வெறும் 10% பேரே சரியான விடையை சொல்லியிருக்காங்க.. படத்தில் எத்தனை டாட்கள் உள்ளன? முடிஞ்சா கண்டுபிடிங்க
சென்னை: ஆப்டிகல் இல்யூஷன் புதிர் படத்தில் ஒரு வெள்ளைத்தாளில் வரிசையாக புள்ளிகள் வைக்கப்பட்டுள்ளன. இதில் மொத்தம் எத்தனை புள்ளிகள் உள்ளன என்பதை 5 செகண்டில் கண்டுபிடிக்க வேண்டும். அதுதான் உங்களுக்கான டாஸ்க்..
ஆப்டிகல் இல்யூஷன் எனப்படும் ஒளியியல் மாயை மற்றும் புதிர் படங்கள் மூளைக்கு சவால் விடுப்பவை. நம் மூளையை கசக்கி பிழிய வைத்து விடையை கண்டுபிடிப்பதற்குள் நமது புத்திக்கூர்மையை சோதித்து பார்த்துவிடும். எப்போதும் பரபரப்பாக இருக்கும் நெட்டிசன்கள் ஓய்வு நேரத்தில் இணையத்தில் உலவும் போது கொஞ்சம் ரிலாக்ஸ் ஆக மூளைக்கு வேலை கொடுக்கும் வகையிலான கேம்களை விளையாட வேண்டும் என்று தோன்றும் போது இந்த புதிர் மற்றும் இல்யூஷன் படங்கள் நல்ல பொழுதுபோக்காக அவர்களுக்கு உள்ளது.

இதனால் இணையத்தில் ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் அதிகம் பகிரப்படுகின்றன. செஸ் கேம் எப்படி மூளையை கசக்கி பிழியவைப்பதோடு எப்படி நல்ல பொழுதுபோக்கு விளையாட்டாக உள்ளதோ அதேபோல இல்யூஷன் படங்களும் நெட்டிசன்களின் மூளைக்கு ஓரளவு வேலை வைத்துவிடுகிறது.
சிறு வயதில் படித்த கணக்குகளை நினைவுபடுத்தி பார்க்கும் விதமாகவும் நம் நண்பர்களை விட விரைவாக நம்மால் விடையை கண்டுபிடிக்க முடிகிறதா என ஆரோக்கியமான போட்டி உணர்வையும் இந்த இல்யூஷன் படங்கள் ஏற்படுத்துகின்றன என்று சொல்லலாம். சரி அதெல்லாம் இருக்கட்டும் இங்கே விஷயத்திற்கு வாருங்கள் என நீங்கள் நினைப்பது புரிகிறது.
இன்று பார்க்க இருக்கும் ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வழக்கமாக நாம் பார்க்கும் வகையிலானதுதான். இங்கே கொடுக்கப்பட்டு இருக்கும் படத்தை நன்றாக உற்று பாருங்கள்.. இந்த படத்தில் ஒரு வெள்ளை காகிதத்தில் வரிசையாக சில புள்ளிகள் (டாட்கள்) உள்ளன. இதில் மொத்தம் எத்தனை புள்ளிகள் இருக்கின்றன என்று கண்டுபிடிப்பதே உங்களுக்கான டாஸ்க்.. அதிலும் வெறும் 5 செகண்டில் கண்டுபிடிக்க வேண்டும்..
என்ன சவாலுக்கு ரெடியாக இருக்கீங்களா.. உங்களுக்கான நேரம் தொடங்கியது.. 1, 2, 3, 4, 5.. ஓகே டைம் ஓவர்.. படத்திற்கான சரியான விடையை உங்களில் பலரும் கண்டுபிடித்து இருப்பீர்கள் என்று நம்புகிறோம். இதில் டாட்களை எண்ணுவது எல்லாம் ஒரு கஷ்டமான காரியமா? இதெல்லாம் ரொம்பவே எளிதான விஷயம்தான்..
உடனே கண்டுபிடித்து விடலாம் என நினைக்காதீர்கள்..அங்கேதான் ஒரு சிறிய ட்ரிக்ஸ் உள்ளது. படத்தில் எத்தனை டாட்கள் உள்ளது என்பதை கமெண்டில் பதிவிடுங்கள்..யார் முதலில் சரியான விடையை கண்டுபிடிக்கிறார்கள் என்று பார்க்கலாம்..












Click it and Unblock the Notifications