சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கொரோனாவை குறைக்க நாங்கள் இதையெல்லாம் செய்தோம்.. ஆனா இப்போ?.. புகார்களை லிஸ்ட் போட்ட ஓ.பி.எஸ்

Google Oneindia Tamil News

சென்னை: கொரோனாவை கட்டுப்படுத்த பாதிப்பு அதிகமுள்ள பகுதியில் கடும் தடுப்பு நடவடிக்கையை தமிழக அரசு எடுக்க வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.

12-01-2022 அன்றைய நிலவரப்படி தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17,934 என்றிருக்கையில், சென்னை மாவட்டத்தில் மட்டும் 7,372 பேர் பாதிக்கப்பட்டிருக்கிற நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகளில் கிருமி நாசினி தெளித்தல், பிளீச்சிங் பவுடர் போடுதல் போன்ற நிலையான செயல்பாட்டு முறைகளை அரசு நிர்வாகம் மேற்கொள்வதில்லை என்றும், பரிசோதனை முடிவுகள் வருவதில் நீண்ட காலதாமதமாகிறது என்றும் புகார்கள் வந்து கொண்டிருக்கின்றன என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கடத்திய கப்பல்..சிக்கிய இந்தியர்கள்.. அனைவரும் பாதுகாப்பு..ஐ.நா குட் நியூஸ் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கடத்திய கப்பல்..சிக்கிய இந்தியர்கள்.. அனைவரும் பாதுகாப்பு..ஐ.நா குட் நியூஸ்

 சென்னையில் அதிக பாதிப்பு

சென்னையில் அதிக பாதிப்பு

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 39,637 தெருக்களில், 5,000க்கும் மேற்பட்ட தெருக்களில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கின்றனர். தினசரி அரசு வெளியிடும் தகவலின்படி தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. கொரோனா தொற்று நோயினால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

 எங்களின் ஆட்சியில் செய்தோம்

எங்களின் ஆட்சியில் செய்தோம்

அதிமுக ஆட்சிக் காலத்தில், நிலையான செயல்பாட்டு முறைகளின்படி எந்தெந்த தெருக்களில் எல்லாம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் இருந்தார்களோ அந்தந்த தெருக்களில் எல்லாம் கிருமி நாசினி தெளிக்கப்படுவதும், இதுதவிர பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு அருகில் உள்ள வீடுகளின் வாயில்களில் பிளீச்சிங் பவுடர் போடுவதும், தண்ணீர் தேங்கிய இடங்களில் கிருமி நாசினி தெளிப்பதும், கபசுர குடிநீர் அளிப்பதும், மாத்திரைகள் வழங்குவதும் நடைமுறையில் இருந்து வந்தது என்று அவர் தெரிவித்துள்ளார்.

 தடுப்பு பணிகள் எங்கே?

தடுப்பு பணிகள் எங்கே?

இது மட்டுமல்லாமல், அரசு அலுவலகங்களில் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமையன்று கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெற்றது. அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளும் கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்யப்பட்டன. இது நோய்த் தொற்றை குறைக்க ஓரளவுக்கு உதவியது. ஆனால், இந்த ஆண்டு துவக்கத்திலிருந்தே கொரோனா நோய்த் தொற்றின் தாக்கம் அதிகரித்துக் கொண்டேயிருக்கின்ற சூழ்நிலையில், கிருமி நாசினி தெளிப்பது, பிளீச்சிங் பவுடர் போடுவது போன்ற பணிகள் எங்கும் நடைபெறவில்லை என்ற புகார்கள் மக்களிடமிருந்து வந்த வண்ணம் உள்ளன என்றும் ஓ.பன்னீர்செல்வம் புகார் கூறினார்.

2020-ம் ஆண்டை பாருங்கள்..

2020-ம் ஆண்டை பாருங்கள்..

2020ம் ஆண்டில் நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்கள். இருந்தாலும், கிருமி நாசினி தெளிக்கும் பணியும், பிளீச்சிங் பவுடர் போடும் பணியும் நடைபெற்றன. இப்பொழுது நோய்த் தொற்றினால் பாதிக்கப்படும் பெரும்பாலானோர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்படுகிற நிலையில், கிருமி நாசினி தெளிப்பது, பிளீச்சிங் பவுடர் போடுவது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் அறிவுரை வழங்கினார்.

 தொற்று எண்ணிக்கையை அதிகரிக்கும்

தொற்று எண்ணிக்கையை அதிகரிக்கும்

இது மட்டுமல்லாமல், உள்ளாட்சி அமைப்புகளால் மேற்கொள்ளப்படும் கொரோனா பரிசோதனைக்கான முடிவுகள் வருவதற்கு இரண்டு மூன்று நாட்கள் ஆகின்றது. இந்த இடைப்பட்ட காலத்தில், தொற்று இருக்காது என்ற எண்ணத்தில் பரிசோதனை மேற்கொண்டவர்கள் அனைவரும் தனித்து இருக்காத நிலையில், முடிவுகள் வேறு மாதிரியாக இருக்கும்பட்சத்தில், அவர்களுடன் தொடர்பில் உள்ளவர்களுக்கும் தொற்று உருவாக வாய்ப்புள்ளது இது தொற்று எண்ணிக்கையை அதிகரிக்கும் என்றும் அவர் கூறினார்.

அரசு விழிப்பு வேண்டும்

அரசு விழிப்பு வேண்டும்

அதே சமயத்தில் தனியார் மருத்துவமனைகள் சில மணி நேரங்களில் முடிவுகளை தெரிவிக்கின்றன. முடிவுகள் தாமதமாக அறிவிக்கப்படுவது மட்டுமல்லாமல், கொரோனா பாதிக்கப்படாதவர்களுக்கு அதற்கான சான்றிதழ் தேவைப்படுவோருக்கு வழங்கப்படுவதில்லை என்றும் கூறப்படுகிறது. தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டிருக்கின்ற தருணத்தில் அரசு விழிப்புடன் இருந்து கிருமி நாசினி தெளிப்பது, பிளீச்சிங் பவுடர் போடுவது போன்ற பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என்றும், கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் பரிசோதனை முடிவுகளை உடன் அறிவிக்க வேண்டுமென்றும், தேவைப்படுவோருக்கு கொரோனா தொற்று இருக்கிறதா, இல்லையா என்பதற்கான சான்றிதழ் வழங்கப்பட வேண்டுமென்று மக்கள் எதிர்பார்க்கின்றனர் என்றும் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

Recommended Video

    ராமநாதபுரம் மருத்துவ கல்லூரியில் AIIMS கல்லூரிக்கான இடங்கள் சேர்க்கை இந்த ஆண்டு தொடங்கப்படும் - மா.சுப்ரமணியன்
     முதல்வர் தனி கவனம் செலுத்தணும்

    முதல்வர் தனி கவனம் செலுத்தணும்

    எனவே, முதல்வர் இதில் தனிக் கவனம் செலுத்தி, கொரோனாவை பாதிப்பை ஓரளவு கட்டுப்படுத்தும் வகையில், பாதிக்கப்பட்ட பகுதிகளில் கிருமி நாசினி தெளிப்பது, பிளீச்சிங் பவுடர் போடுவது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளவும், பரிசோதனை மேற்கொண்டவர்களுக்கு அதன் முடிவுகளை விரைந்து வழங்கவும், தேவைப்படுவோருக்கு சான்றிதழ் வழங்கவும் வழிவகை செய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

    English summary
    AIADMK coordinator O. Panneerselvam has demanded that the Tamil Nadu government take strict preventive measures in the most affected areas to control the corona
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X