சென்னை வந்த திரௌபதி முர்மு.. தனித்தனியாக சந்தித்து ஆதரவு தெரிவித்த ஓபிஎஸ், இபிஎஸ்
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் திரௌபதி முர்முவை வரவேற்க நட்சத்திர ஹோட்டலுக்கு எடப்பாடி பழனிச்சாமியும், பன்னீர் செல்வமும் வருகை தந்துள்ளனர்.
சென்னை: ஒற்றை தலைமை விவகாரத்தில் ஓபிஎஸ்- இபிஎஸ் தனித்தனியாக பிரிந்துள்ள நிலையில், ஜனாதிபதி வேட்பாளர் திரௌபதி முர்முவை தனித்தனியாக சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.
Recommended Video
குடியரசுத் தலைவர் தேர்தல் வரும் 18ஆம் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் சார்பில் திரௌபதி முர்மு போட்டியிடுகிறார் எதிர்கட்சிகளின் சார்பில் யஷ்வந்த் சின்காவும் போட்டியிடுகின்றனர். தேர்தலில் போட்டியிடும் 2 வேட்பாளர்களும் நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களுக்கும் சென்று எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனர்.

யஷ்வந்த் சின்கா இரு தினங்களுக்கு முன்பு சென்னை வந்து திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டிய நிலையில், பாஜக கூட்டணி கட்சி வேட்பாளர் திரௌபதி முர்மு இன்று சென்னை வந்துள்ளார்.
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர் செல்வம் என இரு பிரிவாக அதிமுக பிரிந்துள்ளது. கடந்த 23ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் ஓபிஎஸ் ஒப்புதல் அளித்த தீர்மானங்கள் நிராகரிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக ஓபிஎஸ் ஒருங்கிணைப்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான தீர்மானத்திற்கு பொதுக்குழு ஒப்புதல் அளிக்காத காரணத்தால் அந்த பதவி தற்போது இல்லையென இபிஎஸ் தரப்பு கூறி வருகிறது.
எனவே ஓபிஎஸ் தற்போது அதிமுக பொருளாளர் பதவியில் இருப்பதாகவும், எடப்பாடி பழனிசாமி தலைமை நிலைய செயலாளர் பதவியில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் பாஜக குடியரசு தலைவர் வேட்பாளராக திரௌபதி முர்மு அறிவிக்கப்பட்டுள்ளார்.
கடந்த மாதம் 25 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்தார் திரௌபதி முர்மு. அந்த நிகழ்ச்சியில் பங்கேற்க அதிமுக தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதனையேற்று ஓபிஎஸ் டெல்லி சென்றார். அதே போல இபிஎஸ் தரப்பில் தம்பிதுரை கலந்து கொண்டார்.
ஒற்றை தலைமை விவகாரத்தில் ஓபிஎஸ்- இபிஎஸ் தனித்தனியாக பிரிந்துள்ள நிலையில், ஜனாதிபதி வேட்பாளர் திரௌபதி முர்முவை வரவேற்கும் நிகழ்ச்சியில் இருவரும் நேருக்கு நேர் சந்திப்பார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.
சென்னை வந்துள்ள திரௌபதி முர்முவை வரவேற்க நட்சத்திர ஹோட்டலுக்கு எடப்பாடி பழனிச்சாமி வந்த நிலையில் அவரைத் தொடர்ந்து ஓ.பன்னீர் செல்வமும் வந்தார். இருவரும் தனித்தனி அறையில் தங்கியிருந்தனர். ஜனாதிபதி வேட்பாளர் திரௌபதி முர்முவை இருவரும் தனித்தனியாக சந்தித்து ஆதரவை தெரிவித்தனர்
-
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!











Click it and Unblock the Notifications