Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆப்டிகல் இல்யூஷன் படம்: மரத்தில் எத்தனை 'முயல்கள்' இருக்கு? 5 செகண்ட் டைம்.. கண்டுபிடிங்க பாஸ்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மரத்தில் சில முயல்கள் இருக்கின்றன. 5 செகண்டில் அதில் இருக்கும் முயல்கள் எத்தனை என்பதை சரியாக கண்டுபிடித்தால் நீங்கள் கிரேட் தான்.

தற்போது சமூக வலைத்தளங்களில் டிரெண்டிங் வீடியோ, சுவாரசிய வீடியோ, டிரெண்டிங் செய்திகளுக்கு அதிக வரவேற்பு உள்ளது.

அலுவலக நேரங்களை தவிர்த்து பிற நேரங்களில் இதுபோன்ற சுவாரசிய டிரெண்டிங் வீடியோக்களை பார்த்து பலரும் தங்களை ரிலாக்ஸ் செய்து வருகின்றனர்.

அதிகம் பரவும் படங்கள்

அதிகம் பரவும் படங்கள்

அந்த வரிசையில் தான் தற்போது ஆப்டிகல் இல்யூஷன் என சொல்லப்படும் ஒளி மாயை புகைப்படங்களையும் பலரும் பார்ப்பதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர். இது போன்ற படங்கள் பார்ப்பவர்களின் கண்களை குழப்பி மூளைக்கு வேலை கொடுக்கும் என்பதால் இணையத்தில் அதிகம் பரவி வருகின்றன. மூளையை கசக்கி பிழிந்து யோசிக்க வைக்கும் அளவுக்கு ஒரு சில படங்கள் நமது கவனிப்புத்திறனை சோதித்து பார்க்கும் என்பதில் சந்தேகமில்லை.

ஆழ்ந்து பார்த்தால்..

ஆழ்ந்து பார்த்தால்..

இது போன்ற ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் முதலில் பார்த்தால் ஒரு மாதிரியாகவும்.. ஆழ்ந்து பார்த்தால் வேறு மாதிரியாகவும் இருக்கும். உதாரணத்திற்கு சாலைகளில் காணல் நீர் தோன்றுவது போல... இதனால் இத்தகைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களுக்கு இணையத்தில் எப்போதுமே தனி வரவேற்பு உண்டு என்று சொல்லலாம். அந்த வகையில் இன்று ட்விட்டரில் ஒரு ஆப்டிகல் இல்யூஷன் படம் டிரெண்ட் ஆகி வருகிறது.

சரியாக எத்தனை முயல்கள் இருக்கிறது?

சரியாக எத்தனை முயல்கள் இருக்கிறது?

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மரம் போன்ற வடிவில் ஒரு படம் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் உள்ள கிளைகளில் சில முயல்கள் இருப்பது போல பார்க்கும் போது தெரிகிறது அப்படித்தானே.. ஆம்.. இதில் இன்று நாம் கண்டுபிடிக்க வேண்டியது என்னவென்றால் அதில் எத்தனை முயல்கள் இருக்கிறது என்பதை தான்.. முயல்கள் வடிவில் எண்ணற்றவை இருப்பது போல் நம் கண்களை குழப்புகிறது... ஆனால் சரியாக எத்தனை முயல்கள் இருக்கிறது என்பதை கண்டுபிடிப்பதே இன்றைய சவால்..

5 செகண்ட் டைம்

5 செகண்ட் டைம்

அதுவும் 5 செகண்டில் இந்த படத்தில் சரியாக எத்தனை முயல்கள் இருக்கிறது என்பதை நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும். அப்படி கண்டுபிடித்து விட்டீர்கள் என்றால் நீங்கள் அதிபுத்திசாலி தான்.. உங்களுக்கு கழுகுக்கண் பார்வை தான்.. சரி 5 செகண்ட் டைம் எடுத்துக்கொள்ளுங்கள்.. கண்டுபிடிக்க முடிகிறதா? எத்தனை முயல்கள் என்று... 5 முயல்கள் தெரிகிறது என்றால் தவறு.. 4 முயல்கள் தெரிகிறது என்றாலும் தவறு தான்...

முயல்களை கண்டுபிடிக்க டிப்ஸ்

முயல்களை கண்டுபிடிக்க டிப்ஸ்

சரி படத்தை மீண்டும் நன்கு கவனியுங்கள்.. ஒரே கோணத்தில் பார்க்காமல் பல்வேறு கோணங்களில் உற்று கவனியுங்கள் சரியாக எத்தனை முயல்கள் இருக்கிறது என்பது தெரியும்.. அப்படியும் குழப்புகிறது என்றால்.. ஒரு டிப்ஸ்.. முயல்களின் கண்கள் மற்றும் முக தோற்றத்தை மட்டும் பார்க்காதீர்கள்... முயலின் முழு உருவமும் தெரிவது போல இருப்பதை மட்டும் கவனித்து தேர்ந்தெடுங்கள்.. இப்போது உங்களுக்கு முயல் எத்தனை இருக்கிறது என்று தெரிந்திருக்கும்...

படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது

படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது

அப்படியும் குழப்புகிறது என்றால் மேல் உள்ள படத்தில் எத்தனை முயல்கள் இருக்கிறது என்பது கொடுக்கப்பட்டுள்ளது. பார்த்து தெரிந்துகொள்ளலாம். முயல்கள் நம் மூளையை எப்படி குழப்பியது பார்த்தீர்களா...

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+