Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

2வது நாள் ஆபரேஷன் மின்னல்.. 48 மணிநேரத்தில் 1,310 ரவுடிகளை தட்டித்தூக்கிய போலீஸ்.. பரபர தமிழ்நாடு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் 2வது நாளாக இன்றும் மாநிலம் முழுவதும் போலீசார் ஆபரேஷன் மின்னல் வேட்டையில் இறங்கினர். கடந்த 48 மணிநேரத்தில் மட்டும் மொத்தம் 1,310 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் ரவுடிகளின் கொட்டத்தை அடக்கும் வகையில் மாநில போலீசார் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்டவர்கள், தலைமறைவாக உள்ள ரவுடிகளை கண்டுபிடிக்க சிறப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்காக ஆபரேஷன் மின்னல் வேட்டையை போலீசார் தொடங்கி உள்ளனர். இதற்கான அறிவிப்பை டிஜிபி சைலேந்திர பாபு அறிவித்தார். இதன்மூலம் மாநிலம் முழுவதும் உள்ள ரவுடிகளை போலீசார் அதிரடியாக கைது செய்து வருகின்றனர்.

டிஜிபி அறிக்கை

டிஜிபி அறிக்கை

அந்த வகையில் தமிழகத்தில் ஆபரேசன் மின்னல் ரவுடி வேட்டை மூலம் கடந்த 48 மணி நேரத்தில் 1,310 ரவுடிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர். இதுதொடர்பாக டிஜிபி சைலேந்திர பாபு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழ்நாட்டில் ரவுடிகளுக்கு எதிரான மின்னல் வேட்டையில் முதல் 24 மணிநேரத்தில் 133 ரவுடிகள் சுற்றி வளைக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் பல ஆண்டுகள் பிடிபடாமல் இருந்த பிரபல ரவுடிகளும் அடங்குவர். சிலர் பிற மாநிலங்களில் கைது செய்யப்பட்டனர்.

1,310 பேர் கைது

1,310 பேர் கைது

அதைத்தொடர்ந்து அடத்த 24 மணிநேரத்தில் நடந்த வேட்டையில் மேலும் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 48 மணிநேரத்தில் நடந்த மின்னல் வேட்டையில் 1,310 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 221 ரவுடிகள் தலைமறைவு குற்றவாளிகள் ஆவார்கள். 110 பேர் மீது பிடி ஆணைகள் நிலுவையில் உள்ளன. இவர்கள் 331 பேரும் பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.

979 பதிவேடு குற்றவாளிகள்

979 பதிவேடு குற்றவாளிகள்

பிடிபட்ட மீதமுள்ள 979 ரவுடிகள் காவல் நிலைய பதிவேடு குற்றவாளிகள். இவர்கள் மீது நன்னடத்தை காவல் துறையினர் நன்னடத்தை உறுதிமொழி பெறப்பட்டது. அதனை மீறும் பட்சத்தில் இவர்கள் கைது செய்யப்பட்டு 6 மாதகாலம் சிறையில் அடைக்கப்படுவார்கள் எனும் எச்சரிக்கையையும் அவர் அறிக்கையில் கூறியுள்ளார்.

அச்சத்தில் ரவுடிகள்

அச்சத்தில் ரவுடிகள்

மேலும் இந்த நடவடிக்கையின்போது ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழகத்தில் தற்போது ஆபரேஷன் ரவுடி வேட்டை 2வது நாளாக நடந்துள்ளது. தொடர்ந்து இந்த போலீஸ் நடவடிக்கை தொடர உள்ளது. இதனை ஒவ்வொரு மாவட்ட எஸ்பிக்களும் திட்டமிட்டு செயல்பட்டு வருகின்றனர். இதனால் மாநிலத்தில் உள்ள ரவுடிகள் அச்சமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+