சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுவதை உறுதி செய்வதே நமது முதல் பணி.. அடித்து சொன்ன முதல்வர் ஸ்டாலின்
சென்னை: திமுகவின் சட்ட போராட்டத்தால் கடந்த 3 ஆண்டுகளில் மருத்துவத்தில் 15,066 ஓபிசி இடங்கள் கிடைத்தன. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுவதை உறுதி செய்வதே நமது முதல் பணி என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். தமக்கான பங்கை பெற மத்திய அரசால் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் இந்த பணி நடக்க நாம் ஒன்றிணைவோம் என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.
தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று தனது எக்ஸ் தளத்தில் ஒரு பதிவை போட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- திமுகவின் சட்ட போராட்டத்தால் கடந்த 3 ஆண்டுகளில் மருத்துவத்தில் 15,066 ஓபிசி இடங்கள் கிடைத்தன. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுவதை உறுதி செய்வதே நமது உடனடி பணி.

ஓபிசி சமூகங்களின் விகிதாச்சாரத்தை அடையாளம் காண சாதிவாரி கணக்கெடுப்பு தேவை. சமூக நீதியை நிலைநாட்ட சாதிவாரி கணக்கெடுப்பு தேவை. தமக்கான பங்கை பெற மத்திய அரசால் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். இந்த பணி விரைவாக நடைபெற நாம் ஒன்றிணைவோம். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் ட்விட் பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications