ஒரு முறை 2 முறை அல்ல... 14 முறை முல்லை பெரியாறுக்கு சென்றிருக்கிறேன்... திமுக அரசுக்கு OPS பதில்..!
சென்னை: முல்லை பெரியாறு அணை என்பது தன் வாழ்வில் பின்னிப் பிணைந்த ஒன்று என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
அதிமுக ஆட்சிக்காலத்தில் அமைச்சர் என்கிற முறையில் 14 முறை முல்லை பெரியாறு அணை பகுதிக்கு சென்று ஆய்வு நடத்தியுள்ளதாக அவர் விளக்கம் அளித்துள்ளார்.
முல்லை பெரியாறு அணையை ஒரு முறையாவது ஓ.பி.எஸ். சென்று பார்வையிட்டிருப்பாரா என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கேள்வி எழுப்பியிருந்த நிலையில் அதற்கு பதில் கொடுத்துள்ளார் அவர்.

துரைமுருகன் கேள்வி
தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நேற்று முன் தினம் முல்லை பெரியாறு அணையை நேரில் ஆய்வு செய்தார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தேனியில் இருக்கும் ஓ.பன்னீர்செல்வம் முல்லை பெரியாறு அணைக்கு ஒரு முறையாவது நேரில் சென்று ஆய்வு செய்திருப்பாரா என்றும் முல்லை பெரியாறு அணை குறித்து பேச அதிமுகவுக்கு உரிமையே இல்லை எனவும் சாடியிருந்தார்.

ஓ.பி.எஸ். பதில்
அமைச்சர் துரைமுருகனின் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்துள்ள ஓ.பன்னீர்செல்வம், 2002 முதல் 2006 வரையிலான காலத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் என்ற முறையிலும், 2013 மற்றும் 2014-ம் ஆண்டுகளிலும், இதேபோல் 2015 முதல் 2021 வரை தேனி மாவட்ட அமைச்சர் என்கிற முறையிலும் முல்லை பெரியாறு அணைப்பகுதிக்கு சென்று அங்கு ஆய்வு நடத்திய அனுபவம் தனக்கு உண்டு எனக் கூறியுள்ளார்.

14 முறை ஆய்வு
இதுமட்டுமல்லாமல் முல்லை பெரியாறு அணையை கட்டிய கர்னல் ஜான் பென்னி குயிக் வாழ்ந்த இல்லத்திற்கும் சென்று இல்லத்தின் பழமையான வடிவம் மாறாமல் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டதாகவும் ஓ.பன்னீர்செல்வம் கூறியிருக்கிறார். இதுவரை 14 முறை முல்லை பெரியாறு அணைப்பகுதிக்கு சென்றிருப்பதாகவும், அந்த அணையுடன் தனது வாழ்க்கை பின்னி பிணைந்தது எனவும் ஓ.பி.எஸ். கூறியிருக்கிறார்.

விவசாயிகள் சந்தேகம்
முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் விவசாயிகளின் சந்தேகத்தை போக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் தமிழக அரசுக்கு இருப்பதாக அவர் தெரிவித்திருக்கிறார். முல்லை பெரியாறு அணையிலிருந்து கேரளப் பகுதிக்கு கடந்த வாரம் தண்ணீர் திறக்கப்பட்டதற்கு தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை , ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட்












Click it and Unblock the Notifications