Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வீடு கட்ட ஆன்லைனில் அனுமதி வாங்க போறீங்களா.. கட்டிட அனுமதி பெற கட்டுப்பாடுகள் என்னென்ன தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆன்லைனில் அனுமதி எல்லாம் ஓகே தான்.. ஆனால் கட்டிட அனுமதி பெறுவதற்கான கட்டுப்பாடுகள் என்னென்ன தெரியுமா?ஆன்லைன் மூலம் கட்டிட அனுமதி பெறும் திட்டத்தின்படி, www.onlineppa.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். ஆனால் சில விதிமீறல்கள் இருப்பது தெரியவந்தால் கண்டிப்பாக அனுமதி உத்தரவு தானாக ரத்து செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். அதை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

3,500 சதுர அடி கட்டிடம் கட்டுவதற்கு சலுகை சான்று பெற மக்கள் எங்கும் செல்ல வேண்டாம் என்றும் வீடுகளுக்கு ஆன்லைனில் உடனடி அனுமதி வழங்கப்படுகிறது என்றும் தமிழக அரசு அண்மையில் அறிவித்தது. இந்த புதிய திட்டத்தை முதல்வர் மு க ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்..

house building real estate

இந்த திட்டப்படி, 2,500 சதுர அடி அளவுள்ள மனையில் 3,500 சதுர அடியில் வீடு கட்ட ஆன்லைன் மூலம் உடனடி அனுமதி பெற முடியும். இதனால் சான்றிதழ் பெற மக்கள் எந்த அலுவலகத்திற்கும் செல்ல தேவையில்லை. என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

பொதுமக்கள் பயன்பெறும் வகையில், இப்புதிய திட்டத்தின் கீழ் அனுமதி பெறும் கட்டிடங்களுக்கும், சாலைக்கும் இடையில் தளர்வு (1.5 மீட்டராக குறைக்கப்பட்டுள்ளது), கூராய்வுக் கட்டணம் (சதுர மீட்டருக்கு ரூ,2), உள்கட்டமைப்பு மற்றும் வசதிகளுக்கான (ஐ மற்றும் ஏ) கட்டணங்கள் (சதுர மீட்டருக்கு ரூ,375) ஆகியவற்றில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் மூலம் கட்டிட அனுமதி பெறும் திட்டத்திற்கு, www.onlineppa.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்தால் தானாகவே அனுமதி கிடைத்துவிடும்.

இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ள நிலையில், திட்ட அனுமதிக்கான கால அளவு 5 ஆண்டுகளாகவும், அதில் கட்டிட விதிமீறல்கள் இருக்கக்கூடாது என்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. கட்டிட வரைபட அனுமதி அளிக்கப்படும் நாளில் இருந்து 5 ஆண்டுகள் மட்டுமே செல்லும் என்று அரசு அறிவித்துள்ளது.

இந்த அனுமதி உத்தரவு, விண்ணப்பதாரர்தான் நிலத்தின் உரிமையாளர் என்பதற்கான உரிமையை உறுதிப்படுத்தாது என்றும் அதை ஆவணமாக பயன்படுத்த இயலாது என்றும் சம்பந்தப்பட்ட நிலம், விவசாய நிலமாக, நிறுவனத்துக்கு சொந்தமானதாக, திறந்தவெளிப் பகுதியாக, கேளிக்கை பயன்பாட்டுப் பகுதியாக அல்லது சாலைக்கு ஒதுக்கப்பட்டதாக இருந்தால், அனுமதி உத்தரவு தானாக ரத்து செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளது.

ஒருங்கிணைந்த கட்டிட விதிகளின்படிதான் கட்டிடங்கள் கட்டப்பட வேண்டும் என்றும் கட்டிடம் கட்டும்போது விதிமீறல் கண்டறியப்பட்டால், உரிய சட்ட விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் விண்ணப்பதாரரின் சுய சான்றிட்ட ஆவணங்கள் மற்றும் கட்டிட வரைபட அனுமதி ஆகியவை அதிகாரிகளால் சரிபார்க்கப்பட்டு, அதில் ஏதாவது தவறு கண்டறியப்பட்டால், விண்ணப்பதாரருக்கு உரிய தண்டனை விதிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

விண்ணப்பத்தில் காட்டப்பட்ட கட்டிட வடிவமைப்பு, அடித்தளம், பயன்படுத்தப்படும் மரம், கான்கிரீட், கம்பி, கழிவுநீர்த்தொட்டி, மழைநீர் சேகரிப்பு அமைப்பு, தண்ணீர் தொட்டி ஆகியவை உரிய விதிகளின்படி அமைக்கப்பட வேண்டும். தெருக்களில் கட்டுமானப்பொருட்கள், கழிவுகளை கொட்டக்கூடாது. கட்டுமானப் பணிகள் முடிந்த 30 நாட்களுக்குள் சொத்து வரிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்றும் அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+