கெட்டவங்களுக்கு அள்ளி தந்து கைவிடுவான் ஆண்டவன்- ரஜினி டயலாக்கை முன்வைத்து திமுக மீது ஓபிஎஸ் தாக்கு
சென்னை: கெட்டவர்களுக்கு நிறைய அள்ளிக் கொடுத்தாலும் இறைவன் அவர்களை கைவிட்டுவிடுவான் என ரஜினிகாந்த் பட வசனம் மூலம் திமுக தலைவர் ஸ்டாலினை சாடினார் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம்.
சென்னையில் அதிமுக சார்பில் நடைபெற்ற இஃப்தார் விருந்து நிகழ்ச்சியில் ஓ. பன்னீர்செல்வம் பேசியதாவது:

இஸ்லாமிய சமூகம் மேம்பாட்டுக்காக ஏராளமான நன்மைகளைச் செய்தவர் ஜெயலலிதா வழியில், அவரது பணிகளைத்தான் நாமும் செய்து கொண்டிருக்கிறோம்.
இஸ்லாமியர்களை நேசிப்பதில் ஜெயலலிதாவின் ஆட்சிக்கு நிகரே இல்லை. பொய்யைக் கூட உண்மை என்று நம்பி விடுகின்ற சூழல் சில நேரங்களில் நடந்து விடுகிறது.
என்றுமே தாகம் தீர்க்கும் தண்ணீர் அ.தி.மு.கதான் என 9 சட்டமன்ற இடைத்தேர்தல்களில் மக்கள் நிரூபித்துள்ளனர். ஜெயலலிதாவின் ஆட்சிதான் தமிழகத்தில் நடைபெற வேண்டும் என்பது தமிழக மக்களின் நிலைப்பாடு.
தமிழ்நாட்டை ஆளலாம் என்று சிலர் கனவு கண்டுகொண்டிருக்கிறார்கள். அவர்களின் ஆசைக்கனவு ஒருபோதும் நிறைவேறாது. நல்லவர்களை இறைவன் சோதிப்பார் ஆனால் கைவிடமாட்டார், கெட்டவர்களுக்கு நிறைய கொடுப்பார் ஆனால் கைவிட்டுவிடுவார். ஆட்சியைப் பிடிக்க நினைக்கும் சிலரின் எண்ணம் ஒருபோதும் ஈடேறாது.
இவ்வாறு ஓ. பன்னீர்செல்வம் கூறினார். இந்த நிகழ்ச்சியில் அதிமுக ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான முதல்வர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கவில்லை.
-
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி












Click it and Unblock the Notifications