மீறி.. தமிழகம் முழுவதும் ஜாக்டோ ஜியோவினர் வேலைநிறுத்த போராட்டம்
சென்னை: 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னை எழிலகத்தில் அரசு ஊழியர்கள் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதேபோல் மதுரை உள்பட பல்வேறு மாவட்டங்களில் அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். அப்போது அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். முன்னதாக வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்கும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை என தலைமை செயலாளர் முருகானந்தம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஜாக்டோ ஜியோ (JACTO-JIO) என்பது தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் சமூக, பொருளாதார உரிமைகளை பாதுகாப்பதற்காக உருவான ஒருங்கிணைந்த இயக்க அமைப்பாகும். இந்த அமைப்பானது ஊழியர்களின் வேலைநிலை, ஓய்வூதியம், சம்பளம் மற்றும் அரசு நலக் கோரிக்கைகள் தொடர்பாக ஒருங்கிணைந்து போராட்டங்கள் நடத்துகிறது.

10 அம்ச கோரிக்கைகள்
அந்த வகையில் தற்போதும், பழைய ஓய்வூதியத் திட்டத்தினை அமல்படுத்த வேண்டும், தொகுப்பூதியம், மதிப்பூதியம், ஆசிரியர்களுக்கான பதவி உயர்வுகள், ஊதிய முரண்பாடுகளை களைதல், காலிப்பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறது. கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததால் இன்று ஒரு நாள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதாக ஜாக்டோ ஜியோ அறிவித்து இருந்தது.
அடையாள வேலைநிறுத்தம்
அதன்படி இன்று காலையில் இருந்தே ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டத்திலி ஈடுபட்டனர். பணிகளை புறக்கணித்து, ஊழியர்கள் பதாகைகள் ஏந்தியபடி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
முன்னதாக ஜாக்டோ-ஜியோ மாநில மையம் சார்பில் கூறப்பட்டிருப்பதாவது:-"கோரிக்கைகளை வலியுறுத்தி எப்போதெல்லாம் போராட்டத்தை எடுக்கிறோமோ, அப்போதெல்லாம் அழைத்து பேசி ஆறுதல் தான் படுத்துகிறார்களே தவிர கோரிக்கைகளை நிறைவேற்றுவதில்லை. கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி அமைச்சர்கள் கொண்ட குழு எங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியது. மார்ச் மாதமும் முதல்வர் பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக நம்பிக்கை அளித்தார்.
இதன் அடிப்படையில்12 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசு பணியாளர்களின் உணர்வு மட்டத்தை அறிந்து எஞ்சிய சில மாதங்களே உள்ள நிலையில் எங்களுடைய கோரிக்கைகள் நிறைவேற்றாத காரணத்தினால், இன்று செவ்வாய்க்கிழமை ஒருநாள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்க இருக்கிறோம்" என்று கூறப்பட்டுள்ளது.
ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்
இதற்கிடையே வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்கும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தலைமைச் செயலாளர் முருகானந்தம் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அனைத்து அரசுத் துறை செயலாளர்கள், துறைத் தலைவர்கள், மாவட்ட கலெக்டர்களுக்கு தலைமைச் செயலாளர் முருகானந்தம் நேற்று கடிதம் அனுப்பியுள்ளார். இதில் கூறப்பட்டிருப்பதாவது:-
சில அங்கீகாரமற்ற மற்றும் அங்கீகரிக்கப்பட்ட சங்கத்தினர் சில கோரிக்கைகளை வலியுறுத்தி, இன்று ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்க இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. வேலை நிறுத்தப்போராட்டம் அல்லது போராட்டம் நடத்துவதாக அச்சுறுத்துவது அல்லது போராட்டம், ஆர்ப்பாட்டம் போன்ற எதிர்ப்பை காட்டும் ஏதாவது நடைமுறைகளில் அரசு ஊழியர்கள் பங்கேற்பது போன்றவற்றின் மூலம் அரசின் அன்றாட நடைமுறைக்கு பாதிப்பு ஏற்படுத்துவது, தமிழ்நாடு அரசு ஊழியர்கள் விதிகள்-1973-ன் 20, 22 மற்றும் 22-ஏ ஆகிய பிரிவுகளை மீறியதாக கருதப்படும்.
ஒழுங்கு நடவடிக்கை
எனவே உங்கள் கீழ் பணியாற்றும் ஊழியர்களிடம் நீங்கள், அரசு விதிகளை மீறும் செயலில் ஈடுபடக்கூடாது என்றும் மீறினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வலியுறுத்த வேண்டும். திட்டமிட்டபடி இன்றோ அல்லது வேறொரு நாளிலோ அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் சங்கத்தினர் நடத்தும் போராட்டத்தில் யாரும் பங்கேற்றால், அதை அங்கீகரிக்கப்படாத விடுப்பாக கருத வேண்டும்.
வேலை செய்யாத நாளுக்கு சம்பளமும் இல்லை என்ற அடிப்படையில் அதை கருத வேண்டும். இந்த போராட்டத்தில் பங்கேற்கும் தினசரி சம்பளம் அல்லது ஒருங்கிணைந்த ஊதியம் பெறும் பகுதி நேர ஊழியர்கள், வேலையில் இருந்து நீக்கப்படக்கூடும். மருத்துவ விடுப்பு தவிர வேறு எந்தவித தற்செயல் விடுப்பையும் (சி.எல்.) அனுமதிக்கக் கூடாது. அரசு விதிமுறைகள் மீறப்படுகிறதா என்பதை கண்காணித்து அரசுக்கு அறிக்கை அனுப்ப வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications