ஒரே அறிவிப்பு.. 40% இந்திய ஊழியர்கள் பணிநீக்கம்.. Oracle எடுத்த முடிவுக்கு பின்னால் முக்கிய காரணம்..!!
ஆரக்கிள் நிறுவனம் உலகின் மிகப்பெரிய கிளவுட் மற்றும் டேட்டாபேஸ் சேவை வழங்கும் முக்கியமான நிறுவனமாகும். ஏஐ தொழில்நுட்பம் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் ஆரக்கிள் தற்போது OpenAI, Meta, Nvidia மற்றும் xAI போன்ற AI நிறுவனங்களின் தேவைகளை பூர்த்தி செய்ய பெரிய பெரிய டேட்டா சென்டர்களை உருவாக்கி வருகிறது.
இதற்காக 2026ஆம் ஆண்டில் மட்டும் ஆரக்கிள் நிறுவனம் சுமார் 50 பில்லியன் டாலர் வரையில் நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது. இந்த நிதியை கடன் மற்றும் பங்கு விற்பனை அல்லது அடமானம் வைப்பதன் மூலம் நிதி திரட்ட முடிவு செய்துள்ளது.

இப்படி செயற்கை நுண்ணறிவு (AI) முதலீடுகள் வேகமாக உயர்ந்தி வரும் ஆரக்கிள் இத்துறையில் பெரும் வர்த்தகத்தையும், வருமானத்தையும் பெற வேண்டும் என முடிவு செய்துள்ளது. இதற்காக மற்ற திட்டங்களையும், செயல்பாடுகளையும் தற்காலிகமாக நிறுத்த முடிவு செய்துள்ள நிலையில், பெரிய அளவிலான பணிநீக்கங்கள் உருவாகி வருகின்றன. இந்த பணிநீக்கங்கள் மூலம் செலவுகளையும் குறைக்க முடியும் என்பதால் கண்களை மூடிக்கொண்டு பணிநீக்கம் செய்யப்படுகிறது.
ஆரக்கிள் நிறுவனத்தின் உலகளாவிய மறுசீரமைப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, இந்தியாவில் மட்டும் சுமார் 12,000 ஊழியர்கள் தங்களுடைய வேலை இழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உலகம் முழுவதும் மொத்தம் 30,000 பேருக்கு மேல் பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளர்.
அதில் இந்தியாவில் மட்டும் கிட்டதட்ட 12000 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ள நிலையில், இந்தியாவின் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கையும் 30000 ஆக உள்ளது மூலம் ஒரே நாளில் சுமார் 40 சதவீத ஊழியர்கள் வெளியேற்றப்பட்டு உள்ளனர். இந்தியா, Oracle நிறுவனத்தின் இரண்டாவது பெரிய பணியாளர் கொண்ட நாடாகவும், அமெரிக்காவுக்கு வெளியே மிகப்பெரிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு (R&D) மையமாகவும் உள்ளது.
ஆரக்கிள் நிறுவனம் தற்போது செயற்கை நுண்ணறிவு துறையில் 300-360 பில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தங்கள் மற்றும் திட்டங்களை இந்நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.
இந்த திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்றால் ஆண்டுதோறும் 50 பில்லியன் டாலர் அளவிலான மூலதனம் தேவை, இதேபோல் 100 பில்லியன் டாலக் கடன் சுமையும் ஏற்கனவே உருவாகியுள்ளது. இதனால், நிறுவனத்தின் செலவுகளை கட்டுப்படுத்தும் நோக்கில் பணிநீக்கங்கள் தவிர்க்க முடியாததாக மாறியுள்ளது.
ஆரக்கில் நிறுவனம் தற்போது கையில் எடுத்துள்ள மறுசீரமைப்பு நடவடிக்கைகள் மூலம் சுமார் 2.1 பில்லியன் டாலர் தொகையை சேமிக்க உள்ளது.
-
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது?












Click it and Unblock the Notifications