Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திமுகவில் “போஸ்டிங்”.. காய் நகர்த்தும் பன்னீர் அணியின் அழகு.. “சிக்கல்” என தவிர்க்கும் அறிவாலயம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நமது அம்மாவின் முன்னாள் ஆசிரியரும் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளருமான மருது அழகுராஜ் திமுகவுக்கு தாவ காய் நகர்த்தி வருவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இடையிலான மோதல் தொடர்ந்து பூதாகரமாகி வருகிறது. ஜூலை 11 ஆம் தேதி பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.

அதற்கு முன்பாக நமது அம்மாவின் ஆசிரியர் பொறுப்பிலிருந்து விலகினார் மருது அழகுராஜ். இதனை தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு ஆதரவு தெரிவித்தும் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகவும் தொடர்ந்து பேசி வருகிறார்.

பொதுக்குழு

பொதுக்குழு

எடப்பாடி பழனிசாமிக்கும் கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் நேரடி தொடர்பு இருப்பதாகவும் பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்தார் மருது அழகுராஜ். இந்த நிலையில் ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்துக்கு பிறகு ஓ.பன்னீர்செல்வம் மகன்கள், ஆதரவாளர்களை நீக்கினார் எடப்பாடி பழனிசாமி.

மருது அழகுராஜ்

மருது அழகுராஜ்

அப்போது ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளராக இருந்த நமது அம்மா முன்னாள் ஆசிரியர் மருது அழகுராஜையும் கட்சியில் நீக்குவதாக அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி. இந்த நிலையில் ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பு வழங்கி இருக்கிறது.

அணி தாவல்

அணி தாவல்

இந்த தீர்ப்பை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியால் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், அவரது மகன்கள், ஆதரவாளர்கள் உட்பட பலரும் அதிமுகவிலேயே தொடர்கின்றனர். மருது அழகுராஜும் அதிமுக உறுப்பினராக தொடர்கிறார். ஓ.பன்னீர்செல்வத்துக்கு சாதகமான சூழல் மாறிவருவதால் எடப்பாடி அணியிலிருந்து பலர் ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு தாவி வருகின்றனர்.

அழகுராஜ் கடிதம்

அழகுராஜ் கடிதம்

இன்றுகூட உசிலம்பட்டி தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. ஐய்யப்பன் தனது ஆதரவாளர்களுடன் சென்னையில் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து ஆதரவு தெரிவித்தார். இந்த நிலையில் அதிமுகவின் தலைமையை தொண்டர்கள் மட்டுமே தேர்வு செய்ய வேண்டும் என்றும் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அனைவரு ஒன்றுசேரீர் என்றும் தொண்டர்களுக்கு மருது அழகுராஜ் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

திமுகவுக்கு தூது

திமுகவுக்கு தூது

இதற்கிடையே, "திமுகவின் யோசனைகளின் அடிப்படையிலேயே மருது அழகுராஜ் இயங்கி வருவதாகவே அதிமுக தலைகளுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. திமுகவில் இணைந்து கொள்கை பரப்பு பிரிவில் பதவியை கைப்பற்ற தொடர் பேச்சுவார்த்தையை நடத்தி இருக்கிறாராம் மருது அழகுராஜ்.

அறிவாலயம் அட்வைஸ்

அறிவாலயம் அட்வைஸ்

இந்த விபரம் திமுக தலைமைக்குப் சென்று இருப்பதாகவும் ஆனால், அவரது முந்தைய ரெக்கார்டுகள் சரியில்லை என்று கருதும் அறிவாலயம், மருது அழகுராஜை கட்சியில் சேர்ப்பதை அடுத்து பார்த்துக்கொள்ளலாம் என்றும், தற்போதைக்கு தொடர்பில் இருந்தால் மட்டும் போதும்" என்று உத்தரவிட்டுள்ளதாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+