நெல்லை பயணிகளுக்கு வீக் எண்டில் அடித்த யோகம்! ஒன்வே ஸ்பெஷல்! தெற்கு ரயில்வே கொடுத்த ஸ்வீட் நியூஸ்
சென்னை: வார இறுதி நாளை முன்னிட்டு சென்னையில் இருந்து சொந்த ஊர் செல்லும் மக்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக சிறப்பு ரயிலை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை சென்ட்ரலில் இருந்து நெல்லைக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட்டுள்ளது. இந்த ரயிலுக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது.
தென் மாவட்டங்களில் இருந்து சென்னையில் பணி நிமித்தமாகவும், கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட காரணங்களுக்காகவும் தினமும் பல ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கிறார்கள். சென்னையில் இருக்கும் வெளி மாவட்ட மக்கள் பலரும் வார இறுதி நாட்களில் சொந்த ஊருக்கு செல்வது வழக்கமாக உள்ளது. இதனால், தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்கள், பேருந்துகளில் பயணிகள் கூட்டம் அலைமோதும்.

சிறப்பு ரயில்: இதற்காக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதேபோல, பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக அவ்வப்போது, சிற்பபு ரயில்களையும் தெற்கு ரயில்வே அறிவித்து வருகிறது. அந்த வகையில் வார இறுதி நாளையொட்டி நாளை சென்னை சென்ட்ரலில் இருந்து திருநெல்வேலிக்கு சிறப்பு ரயிலை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சென்ட்ரல் - நெல்லை: இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- வண்டி எண் 06183 சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து நாளை இரவு 11.20 மணிக்கு நெல்லைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில், சென்னை எழும்பூருக்கு நள்ளிரவு 12.05 மணிக்கு வரும். எழும்பூரில் இருந்து 12.10 மணிக்கு புறப்படும்.
நின்று செல்லும் இடங்கள்: இந்த ரயில், தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், விருத்தாசலம், அரியலூர், ஸ்ரீரங்கம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். திருநெல்வேலிக்கு சனிக்கிழமை காலை 11.20 மணிக்கு வந்து சேரும். இந்த ரயிலுக்கான முன்பதிவு விரைவில் தொடங்கும்.
ரூ.475 கட்டணம்: 16 பெட்டிகளை கொண்ட இந்த ரயில் 16 படுக்கை வசதி கொண்ட பெட்டிகள், 02 இரண்டாம் வகுப்பு பெட்டிகள் கம் லக்கேஜ், பிரேக் வேன் ஆகியவையை கொண்டதாக இருக்கும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயிலுக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது. ஸ்லீப்பர் கோச் உடன் மட்டுமே இயக்கப்படும் ரயிலில் செண்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து நெல்லைக்கு செல்ல ரூ.475 கட்டணமாக நிர்ணையிக்கப்பட்டுள்ளது.
வார இறுதி நாட்களில் தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்களில் டிக்கெட் தீர்ந்து விட்டதால் பேருந்துகளை நாடி செல்ல திட்டமிட்டு இருந்த பயணிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக தெற்கு ரயில்வே சிறப்பு ரயிலை அறிவித்துள்ளது.
-
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்!












Click it and Unblock the Notifications