உச்சநீதிமன்றத்தை நாடிய எடப்பாடி பழனிசாமி.. என்னவானாலும் இரட்டை இலை எங்களுக்கே.. புகழேந்தி பதில்!
இரட்டை இலை சின்னத்தை ஓபிஎஸ்-க்கு ஒதுக்குவதே நியாயமாக இருக்கும் என்று புகழேந்தி தெரிவித்துள்ளார்.
சென்னை: அதிமுகவின் இடைக்காலப் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்குமாறு உத்தரவிட வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி, இதன் தீர்ப்பு எங்களுக்கே சாதகமாக வரும் என்றும், இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் எங்கள் தரப்புக்கே ஒதுக்கும் என்று தெரிவித்துள்ளார்.
உச்சநீதிமன்றத்தில் அதிமுக பொதுக்குழு வழக்கில் விரைவில் தீர்ப்பு வெளியாக உள்ளது. ஆனால் அதற்குள் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அதிமுகவின் உட்கட்சி பூசலை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளது.
எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வம் அணிகளின் தரப்பில் இரு வேட்பாளர்களை களமிறக்க ஆயத்தமாகி வருகின்றனர். இதனால் இரட்டை இலை சின்னம் முடங்கும் சூழல் உருவாகலாம் என்று பார்க்கப்படுகிறது.

இபிஎஸ் மனு
இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், அதிமுகவின் இடைக்காலப் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்குமாறு உத்தரவிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

கையொப்பத்தை ஏற்க மறுப்பு
உச்சநீதிமன்றத்தில் இன்று நீதிபதி மகேஷ்வரி தினேஷ் அமர்விடம் எடப்பாடி பழனிசாமி தரப்பில், வழக்கறிஞர் அரிமா சுந்தரம் முறையீடு செய்தார். அதில், அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் என்ற முறையில் எனது கையொப்பத்தை ஏற்க தேர்தல் ஆணையம் மறுக்கிறது. அதிமுகவின் இடைக்காலப் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்
இதையடுத்து, ஓ. பன்னீர்செல்வம் தரப்புக்கு உங்களது கோரிக்கையை தெரிவித்துவிட்டீர்களா என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இதற்கு தகவல்களை பகிர்ந்து கொண்டதாக பழனிசாமி தரப்பில் பதில் அளிக்கப்பட்டது. இதையடுத்து, வரும் 30ம் தேதி முறையீடு செய்ய உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. எடப்பாடி பழனிசாமியின் திடீர் மனு, ஓபிஎஸ் தரப்புக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புகழேந்தி பேட்டி
இதுகுறித்து ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி கூறுகையில், பொதுக்குழு வழக்கின் தீர்ப்புக்கு இன்னும் சில நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. ஆனால் திடீரென இரட்டை இலை சின்னத்திற்காக மனு கொடுத்தால், நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளாது. ஏற்கனவே இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை எடப்பாடி பழனிசாமி ராஜினாமா செய்துள்ளார். பதவியை ராஜினாமா செய்வது ஒன்றும் சாதாரணமான விஷயமல்ல. இதுவரை தேர்தல் ஆணைய பதிவேட்டில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்றே இருக்கிறது.

தீர்ப்பு யாருக்கு சாதகம்?
அப்படி இருக்கும் போது, ஒருங்கிணைப்பாளரே முழு செயல்திறன் கொண்டவராக இருக்க முடியும். அதனால் இரட்டை இலை சின்னம் ஓபிஎஸ்-க்கு ஒதுக்குவதே நியாயமாக இருக்க முடியும். நிச்சயம் இரட்டை இலை எங்களுக்கு கிடைக்கும். தீர்ப்பு எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக வராது. அதற்கு வாய்ப்புகளே இல்லை. இந்த தீர்ப்பு எங்களுக்கு சாதகமாகவே இருக்கும். நிச்சயம் ஓபிஎஸ் தரப்பில் வேட்பாளர் நிறுத்தப்படுவார். பாஜக மதில் மேல் பூனையாக இருக்கிறது என்று தெரிவித்தார்.

ஓபிஎஸ் தயார்
தொடர்ந்து வேட்பாளர் அறிவிப்பு எப்போது என்ற கேள்விக்கு, ஓபிஎஸ் ஆதரவு மாவட்டச் செயலாளர்கள் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். கூட்டணி கட்சிகளின் ஆதரவும் எங்களுக்கு இருக்கிறது. பாஜகவின் நிலைப்பாடு அறிந்த பின், நிச்சயம் அடுத்தக்கட்ட நடவடிக்கை உடனடியாக மேற்கொள்ளப்படும். எடப்பாடி பழனிசாமி இதுவரை வேட்பாளரை அறிவிக்காமல் இருப்பதற்கு என்ன காரணம்? இரட்டை இலை விவகாரத்தில் தேர்தல் ஆணையம் தான் முடிவெடுக்க முடியும் என்று தெரிவித்தார்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
அந்த முடிவை எடுத்துவிட்டாரா? எடப்பாடி தரப்பிடம் அதிமுக அலுவலக சாவியை கொடுத்த சிவி சண்முகம்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications