இரட்டை இலை வேட்பாளருக்கே ஆதரவு.. ஓபிஎஸ் - இபிஎஸ் இணைந்து போட்டியிட வேண்டும்- ஜான் பாண்டியன்
சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இரட்டை இலை எங்கு இருக்கிறதோ அங்குதான் ஆதரவு கொடுக்க முடியும். அதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம். எந்த மாற்றமும் இல்லை என்று தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான் பாண்டியன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறினார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவின் இரு அணிகளும் போட்டியிடுவதாக அறிவித்துள்ளன. இதனால், தேர்தல் களத்தில் அனல் பறக்க தொடங்கியுள்ளது.
அதிமுக கூட்டணி கட்சித்தலைவர்களை சந்தித்து ஓ பன்னீர் செல்வம் ஆதரவு கோரி வருகிறார். மறுபக்கம் கூட்டணி கட்சித்தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டும் வேலையில் எடப்பாடி பழனிசாமி அணியினரும் ஈடுபட்டுள்ளனர்.

ஜான் பாண்டியன் பேட்டி
அந்த வகையில், தமிழக மக்கள் முன்னேற்ற கழகத் தலைவர் ஜான் பாண்டியனுடன் இபிஎஸ் அணியை சேர்ந்த அதிமுக மூத்த நிர்வாகிகள் செங்கோட்டையன், ஜெயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோர் சந்தித்து பேசினர். இந்த சந்திப்புக்கு பிறகு ஜான் பாண்டியன் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- எடப்பாடி பழனிசாமி அணியை சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் சந்தித்தார்கள். தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் ஏற்கனவே தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் உள்ளது.

ஓ பன்னீர் செல்வம் என்னை சந்திக்கிறார்
எனவே ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் முழு ஆதரவு அளிக்கிறது. யாரை அவர்கள் நிறுத்துகிறார்களோ அவர்களுக்கு முழுமையாக ஒத்துழைப்பு கொடுத்து வெற்றி பெறுவதற்கு பாடுபடுவோம். ஓ பன்னீர் செல்வமும் என்னை சந்திக்க இருக்கிறார். ஓபிஎஸ்- இபிஎஸ் இடையே நிலவும் பிரச்சினைக்குள் நான் செல்ல விரும்பவில்லை. அவர்க்ள் இருவரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்றே விரும்புகிறேன். அதிமுகவிற்கு ஆதரவு கேட்டுள்ளார்கள்.. நான் கொடுத்துள்ளேன்.

பாஜக போட்டியிட வாய்ப்பு இல்லை
ஓ பன்னீர் செல்வம் இன்று மாலை என்னை சந்திக்க இருக்கிறார். அவரிடம் கலந்துரையாடி இரண்டு பேரையும் ஒன்றாக சேர்ப்பதற்கு நான் முயற்சி செய்யலாம் என்று இருக்கிறேன். அதுதான் என்னுடைய பணியாக இருக்கும். இருவரும் பிரிந்து இருக்கக் கூடாது என்பதுதான் எங்களுடைய ஆசை.. மக்களுடைய ஆசை.. எனவே அவரிடம் கேட்டு தெரிந்து கொண்டு.. ஏன் ஒன்றாக நிற்கலாமே என சொல்லப்போகிறேன். பாஜக போட்டியிடுவதற்கு வாய்ப்பு இல்லை.

இரட்டை இலை எங்கு இருக்கிறதோ
அதிமுகதான் நிற்கும் என்பது நம்பிக்கை. பாஜக போட்டியிட்டால் அப்போது பார்ப்போம். அதிமுகவில் பொதுக்குழு யாரை முடிவு செய்கிறதோ அதுதான் அதிமுக. அதன் அடிப்படையில்தான் நாம் முடிவு எடுக்க முடியும். ஓ பன்னீர் செல்வம் வருவதாக சொல்லியிருக்கிறார். பேசி பார்க்கிறேன். இரட்டை இலை எங்கு இருக்கிறதோ அங்குதான் ஆதரவு கொடுக்க முடியும். அதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம். எந்த மாற்றமும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications