OPS Dharmayutham: மனம் வெறுத்துப்போய் பாஜக உறவை முறித்த ஓபிஎஸ்.. தர்மயுத்தம் ஃப்ளாஷ்பேக்!
சென்னை: பாஜகவுடனான உறவு முறிந்துவிட்டதாக ஓ.பன்னீர்செல்வம் அணி அறிவித்துள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு தர்மயுத்தம் நடத்தினார் ஓபிஎஸ். அப்போது முதல் பாஜகவின் ஆதரவுடன் செயல்பட்டு வந்த ஓபிஎஸ், இப்போது மனம் வெறுத்துப்போய் பாஜக கூட்டணியில் இருந்து கழன்றுகொண்டுள்ளார்.
2016-ல் ஜெயலலிதா மறைந்த போது உடனடியாக முதல்வராக பொறுப்பேற்றார் ஓ. பன்னீர்செல்வம். எல்லாமும் சுமூகமாக போய்க் கொண்டிருந்த சூழ்நிலையில் 2017 பிப்ரவரி 5 ஆம் தேதி அரங்கேறியது தர்மயுத்தம் படலத்துக்கான ஆரம்ப அத்தியாயம். அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் புதிய முதல்வராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார்.

தர்மயுத்தம்
இந்த எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு சசிகலாவை முதல்வராக தேர்வு செய்து அறிமுகப்படுத்தியவரே ஓபிஎஸ்தான். ஆனாலும் முதல்வர் பதவி எனும் அதிகாரம் கையை விட்டுப் போகிறதே என்கிற விரக்தியின் உச்சத்துக்குப் போய் யார் யாரிடமோ திரைமறைவு ஆலோசனை எல்லாம் நடத்தினார் ஓபிஎஸ்.
உச்சமாக 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி 7 ஆம் தேதி பின்னிரவில் ஜெயலலிதாவின் சமாதியில் அமர்ந்து தியானம் என்ற பெயரில் முதலாவது தர்மயுத்தத்தை தொடங்கினார் ஓபிஎஸ். அங்கே தியானத்தில் அமர்ந்தபடியே ஜெயலலிதாவின் ஆன்மாவுடனும் பேசிவிட்டதாகவும் அறிவித்தார் ஓபிஎஸ். சசிகலா குடும்பத்தின் நெருக்கடியால் நான் ராஜினாமா செய்தேன்; ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருக்கிறது; இதற்காக விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என்று கொந்தளித்தார்.
ஓபிஎஸ் செயல்பாடு
அப்போது ஓபிஎஸ்-க்கு அதிமுக தொண்டர்கள் அமோக ஆதரவு அளித்தனர். இதனாலேயே எம்.எல்.ஏக்களை தக்க வைக்க கூவத்தூருக்கு போய் முகாமிட்டார் சசிகலா. ஆனால் சசிகலா விரும்பியது நிறைவேறாமல் சிறைவாசத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார். சிறைக்கு போவதற்கு முன்னர், சசிகலாவும் ஜெயலலிதா சமாதிக்குப் போய் மூன்று முறை ஓங்கி அடித்து சபதம் எடுத்துவிட்டுப் போனார்.
பின்னர் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக நம்பிக்கை வாக்கெடுப்பில் எதிர்த்து வாக்களித்தார் ஓபிஎஸ். ஆர்கே நகரில் தினகரனை வீழ்த்த பிரசாரம் செய்தார். அப்படியும் ஓபிஎஸ்-ன் தர்மயுத்தம் முழு வெற்றி பெறாமலேயே அதிமுகவில் மீண்டும் இணைந்து கொண்டார். தம்மை நம்பி வந்தவர்களுக்கு எதுவுமே செய்யாமல் மகனுக்கு மட்டும் லோக்சபா தொகுதி சீட்டை வாங்கிக்கொண்டார் ஓபிஎஸ்.
பாஜக துணையுடன்
பாஜக தலையீட்டால் அதிமுக ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்று கட்சியை வழிநடத்தி வந்தனர். ஓபிஎஸ்சுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்பட்டாலும் அதிமுகவில் எடப்பாடி பழனிசாமியின் கையே ஓங்கி இருந்தது.
இந்நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதற்கு ஓ.பன்னீர்செல்வம் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். இதற்கு எதிராக போட்ட வழக்குகளில் ஓபிஎஸ் தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகிறார். அதே சமயம் அதிமுக பெயரில் செயல்பட தடை விதிக்கப்பட்டதால் ஓபிஎஸ் தற்போது அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு என்ற பெயரில் தனி அணியாக செயல்பட்டு வருகிறார்.
பாஜக கூட்டணியில்
இந்த சூழலில் கடந்த 2024 மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணியில் சேர்ந்து ராமநாதபுரம் தொகுதியில் சுயேட்சையாக பலாப்பழம் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். ஆனாலும் அதிமுகவை பின்னுக்கு தள்ளி இரண்டாம் இடம் பிடித்தார். மக்களவை தேர்தல் தோல்விக்கு பிறகு அதிமுகவில் பிரிந்துள்ள அணிகளை இணைக்க வேண்டும் என்று பாஜக முடிவு செய்தது. இதற்காக, பாஜக பல்வேறு வகைகளிலும் முயற்சிகள் மேற்கொண்டது. ஆனால் எடப்பாடி பழனிசாமி தரப்பு அதிமுக அணிகள் இணைப்பு சாத்தியம் இல்லை என்பதிலும், ஓபிஎஸ்ஸை ஏற்க மாட்டோம் என்பதிலும் பிடிவாதமாக இருந்து வருகிறது.
ஆனாலும் பாஜகவுடன் நெருக்கம் காட்டி வந்த ஓபிஎஸ்க்கு சமீபகால நிகழ்வுகள் கடுமையான அதிருப்தியை உருவாக்கின. கடந்த மார்ச் மாதம் திடீரென உள்துறை அமைச்சர் அமித் ஷாவை எடப்பாடி பழனிசாமி டெல்லியில் சந்தித்து பேசினார். இதனைத் தொடர்ந்து அதிகாரப்பூர்வமாக கூட்டணி அறிவித்தது. அமித்ஷா 2 முறை தமிழ்நாடு வந்த போதும் அவரை சந்திக்க ஓபிஎஸ்சுக்கு அனுமதி கிடைக்கவில்லை. இதை ஓபிஎஸ் வெளிப்படையாகவே கூறியிருந்தார்.
மனம் வெறுத்துப்போன ஓபிஸ்
பிரதமர் மோடி தமிழ்நாடு வந்த போதும் ஓபிஎஸ்சுக்கு அனுமதி வழங்கவில்லை. இதனால், பாஜக தம் மீது பாராமுகம் காட்டுவதை உணர்ந்து கொண்ட ஓபிஎஸ், இன்று பாஜக தலைமையிலான கூட்டணியில் இருந்து விலகும் முடிவை எடுத்துள்ளார். அன்றைக்கு பாஜக பிரமுகர்களின் துணையோடு தர்மயுத்தம் நடத்தி, அதன் பின்னர் அவர்களின் ஆதரவுடனே துணை முதல்வர் பதவியையும் பெற்றுக்கொண்டார். இன்றைக்கு பாஜகவின் தொடர் புறக்கணிப்பால் மனம் வெதும்பி இந்த முடிவை எடுத்துள்ளார்.
-
பாம்புக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் என்ன வித்தியாசம்? நாஞ்சில் சம்பத் ஒற்றை கேள்விக்கு அதிமுக நறுக் -
தவெக சார்பாக களமிறங்கும் அன்புச்செழியன் மகன்.. மதுரை மத்திய தொகுதியில் விவேக் அன்புச்செழியன்? -
வேல்முருகனின் மெகா பிளான் இதுவா? வன்னியர் சமூக வாக்குகளை வளைக்க பார்க்கிறாரா? -
தவெக மாய உலகத்தில் இருக்கிறது.. கிராமப்புறங்களில் காத்து வாங்கும் கட்சி! ஷாக் ரிப்போர்ட் -
Election Exclusive: அணில் மோட் ஆக்டிவேட் பண்ணுங்க.. நண்பா நண்பீஸ் ரெடியாகுங்க! எலக்சனுக்கு முன் விஜய் போடும் மெகா ப்ளான் -
பாஜக கூட ஓகே.. தவெகதான் பிரச்சனை.. செல்வப்பெருந்தகை சரமாரி குற்றச்சாட்டு -
2026 தேர்தலில் புதிய சக்திகள்! 5 முனை போட்டிக்கு வழிவகுத்த ஜூனியர்ஸ்! யாருக்கு சாதகம்? பாதகம்? -
புஸ்சி ஆனந்த் ஒழிக.. கோஷமிட்ட தவெக நிர்வாகிகள்.. புதுவையில் போட்டியிட சீட் வழங்காததால் ஆதங்கம் -
சொதப்பும் ஸ்டாலின்.. திமுகவுக்கு எதிராக திரும்பும் வன்னியர் வாக்கு! தலித் வாக்குகளை பிரிக்கும் விஜய் -
தவெகவில் இணைந்த அன்றே சீட் கொடுத்த விஜய்.. பாஜகவில் இருந்து தாவி உடனே வேட்பாளர் ஆன சாய் சரவணன்! -
“ரூ.5 கோடி கேட்குறாங்க.. இதுதான் நீங்க சொன்ன மாற்றமா விஜய்?” நிர்வாகிகள் கொந்தளிப்பு -
புதுவையில் தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடு.. மாஜி பாஜக அமைச்சருக்கு சீட் கொடுத்த விஜய்.. முழு லிஸ்ட்












Click it and Unblock the Notifications