ஆபரேஷன் திரிசூலம்.. இதுதான் ஒரே வழி.. திமுகவின் அஸ்திவாரத்திலேயே கை வைக்கும் எடப்பாடி? நடக்குமா?
சென்னை: திமுகவின் கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தும் விதமாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முக்கியமான பிளான் ஒன்றை கையில் எடுத்துள்ளாராம். முக்கியமாக காங்கிரஸ் - திமுக இடையே லேசான குழப்பம் உள்ள நிலையில் அதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள விரும்புகிறாராம்.
அதிமுக பொதுச்செயலாளர் சமீபத்தில் பொதுக்கூட்டம் ஒன்றில் மதிப்பிற்குரிய சோனியா காந்தி, மதிப்பிற்குரிய ராகுல் காந்தி என்று குறிப்பிட்டு பேசி இருந்தார். பாஜகவுடன் கூட்டணியை முறித்த நிலையில் அதிமுக பாஜக இடையே கூட்டணியை உருவாக்க எடப்பாடி பழனிசாமி முயல்கிறாரோ என்ற கேள்வி எழுந்தது.

காங்கிரசை இழுக்க திட்டம்: கடந்த வருடம் அதிமுக - பாஜக கூட்டணியை எடப்பாடி பழனிசாமி முறித்தார். இஸ்லாமியர்களே.. நீங்கள் ஆசைப்பட்டது போல.. நீங்கள் எல்லோரும் எதிர்பார்த்தது போலவே அதிமுக தனியாக வந்துவிட்டது. பாஜக கூட்டணியை முறித்துக்கொண்டு அதிமுக தனியாக வந்துவிட்டது. இனி நாங்கள் தனியாகவே கூட்டணி அமைப்போம் என்று எடப்பாடி பழனிசாமி சமீபத்தில் தெரிவித்தார். அப்போதே அவரின் பிளான் தமிழ்நாடு அரசியலில் பலருக்கும் தெரிந்துவிட்டது.
அதன்பின் லோக்சபா தேர்தலிலும் அதிமுக தனித்து போட்டியிட்டது. இஸ்லாமியர்களை தங்கள் பக்கம் இழுக்க எடப்பாடி தீவிரமாக முயல்கிறாரோ.. அதுதான் அவரின் திட்டமோ என்ற கேள்வி எழுந்துள்ளது. இதன் மூலம் காங்கிரஸ் கட்சியை உள்ளே இழுக்கவும் எடப்பாடி திட்டமிட்டு வருவதாக செய்திகள் வருகின்றன.
கூட்டணி மோதல்: தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று காங்கிரஸ் பொதுக்குழு கூட்டத்தில் பேசுகையில் , நாம் சார்ந்து இருக்கப் போகிறோமா? சுயமாக இருக்கப் போகிறோமா? இன்னும் எத்தனை காலம் சார்ந்தே இருக்கப் போகிறோம்? நமது இயக்கத்திற்கு வரலாறு உண்டு; எவ்வளவு காலம் சார்ந்திருப்போம் என்பதற்கு விடை உங்களிடம் உள்ளது
'நாம் எந்த திசையில் செல்லப் போகிறோம்? எவ்வளவு காலம் பிறரை சார்ந்திருக்க முடியும்?' தனியாக போட்டியிடுவது பெரிய குற்றம் இல்லை; தமிழகத்தில் காங்கிரஸ் தனித்து போட்டியிட்டு 20 சதவீதம் வாக்குகளை பெற்றது; கட்சி கட்டமைப்பை வலிமைப்படுத்த வேண்டும், என்று கூறி இருந்தார்.
காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையின் சமீபத்திய பேச்சுக்கள் திமுகவினர் சிலரை அப்செட் ஆக்கி உள்ளதாம். அதன்படி காங்கிரசில் கருப்பு ஆடு இருப்பதாக திமுகவினர் சிலர் நம்புகின்றனர்.
திமுக - காங்கிரஸ் கூட்டணியை முறித்து அதிமுகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்பது தான் காங்கிரசில் சில கருப்பு ஆடுகளுக்கு கொடுக்கப்பட்டுள்ள அசைன்மெண்ட். கூட்டணியை உரசல் இல்லாமல் 5 ஆண்டுகளுக்கும் மேலாக கொண்டு செல்லும் முதலமைச்சரை இழிவுபடுத்தும் விதமாக இப்படி செய்ய கூடாது.
பதிலடி: இந்த விவகாரம் சர்ச்சையான நிலையில், நேற்று இதற்கு விளக்கம் அளித்த செல்வப்பெருந்தகை, நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி புதுச்சேரி உட்பட நாற்பது தொகுதிகளிலும் வெற்றி பெற்றதை கொண்டாடுகிற வகையில், வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கவும், வெற்றிக்காக பாடுபட்ட தலைவர்களுக்கு நன்றி தெரிவிக்கவும், காங்கிரஸ் இயக்கத்தை எப்படி வலிமைப்படுத்துவது என்பது குறித்தும் விவாதிப்பதற்காக நேற்று 11.6.2024 அன்று சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் எனது தலைமையில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. தொடக்கத்தில் ஏழு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில், தமிழக வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கிற முதல் தீர்மானத்தில், 'கடந்த மக்களவை தேர்தலில் மகத்தான வெற்றி பெற கூட்டணிக்கு தலைமையேற்று கடுமையாக உழைத்து பரப்புரை மேற்கொண்ட தி.மு. கழக தலைவர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களுக்கும் மற்றும் இந்தியா கூட்டணி கட்சி தலைவர்களுக்கும், தொண்டர்களுக்கும், வாக்களித்த வாக்காளப் பெருமக்களுக்கும் இப்பொதுக்குழு கூட்டம் மனப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறது" என்று தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதன்மூலம், தமிழகத்தில் மகத்தான வெற்றி பெறுவதற்கு தி.மு. கழக தலைவர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களது பங்களிப்பை தீர்மானத்தின் மூலம் உறுதிபடுத்தப்பட்டது.
இதைத் தொடர்ந்து நான் பேசும் போது, ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு நோக்கம் இருக்கிறது. அதை அடைவதற்கு இலக்கும் இருக்கிறது. அதைப் போல, காங்கிரஸ் கட்சியை வலிமைப்படுத்துவதற்கு நமக்கு கிடைத்த கருத்தியல் தான் காமராஜர் ஆட்சி என்று குறிப்பிட்டேன்., என்றார்.
கூட்டணியில் குழப்பம்: இந்த நிலையில்தான் திமுகவின் கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தும் விதமாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முக்கியமான பிளான் ஒன்றை கையில் எடுத்துள்ளாராம். இதற்காக ஆபரேஷன் திரிசூலம் என்ற திட்டத்தை எடப்பாடி கையில் எடுத்து இருக்கிறாராம்.
அதன்படி காங்கிரஸ் - திமுக கூட்டத்தை உடைக்க இந்த பிளான் எடுக்கப்பட்டு உள்ளதாம். 3 மாதங்களில்.. அதாவது பிப்ரவரிக்கு முன் கூட்டணியை முறிப்பதே இந்த ஆபரேஷன் திரிசூலம் என்கிறார்கள். திமுக- காங்கிரஸ் இடையே கூட்டணியில் பெரிய விரிசல் இல்லை.
சமீபத்தில் கார்த்தி சிதம்பரம் முதல்வர் வேட்பாளர் என்று போஸ்டர் ஒட்டியது, இணையத்தில் கார்த்தி சிதம்பரம் - உதயநிதி ஸ்டாலின் ஆதரவாளர்கள் இடையே கூட இதனால் மோதல் ஏற்பட்டது. இணையத்தில் இவர்களுக்கு இடையே கடுமையான விவாதம் ஏற்பட்டது. அதேபோல் நேற்று செல்வப்பெருந்தகையை முதல்வர் என்றதும் சர்ச்சையானது.
இதெல்லாம் காங்கிரஸ் - திமுக இடையே பிளவை ஏற்படுத்தி உள்ளது. சட்டசபை தேர்தலுக்கு முன் கூட்டணியை முறிக்கலாம் என்ற திட்டத்தில் எடப்பாடி காய் நகர்த்த தொடங்கி உள்ளாராம்.
-
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
கூட்டுறவு வங்கிகள் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி குட் நியூஸ்? உங்க கடன் ரத்தாகுமா? கட்சிகள் மாஸ் பிளான் -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம்












Click it and Unblock the Notifications