ஒரு நிமிடம் கூட மிஸ்ஸாக கூடாது! எல்லா பள்ளிகளுக்கும் ஸ்டாலின் அதிரடி "ஆர்டர்".. இதை படிங்க முதல்ல
சென்னை: இந்தியாவிற்கே எடுத்திக்காட்டாக தமிழ்நாட்டில் முதல்முறையாக காலை உணவு திட்டம் பள்ளிகளில் தொடங்கப்பட்டு உள்ளது.
இந்த உணவு திட்டம் தற்போது தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளது. ஏனென்றால் இந்தியா முழுக்க மதிய உணவு திட்டம் கொண்டு வருவதற்கு முன்னோடியாக இருந்த மாநிலமே தமிழ்நாடுதான்.
தமிழ்நாட்டை பார்த்துதான் மதிய உணவு திட்டம் மற்ற மாநிலங்களுக்கு கொண்டு வரப்பட்டது. இந்த திட்டத்திலும் கூட தற்போதும் தமிழ்நாடுதான் சிறந்து விளங்கி வருகிறது.
இப்போதும் கூட மதிய உணவில் 5 முட்டை போடும் ஒரே மாநிலம் தமிழ்நாடுதான்.

திட்டம்
முட்டை சாப்பிடாத குழந்தைகளுக்கு மதிய உணவில் வாழைப்பழம் வழங்கும் திட்டமும் தமிழ்நாட்டில்தான் முதலில் கொண்டு வரப்பட்டது. இந்த நிலையில்தான் தமிழ்நாட்டில் முதல்முறையாக காலை உணவு திட்டம் பள்ளிகளில் தொடங்கப்பட்டு உள்ளது. முதற்கட்டமாக 15 மாவட்டங்களில் உள்ள 292 கிராமப் பஞ்சாயத்துகளில் சோதனை முறையில் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. முதல்கட்டமாக மாநகராட்சி, நகராட்சி மற்றும் தொலைதூர கிராமங்களில் உள்ள பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு இந்த உணவு வழங்கப்பட உள்ளது.

காலை உணவு திட்டம்
தேசிய அளவில் தற்போது இந்த திட்டம் கவனிக்கப்பட்டு உள்ளது. வரும் நாட்களில் இந்த திட்டம் அனைத்து வகுப்புகளுக்கும், அனைத்து பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை உள்ளிட்ட அனைத்து மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி மற்றும் மலைப் பகுதிகளில் உள்ள 1,545 அரசு தொடக்கப் பள்ளிகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த திட்டம் மூலம் நேரடியாக ஒரு லட்சத்து 14,095 மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

எப்படி செயல்படுத்தப்படும்?
மொத்தம் ரூ.33.56 கோடியில் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில்தான் இந்த திட்டம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் சில முக்கியமான உத்தரவுகளை பள்ளிகளுக்கு பிறப்பித்து உள்ளார். உணவுகளை காலையில்தான் சமைக்க வேண்டும். அதோடு காலை 7.45 மணிக்குள் சமையல் பணிகள் முடிக்க வேண்டும். மாணவர்கள் காலை உணவு சாப்பிட 30 நிமிடம் முன் கூட்டியே வருவார்கள் என்பதால் உணவு தயாராக இருக்க வேண்டும்.

மெனு உணவு
இதனால் நேரம் தவற கூடாது. மெனுவில் இருக்கும் உணவுகளை மட்டுமே கொடுக்க வேண்டும். அந்த நாளுக்கு கொடுக்கப்பட்டுள்ள உணவு ஆப்ஷனில் இருந்து மட்டுமே தேர்வு செய்து உணவு சமைக்க வேண்டும். உணவுகளை மிகவும் சுத்தமாக சமைக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் சார்பாக பள்ளிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications